என்னை இங்கு, திரு சிவாஜி கணேசன் அவர்களின 20வது நினைவு நாளை ஒட்டிய இந்த நிகழ்வில்,சிலவார்த்தைகள் பகிர அழைத்த பேராசிரியர்,திரு பாலசுகுமார் அவர்களுக்கு மிகவும் நன்றி. அத்துடன் இங்கு வந்திருக்கும் பேச்சாளர்கள், பார்வையாளர்களுக்கும் எனது வணக்கங்கள்.பல மொழிகளில் பல தரப்பட்ட பாத்திரங்களில் நடித்த திரு சிவாஜி அவர்களைப் பேசுவதற்குச் சில மணித்தியாலங்களிலோ சில நாட்களோ போதாது. எத்தனையோ தளத்தில் வைத்து ஆய்வு செய்யப்பட வேண்டியவர் எங்கள் நடிகர் திலகம். இங்கு எனது பார்வை ஒரு திரைப்படப் பட்டதாரியின் கண்ணோட்டமாகும்.

அவர், சமூகத்தைப் பிரதிபலிக்கும் பல தரப்பட்ட பாத்திரங்கள் மட்டுமல்லாது. இதிகாச காலப் பாத்திரங்களான கர்ணன், பரதன், அத்துடன் நாரதர். முருகன் என்பதோடு மட்டுமல்லாது சாக்கரட்டிஸ்,ஓதெல்லோ போன்றவர்களையும் எங்கள் கண்முன் நிறுத்தியவர்.. நான் திரைப் படப் பட்டதரியாகப் படிப்பதற்குச் சென்ற காலத்தில்,பல பிரசித்தி பெற்ற படங்களும் அதையொட்டிய நாவல்களும். திரைப் படப் படிப்பு சார்ந்த செமினார்களுக்கு எடுக்கப் படுவது வழக்கம்.சத்தியத்ரேயின் 'பதர் பாஞ்சாலி' என்ற இந்திய கலைப் படம் தொடக்கம்,'சிட்டிசன் கேன்' என்ற மிகவும் பிரசித்தமான அமெரிக்கப் படம்வரை நாங்கள் பார்க்கவேண்டும். கலந்துரையாடவேண்டும். கட்டுரைகள் எழுதவேண்டும், செமினார் செய்யவேண்டும். அப்படியானவற்றில், 1899ல் ஜோசப் கொன்றாட் என்பரால் எழுதப்பட்ட 'ஹார்ட் ஒவ் டார்க்னெஸ்' என்ற நாவலை ஒட்டிய செமினாரும் ஒன்று. அது, 'அப்போகலிப்ஸ் நவ்' என்றொரு படமாக 1979ல் பிரான்ஸிஸ் போர்ட் கொப்பலா என்பரால் எடுக்கப் பட்டிருந்தது.இது ஒரு போர் சார்ந்த உளவியல சிக்கல்களைக் காட்டும்  படம்.

