பாடகி பி.சுசீலாவின் சிறந்த பாடல்களிலொன்று இந்தப்பாடல். வரிகளை உணர்வு பூர்வமாகப் பாடியிருப்பார். கவிஞர் கண்ணதாசன் தன் மொழியாற்றல் காரணமாக, மனத்தை மயக்கும் எளிய , இனிய சொற்களைக்கொண்டு சிறப்பான பாடல்களைத் தருவதில் வல்லவர். இப்பாடலும் அத்தகையதொன்று.

ஜெமினியின் 'வாழ்க்கைப்படகு' படப்பாடல்கள் அனைத்துமே இனியவை; சிறந்தவை. அவற்றிலிதுவுமொன்று. நடிகை தேவிகாவியின் இவ்விதமான நடனப்பாடல்கள் அதிகமில்லை. அவள் அவன் மீதான காதலைச்சொல்வதுடன், காதலின் சிறப்பையும் எடுத்துரைக்கின்றாள். அவன் மீதான காதலை வெளிப்படுத்துகையில் தேவிகாவின் அவன் மீதான காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் முகபாவங்கள் அற்புதம். இப்பாடலில் தேவிகாவின் நடன அசைவுகளும் உள்ளங்கவர்பவை.

படம்: வாழ்க்கைப்படகு
பாடியவர்: பி.சுசீலா
வரிகள்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ்.வி - ராமமூர்த்தி
https://www.youtube.com/watch?v=LQ-8LoS5zJ0


பாடல் வரிகள் முழுமையாக:

உன்னைத்தான் நான் அறிவேன்
மன்னவனை யார் அறிவார்-என்
உள்ளமென்னும் மாளிகையில்
உன்னையன்றி யார் வருவார்!... (உன்னைத்)

யாரிடத்தில் கேட்டு வந்தோம்
யார் சொல்லிக் காதல் கொண்டோம்
நாயகனின் விதி வழியே
நாமிருவர் சேர்ந்து வந்தோம்
ஒன்றையே நினைத்து வந்தோம்
ஒன்றாகக் கலந்து வந்தோம்!... (உன்னைத்)

காதலித்தல் பாபமென்றால்
கண்களும் பாபமன்றோ
கண்களே பாபமென்றால்
பெண்மையே பாபமன்றோ
பெண்மையே பாபமென்றால்
மன்னவரின் தாய் யாரோ?... (உன்னைத்)