அண்மையில் யாழ் இந்துக்கல்லூரி மாணவர்களின் 'ஓராயம்'அமைப்பு இணைய வழி நடாத்திய நாடகக் கலைஞர்களான பாலேந்திரா & ஆனந்தராணியுடனான கலந்துரையாடல்:  https://www.youtube.com/watch?v=inrsetfdoig

இந்நிகழ்வில் பாலேந்திராவும் , ஆனந்தராணி பாலேந்திராவும் தமது மொறட்டுவைப்பல்கலைக்கழக நாடக அனுபவங்களை விபரிக்கின்றனர். இவ்வகையில் ஆவணச்சிறப்பு மிக்கதொரு நிகழ்வு. இந்நிகழ்வில் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் பாலேந்திராவின் நாடகப்பட்டறையில் புடம் போடப்பட்ட பட்டதாரிகளான  குணசிங்கம் (ஆஸ்திரேலியா), தயாபரன் (ஐக்கிய இராச்சியம்) & செழியன் (நோர்வே) ஆகியோரும் தமது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டிருக்கின்றார்கள். நிகழ்வினை ஒருங்கிணைத்து நடத்தியிருப்பவர் மொறட்டுவைப் பல்கலைக்கழகப் பட்டதாரியான பிறேமச்சந்திரா. 

ஓராயம் அமைப்பின் இணையத்தள முகவரி: https://oraayam.org/