அண்மையில் மறைந்த பழம்பெரும் நடிகை ஜெயந்தி என்றதும் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் அவர் நடித்த திரைப்படங்கள்தாம் நினைவுக்கு வரும். ஆரம்பத்தில் நகைச்சுவை வேடங்களில் அவரைப்பாவித்த பாலச்சந்தர் பின்னர் 'இரு கோடுகள்', 'வெள்ளி விழா' போன்ற படங்களில் கதாநாயகியாக அவரைப் பயன்படுத்தினார். 'இரு கோடுக'ளில் அவரது நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும், அவரை நினைத்ததும் முதலில் நினைவுக்கு வரும் பாடல்கள் இரண்டு. ஒன்று 'இரு கோடுகள்' திரைப்படத்தில் இடம் பெறும் 'புன்னகை மன்னன் பூவிழிக்கண்ணன்' , 'வெள்ளி விழா'வில் வரும் 'காதோடு தான் நான் பேசுவேன்'. இரண்டிலும் அவர் ஜெமினி கணேசனுடன் நடித்திருப்பார்.

இவர்  சுமார் 500 படங்கள் வரையில் பன்மொழிப்படங்களில் நடித்திருப்பதாக அறியப்படுகின்றது. கன்னடத்தில் 'கன்னடத்து எம்ஜிஆர்' ராஜ்குமாருடன் 30 படங்களிலும் கதாநாயகியாக இவர் நடித்திருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் நினைவாக ஒரு  பாடல்:  'வெள்ளி விழா'வில் இடம் பெறும் 'காதோடு நான் பேசுவேன்' : https://www.youtube.com/watch?v=xYD5qqBqjKw