'ஹார்ட் ஒவ் டார்க்னெஸ் என்ற நாவல்,ஆபிரிக்கக் கண்டத்து கொங்கோ என்ற நாட்டையும்.மக்களையும் அந்நாட்டு நதியையும் மையமாக வைத்துக் கதை எழுதப் பட்டிருந்தாலும்.அதையொட்டி எடுத்த 'அப்போகலிப்ஸ் நவ்'; என்ற படம் அமெரிக்காரால் நடத்தப்பட்ட வியட்நாம் போரை(1960) மையமாக வைத்து எடுத்த படம்.வியட்னாம் போர்க் குற்றவாளியான,அமெரிக்க விசேட இராணுவப் பிரிவைச் சேர்ந்த கொலனல் கேர்ட்~; என்பவரைத் தேடி, தென் வியட்நாமிலிருந்து கம்போடியா வரையாக அமெரிக்கக கப்டன் பென்ஜமின் வில்லார்ட் என்பவரின் நதிப் பிரயாணத்தை ஒட்டி எடுக்கப் பட்டிருந்தது. மார்லன் ப்ராண்டோ அமெரிக்க கப்டனால் தேடப்படும் கொலன் கேர்ட்~; என்ற பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்திற்குப் பல விமர்சனங்கள் வந்ததுபோல் பொருளாதாரமும்; வந்து குவிந்தன.உலகத்திலேயே சிறந்த படங்களிலொன்றாகக் கணிக்கப் பட்டிருக்கிறது.இதில் நடித்த பிரபலங்களில் ஒருத்தர் மார்லன் ப்ராண்டோ(1924-2004) அவர்களின் நடிப்பு சரித்திரம் பற்றி மாணவர்களாகிய நாங்கள் பேசினோம். அவர் அக்கால கட்டத்தில் உலகத்திலேயே மிகவும் பிரபல நடிகர்களாகக் கணிக்கப் பட்ட ஒருத்தர். அத்துடன் இந்தியத் திரைப் படவுலகில் பிரபலமாகவிருந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனை அவரின் நடிப்புடன் ஒப்பிட்டுப் பல விமர்சனங்கங்கள் வந்திருந்தன. காரணம் அவர்களின் இருவருக்கும் இருந்த நடிப்புத் திறமையின் ஒற்றுமையாகும். இருவரும் பல தரப்பட்ட படங்களில் முற்றிலும் வித்தியாசமான பாத்திரங்களில் நடித்து, ரசிகர்களிதும் விமர்சகர்களினதும் உலகம் பரந்த விதத்தில் பாராட்டுக்களைப் பெற்றவர்கள்.

மார்லன் ப்ராண்டோ 40 படங்களில் மட்டும் நடித்தவர் அமெரிக்காவின் கடந்த நூற்றாண்டின் 100 முக்கிய பேர்வளிகளில்,ஆறு நடிகர்கர்களில் அவரும் ஒருத்தர். அவர் நடித்த 'கோட்பாதர்' கிடைத்த வருமானம் மாதிரி இதுவரைக்கும் எந்தப் படத்திற்கும் கிடைக்கவில்லை.. 'மியுட்டினி ஒன் த பௌன்டி (1962),'லாஸ்ட் ராங்கோவின் பாரிஸ்' அத்துடன் 1972ன்,ஒஸ்கார் நொமினேரட் படமான,மரியோ புN~hஸ் என்பவரின் 1969ல் எழுதிய நாவலைத் தழுவிய படமான 'த கோட் பாதர்' என்பன பலரால் பேசப்பட்ட காலமது. மார்லண் ப்ராண்டோவும் 1950ம் ஆண்டுகளில் மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு நடிகர்.அவரின்,'த ஸ்ரீட் கார் நேம்ட் டிசாயர்' என்ற 1951 ஆண்டு படத்தின் மூலம் மக்கள் பேசுமொழியைத் திரைப் படத்தில் பிரபலமாக்கியவர்.

