பாடகி கல்யாணி மேனன் தனது எண்பதாவது வயதில் மறைந்த செய்தி அறிந்தேன். இவர் ஒரு கர்நாடகப் பாடகர்.  திரைப்படங்களிலும் பாடியுள்ளார். குறைந்த அளவிலேயே இவர் திரைப்படங்களில் பாடியுள்ளபோதும் ,இவர் பாடிய பாடல்களில் பல நெஞ்சில் நிலைத்து நிற்பவை. குறிப்பாக  கவிஞர் கண்ணதாசன் எழுத்தில், எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் , பாடகர் ஜெயச்சந்திரனுடன் பாடிய 'நீ வருவாய் என நான் இருந்தேன்' எனக்கு மிகவும் பிடித்த பாடல்களிலொன்று. நான் நினைக்கின்றேன் அந்த ஒரு படத்தில் மட்டுமே இவர் மெல்லிசை மன்னருடன் இணைந்து பணியாற்றியிருக்கின்றாரென்று.

இவர் இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான ராஜிவ் மேனனின் தாயார். இவர் அதிகமாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுடனேயே இணைந்து பணியாற்றியுள்ளார். காதலன், முத்து, விண்ணைத்தாண்டி வருவாயா, அலைபாயுதே, 96 ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.  'அலைபாயுதே' திரைப்படத்தில் வரும் 'அலைபாயுதே' பாடலையும் பாடியவர் இவரே.

இவர் இசைஞானியுடனும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளார். அத்திரைப்படம்: 'நல்லதொரு குடும்பம்'.  இவர் நினைவாக 'சுஜாதா' திரைப்படத்தில் இடம் பெற்ற 'நீ வருவாய் என நான் நினைத்தேன்' பாடலைப் பகிர்ந்துகொள்கின்றேன்.
https://www.youtube.com/watch?v=xcWWi2ZEUJk