"நிமிர்ந்து நடக்கும் நடையழகு
நெருங்கிப் பழகும் கலையழகு
அமைதி நிறையும் முகத்தழகு
யாவும் உங்கள் தனியழகு" - கவிஞர் கண்ணதாசன் -
 
இனியதொரு காதல் பாடல். கவிஞர் கண்ணதாசனின் இனிய தமிழில் கேட்பவர் இதயங்களைக் கொள்ளை கொண்ட பாடல்களிலொன்று. எம்ஜிஆர் & சரோஜாதேவி, டி.எம்.எஸ் & பி.சுசீலா, கே.வி.மகாதேவன் கூட்டணியிலுருவான காலத்தால் அழியாத கானமிது. இசைக்காக, நடிப்புக்காக, குரலுக்காக, மொழிக்காகச் சிறந்து விளங்கும் பாடல்களிலொன்று.
 
பாடல் முழுமையாக:
 
 
பட்டுச் சேலை காத்தாட பருவ மேனி கூத்தாட
பட்டுச் சேலை காத்தாட பருவ மேனி கூத்தாட
கட்டுக் கூந்தல் முடித்தவளே என்னைக்
காதல் வலையில் அடைத்தவளே

அரும்பு மீசை துள்ளிவர அழகு புன்னகை அள்ளி வர
அரும்பு மீசை துள்ளிவர அழகு புன்னகை அள்ளி வர
குறும்புப் பார்வை பார்த்தவரே என்னைக்
கூட்டுக் கிளியாய் அடைத்தவரே

கையில் எடுத்தால் துவண்டு விடும்
கன்னம் இரண்டும் சிவந்து விடும்
கையில் எடுத்தால் துவண்டு விடும்
கன்னம் இரண்டும் சிவந்து விடும்
சின்ன இடையே சித்திரமே
சிரிக்கும் காதல் நித்திலமே
 
நிமிர்ந்து நடக்கும் நடையழகு
நெருங்கிப் பழகும் கலையழகு
நிமிர்ந்து நடக்கும் நடையழகு
நெருங்கிப் பழகும் கலையழகு
அமைதி நிறையும் முகத்தழகு
யாவும் உங்கள் தனியழகு

கட்டுக் கூந்தல் முடித்தவளே என்னைக்
காதல் வலையில் அடைத்தவளே
குறும்புப் பார்வை பார்த்தவரே என்னைக்
கூட்டுக் கிளியாய் அடைத்தவரே

உறங்கினாலும் விழித்தாலும்
ஊர்கள் தோறும் அலைந்தாலும்
உறங்கினாலும் விழித்தாலும்
ஊர்கள் தோறும் அலைந்தாலும்
மயங்க வைத்தது ஒரு முகமே
மங்கை உன்தன் திருமுகமே
 
காசு பணங்கள் கேட்கவில்லை
ஜாதி மதங்கள் பார்க்கவில்லை
காசு பணங்கள் கேட்கவில்லை
ஜாதி மதங்கள் பார்க்கவில்லை