சிவாஜி கணேசன் அவர்களை உலக மயப்படுத்திய நடிகராக எடுத்த எடுப்பிலேயே அறிமுகப் படுத்திய படம் பராசக்தி. திரு.மு.கருணாநிதி அவர்களால் எழுதப் பட்ட தமிழ்ப்படம். கிருஷ்ணன்-பஞ்சு என்பர்களின் டைரக்ஸனில் உருவான படம்.பாவலர் பாலசுந்தரம் அவர்களின் நாடகத்தைத் தழுவிய படம். 1952 தீவாபளி அன்று வெளியடப்பட்டது. இந்தப் படத்தில் பல கருத்துக்களால் இந்தப் படத்தைத் தடை செய்யவேண்டும் என்ற குரலும் தமிழ் நாட்டில் ஒருத்தது. அந்த எதிர்ப்புக்களைத் தாண்டி 175 நாட்கள் ஓடியது. அதைத் தொடர்ந்து சிவாஜியின்,'அந்த நாள்' என்ற படம் ஜாவர் சீதாராமனால் எழுதப் பட்டு,-1954.ஏ.வி.எம் மெய்யப்பன்- எஸ் பாலசந்தர்- அவர்களால் எடுக்கப் பட்டது. ஆடல் பாடல் இல்லாத முதல் தமிழ்ப் படம்-ஒரு துப்பறியும் கதை.-ஒரு ஜப்பானிய துப்பறியும் கதையை ஒட்டியது.அக்கிரா குரொசோவா என்பரால் 'டிரக்ரால்-ரா~;மொன்' என்ற பெயரில் 1950 எடுத்த ஒரு உளவியல் சார்ந்த படம். இந்தப் படம், இரண்டாவது இந்திய தேசிய திரைப்படவிழாவில் 1954ம் ஆண்டு இரண்டாம் இடத்தைப் பெற்றது. 2013ம் ஆண்டில் சி ஏன்.என். செய்தி 18 பதிவில் உலகத்தில் வெளியான சிறந்த 100 திரைப் படங்களில் ஒன்று என்று பாராட்டப் பட்டது.அப்படியாகத் திரையலகத்திற்கு வந்த சிலவருடங்களிலேயே அகில உலகத்திற்கும் தெரிந்த நடிகனானவர் சிவாஜி அவர்கள். கிழக்கிலோ மேற்கிலோ இப்படி ஒரு நடிப்பு பேராண்மை இதுவரை பிறக்கவில்லை.

மேற்குலத் திரைப் படத்துறையில் மார்லன்பிராண்டோ போன்றவர்களின் நடிப்பு பழையகால சினிமா பேச்சுவழக்கு மட்டுமல்ல நடிப்பு வகையையம் மாற்றியதுபோல் சிவாஜியின் வரவும் தமிழ்த் திரைப்படவுலகில் பல மாற்றங்களைச் செய்தது என்பது மிகையாகாது. படக்கதைக்கேற்ற வசனங்களை, மக்கள் மொழியைத் திரைப்படத்தில் புகுத்திய நடிகர்களில் மார்லண் ப்ராண்டாவை யாரும் மறக்க முடியாது. மார்லன் பிராண்டோவைச் சிவாஜியுடன் ஒப்பட்டப் பேசியவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராகவிருந்து சி.என்.அண்ணாதுரை என்ற நினைக்கிறேன். இதற்குக் காரணம் அவர்களின் இருவரும் நடிப்புத் திறமை என்று பாராட்டப் பட்டது. திரைப் படத்துறையில் நடிப்பு பாரம்பரியம் பற்றி சில வரைவிலக்கணங்களைத் திரைப் படப் பட்டப் படிப்பு படிக்கும் நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

1.மெய்ஸ்னர் டெக்னிக்-இது உண்மைபூர்வமாக நடிப்பது.அறிவு உத்திகளை உள்நுழைக்காமல் மன உணர்வைப் பிரதிபலிப்பது.

2.ஸ்ரானிஸ்லாவாக்கிஸ் ஸிஸ்டம்.என்பது இதில் ஒரு நடிகன், தனக்குக் கொடுக்கப் பட்ட பாத்திரமாகவே முற்றுமுழுதாக 'அவதாரம்' எடுத்ததுபோல் நடிப்பது.

3.லீ ஸ்ராஸ்பேர்க் முறை என்பது,தன் நடிப்பின் ஆழத்தைத் தனக்குக்கொடுத்த பாத்திரத்தில் காட்டுவது. அதாவது,தனக்கு இப்படி ஒரு வாழ்க்கை இருந்தால் எப்படியிருக்கும் என்று நடித்துப் பிரதிபலிப்பது.

4.அத்லாந்திக் செயற்பாட்டு அழகியல் முறையில் நடித்துக் காட்டுவது.உன் சிந்தனையையை முன்னெடுக்காமல் நடிப்பை முன்னெடுத்து நடி.அடுத்தது, நடிக்கமுதல் உனது சிந்தனையை முன்னெடு, நடிப்புக்குள் உள்படுத்திக்கொள் என்பதாகும்.

முக்கிய நடிகர்கள் யாரும் நெறிப்படுத்துபவர் சொல்வதற்கேற்ப நடிப்பது கிடையாது. அவர்கள் கதையையும் வசனங்களையும், சினிமா அமைப்பு பற்றிய விளக்கங்களையும்கவனமாகப்படித்துத்தான் தங்கள் நடிப்பைத் தொடங்குவார்கள்.சிலவேளை கதைக்கேற்ற சில விசேட அம்சங்களையும் டைரக்டருடன் பேசுவார்கள். தமிழ்ப்பட வரலாறு இசைசேர்ந்த நாடத்துறையுடன் வளர்ந்தது. ஆனால் சிவாஜின் வரவு நடிப்புத் துறையில் பல பரிமாணங்களை பார்வையாளுருக்கு அறிமுகம் செய்தது. அப்பழுக்கற்ற அழகிய தமிழ் நடையிற்பேசி இரசிகர்களைக் கவர்ந்தவர்.அத்துடன்,அவர் பரதக்கலை, கதகளி குச்சுப்புடி என்பவற்றைப் பயின்றவர். பலகாலமாக மேடை நடிப்பு மூலம் அவரின் முகபாவம், உடல் மொழிகள், அத்தனையையும் மிகத் திறமாக உருவகப்படுத்தியவர். மார்லன் பராண்டோவும் சிவாஜி கணேசனும்'ஸ்ரானிஸ்லாவாக்கிஸ் ஸிஸ்டம்' என்ற முறையில் தங்களின் பாத்திரப் படைப்புக்களுடன் ஒன்றிணைந்து நடித்தவர்கள். ஆனால் மார்லன் ப்ராண்டோ சிவாஜியைப் பற்றிக் குறிப்பிடும்போது, அவரால் என்னைப் போல் நடிக்கமுடியும் ஆனால் என்னால் அவரைப்போல் நடிக்க முடியாது என்ற சொன்னதாகச் சொல்லப் படுகிறது. ஆது பெரும்பாலும்; உண்மை ஏனெ;றால் இருவரும் திரைப் படத் துறையின் நடிப்புக்கலையை வித்தியாசமான நிலைகளில் படித்துத் தெரிந்து கொண்டவர்கள். சிவாஜி கணேசன் அவர்கள் நடிப்புத் துறை மேடை நாடகத்டன் ஆரம்பித்தது. பத்து வயதிலேயே மேடை நடிகராகியவர்.மார்லண் ப்ராண்டோ வழக்கம்போல் மேற்கத்திய திரைப்படத்துறை அனுபவத்துடன் தொடர்ந்திருக்கலாம்.

சிவாஜி அவர்கள்; தனது வாழ்நாளில் பெரும்பாலும் திராவிடக் கட்சியின் கொள்கைகள் சமத்துவதின் அடிப்படையிலான நாடகங்களில் நடித்தவர் முழக்கவும்; சாதாரண மக்களுடனும் கலைஞர்களுடனும் தொடர்புகளைக் கொண்டாடியவர். உதவிகளைச் செய்தவர்,இளம் கலைஞர்களை உயர்த்திவிட்டவர் என்று பல தகவல்கள் சொல்கின்றன். மார்லன் ப்ராண்டோவும், அமெரிக்காவில் நடந்த கறுப்பு மக்களுக்கான சமத்துவப்போராட்டங்கள், அமெரிக்க பூர்வீகக் குடிகளின் சமத்துவத்திற்கான போராட்டங்களில் ஈடுபாடு கொண்டவர்.சாதாரண மக்களை பிரதிபலிக்கும், ரெனஸி வில்லியத்தின்(தோமஸ் லயினர் வில்லியம் 1911-1983) நாடகமான 'த ஸ்ரீட் கார் நேம்ட் டிசாயர் (1951) படத்தின் மூலம் ஹொலிவூட் படத்தறையில் மாற்றங்களைக் கொண்டு வந்தவர்.

சிவாஜி (1928-2001) அவர்கள் அவர் ஆண்டு பிறந்த தனது நாலரை வயதிலேயே நடிப்புக்குள் நுழைந்தவராகச் சொல்கிறார்கள். அவரின்,நடிப்புக்கலை வளர்ச்சி சாதாரண மக்களின் நேரடி இரசனையுடன்,மேடைகளில் வளர்ந்தது. அவரை அதிகப் படியான உணர்வுகளைக் கொட்டி நடிப்பவராகப் பார்ப்பதற்கு அந்த நடிப்பு முறை தேவையாகவிருந்தது. மார்லண் ப்ராண்டோவின் 'கோட்பாதா'; நடிப்பை சிவாஜியால் நடிக்க முடியும் என்பதைச் சிவாஜியின் 'தேவர் மகன'; தந்தை பாத்திரத்தித்தை ரசித்தால் புரிய வரும். ஆனால் 1967ம் ஆண்டு ஜெயலலிதா அவர்கள் சிவாஜியிடம் உங்களுக்குப் பிடித்த நடிகர் யார் என்று கேட்டபோது, சிவாஜி அவர்கள் மார்லன் ப்ராண்டொவின் பெயரைக் குறிப்பிடவில்லை. பழம்காலத்து ஹொலிவூட் நடிகரான றுடொலப் வலன்ரினோ(1895-1926) என்பவர்தான் தனது பிடித்த நடிகர் என்றும் அவரின் 'த N~க்'(1921) என்ற படத்தைப் பல தடவைகள் பார்த்ததாகவும் சொல்கிறார். 'த N~க்' என்பது ஒரு காதல்படம். ஆனால் சிவாஜி கணேசனுக்குப் பெயரும் புகழும் எடுத்துக் கொடுத்த படங்கள் அரசியல் கருத்துக்கள் சார்ந்த பராசக்தியும் ஆசிய திரைப்பட விழாவில் சிறந்த நடிகன் என்ற விருதைக்கொடுத்த 'வீரபாண்டிய கட்டபொம்மன்' என்ற படமாகும் வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற படத்தைத் தொடர்ந்து எஜிப்திய முதல்வர் நாஸர் அவர்கள் சிவாஜி அவர்களை வீடுதேடி வந்து சந்தித்ததாகச் சொல்லப் படுகிறது. இதற்குக் காரணம் சிவாஜி அவர்கள் வீரபாண்டிய கட்பொம்மன் என்ற விடுதலை வீரனாக, 'ஸ்ரானிலாவ்ஸ்கி' நடிப்புமுறையில் தன்னை முற்று முழுதான ஒரு நாட்டுப் பற்றுள்ள வீரனாக அடையாளப் படுத்தியதை திரு கமால் அப்துல் நாசர் அவர்கள் ஆணித்தரமாகப் புரிந்திருப்பார்கள் ஏனென்றால் திரு நாசர் அவர்கள் தனது நாட்டுக்காக மிகவும் வீரத்துடன் அன்னியனான பிரித்தானியரை எதிர்த்துப் போராடியவர். பிரித்தானியாவிடமிருந்த எகிப்திய சூயெஸ் கால்வாயைத் தேசிய மயப்படுத்திய மகாவீரன்தான். அவர், 1956ம் ஆண்டு பரித்தானியருடன் சூயெஸ் கால்வாய் காரணமாக ஒரு பெரும்போரையே நடத்த வேண்டியிருந்தது. சிவாஜி கணேசன் சுதந்திர போராட்டத்தில் சிறை சென்ற தகப்பனின் சரித்திரத்துடன் வாழ்ந்தவர். சுயமரியாதை இயக்கமான திராவிடக் கட்சியுடன் சிறு வயதில் இணைந்தவர்.சிவாஜிக்குப் போராட்ட வீரனாக நடிப்பது அவர் உதிரத்திலேயே ஊறியிருக்கலாம்.

ஜெயலலிதாவுக்குக் கொடுத்த நேர்காணலில், திராவிடக் கடசியின் ஏழாவது சுயமரியாதை மகாநாட்டில், மராத்திய வீரனான சிவாஜி மன்னனாகத் தன்னுடைய நடிப்பைக் கண்ட பெரியார் இ.வெ.இராமசாமி தனக்குச் சிவாஜி என்ற பட்டத்தைத் தந்ததாகச் சொல்கிறார்.

'ஸ்ரானிஸ்லாவாக்கிஸ்' நடிப்பு முறை என்பது ஒரு நடிகன் முற்று முழுதாகத் தன்னை அந்தக் கதாபாத்திரமாகச் சித்தரிப்பதாகம்.இதன் அடிப் படையிற்தான விமர்சகர்கள் மார்லன் ப்ராண்டிடாவையும் சிவாஜியையும் ஒப்பிட்டுப் பேசுகிறார்கள். மார்லண் ப்ராண்டோவின் 'லாஸ்ட் ராங்கோ இன் பாரிஸ்,(1972' 'யுலியஸ் ஸீஸர் 1956). 'த ஸ்ரீட் கார் நேம்ட் டிசாய்யர்(1951) என்பன சில. மார்லண் பிராண்டோவின் 1951)'த ஸ்ரிட் கார் நேம்ட் டிசாயர்' என்ற படமும் சிவாஜியின் (1952) 'பராசக்தியும'; என்னவென்று பாரம்பரிய திரைப்படத் துறையைக் கட்டுடைப்பு செய்தன என்பதை இருபடத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் புரியும். சிவாஜி அவர்களின் இந்த நடிப்பு முறைக்கும் சிவாஜியுடன் சேர்ந்து நடித்த நடிகைகளும் ஒருவித்தில் உந்துதல் கொடுத்திருக்கிறார்களா என்ற கேள்வியும் வரலாம் ஏனென்றால் தனக்குப் பிடித்த நடிகை இந்தி நடிகையான நர்கிஸ் என்று சொல்கிறார். நர்கிஸ் அவர்களின் நடிப்பு 'மதர் இந்தியா(1957)' என்ற படத்தில் முழக்க முழுக்க ;ஸ்ரானிஸ்லாவ்ஸ்கி' நடிப்பு பாரம்பரியத்தில் பிரதிபி;த்தது என்பதை யாரும் மறுக்கமாட்டார்கள்.இந்தப் படம் ஒஸ்கார் பரிசுக்குச் சிபாரிசு செய்யப்பட்ட படம்.

சில பிரபல படங்கள் வெற்றி பெறக் காரணமாக இருந்த அவருடன் நடித்த சில பெண்பாத்திரங்களையும் இங்கு குறிப்பிடவேண்டும். சிவாஜி கிட்டத்தட்ட 299 திரைப் படங்களில் 60 நடிகைகளுடன் நடித்திருக்கிறார். 'தில்லானா மோகனாம்பாள்' படம்(1968) ஆனந்த விகடனில் நாவலாக வெளிவந்து பின்னர் திரைப் படமாக வெளிவந்து பாரிய வெற்றியையும் விருதுகளையம்; தந்த படம். இந்தப் படத்தில் அவரும் பத்மினியும் சேர்ந்து நடித்திருக்காவிட்டால் இந்தப் படம் இவ்வளவு வெற்றி தந்திருக்கமுடியுமா என்பது எனது கேள்வி. ஏனென்றால் இருவரும் இருகலைஞர்களாக முற்று முழுதாக தங்களை அர்ப்பணித்து நடித்து எடுத்தபடமது. அதேபோல்,உலக திரைப்பட உலகத்தில் அக்கால கட்டத்தில் மிகவும் செலவுசெய்த எடுத்த றிச்சார்ட் பேர்ட்டனும் எலிசபெத் டெய்லரும் நடித்த 'கிளியோபாத்திரா (1963)'படத்தில் அவர்கள் இருவரும் அவ்வளவு தூரம் நெருங்கி இணைந்து நடிக்காமலிருந்தால் பல விருதுகளைத் தட்டிக் கொண்ட அந்தப் படம் அவ்வளவு தூரம் வெற்றியடைந்திருக்குமா என்பதும் ஒரு கேள்வி. அதேபோல் சிவாஜி நடித்தவற்றில் எனக்குப் பிடித்த முக்கிய படமான 'முதல் மரியாதையில், ராதாவும் சிவாஜி அவர்களும் கதைப் பாத்திரங்களின்; முற்று முழு உணர்வுகளையும் 'ஸ்ரானிஸ்லாவ்ஸ்கி' நடிப்பு முறையில் பிரதி பலித்திருக்கிறார்கள். காரணம் இந்தப் படம் ஒரு உண்மையான கதையைத் தழுவி எடுத்த படம் என்று சொல்லப் படுகிறது.

இரஸ்ய எழுத்தாளர் ப்யடோர் தொஸ்தாய்வேஸ்கி (1821-1881)அவர்களின் 'க்ரமை; அன்ட் 91866) பணிஸ்மென்ட்' என்ற உண்மைக கதையைத் தழுவி ஆர் செல்வராஜா(கம்யுனிஸ்ட் ஒருத்தரின் உறவினர்) என்பவர் எழுதிய 'முதல் மரியாதை' என்ற கதையைப் பாரதிhராஜா படமாக்கியிருக்கிறார். வைரமுத்து பாட்டெழுதிப் பரிசு பெற்றிருக்கிறார். இளையராசா இசையமைத்திருக்கிறார். ஆனால் இதை எழுத்தாளர் ஜெயகாந்தன்(கம்யுனிஸ்ட்) எழுதிய'சமுகம் என்பது நாலுபேர்' என்ற கதையின் தழுவல் என்றும் சொல்வாருண்டு. ஆனால் அந்தப் படம் வயதுபோன எழுத்தாளரான தொஸ்தாயவேஸ்கிக்கும் அவரின் மிகவும் இளம்; காரியதரிசியான அன்னா என்ற பெண்ணுக்கும் உண்டான உறவை அடிப்படையாகக் கொண்டது என்று தகவல்கள் சொல்கின்றன.

இந்தப் படம் முழுக்க முழுக்க ஒரு கிராமத்தில் எடுத்தபடம். பலரும் இந்தப் படம் பொருளாதாரரீதியில் வெற்றி பெறாது என்று சொன்னபோதும் மிகப் பிரமாண்டான வெற்றியைக் கொடுத்திருக்கிறது.பல விருதுகளைக் குவித்திருக்கிறது. இரஸ்யா இந்தப் படத்தை வாங்கியிருக்கிறது. காரணம் தமிழர்களுக்கச் சொல்லப் பட்ட ஒரு வித்தியாசமான கதை என்பது மட்டுமல்ல,இந்தப் படத்தின் கதை இரஷியாவை இந்தியாவுடன் இணைத்த கதையாகும்.அத்துடன் இந்தப் படத்தில் சிவாஜியும் ராதாவும் ஒருத்தருக்;கொருத்தர் மெருகு கொடுத்த இணைந்து அற்புதமாக நடித்ததுதான் காரணம்.

ஓரு திரைப்படப் பட்டதாரியாகச் சிவாஜியின் நடிப்பை ஆய்வு செய்யும்போது, நடிப்பு என்பது ஒரு கலை என்பதும் இக்கலைவளர்ச்சிக்கு,மெருகுபடுவதற்கு, சிறுவயதிலிருந்தே சிவாஜி அவர்களின் பன்முகத் தன்மையான அரசியல். பொருளாதார.வாழ்வியல் அனுபவங்களும்தான் முற்று முழுதான காரணங்களாக இருந்திருக்கின்றன என்பது எனது அபிப்பிராயம். அதை ஸ்ரானிஸ்லாவ்ஸ்கி நடிப்பு முறை என்று அவர் தெரிந்திருப்பாரா என்பது எனது கேள்வி..
திரைப்படக்கலை படிக்கும் மாணவர்களும், கலைஞர்களும் சிவாஜி பற்றிய ஆய்வுகளைச் செய்வது அவர்களின் திறமையை மேன்படுத்த உதவும் என்பது எனது கருத்து.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.