- இந்நிகழ்வுக்கான தகவல் இறுதி நேரத்தில் கிடைக்கப்பெற்றதால் உரிய நேரத்தில் பிரசுரமாகத் தவறி விட்டது. வருந்துகின்றோம். ஒரு பதிவுக்காக இங்கு பிரசுரமாகின்றது. நிகழ்வு பற்றிய தகவல்களை அனுப்புவோர் குறைந்தது ஒரு வாரத்துக்கு முன்னர் அனுப்பவும். அதன் மூலம் இது போன்ற தவறு நடைபெறாது. சாத்தியங்கள் அரிது. - பதிவுகள் -


எழுத்தாளரும் சமூக ஆர்வலருமான ஆவூரான் சந்திரன் – உஷா தம்பதியரின் செல்வப்புதல்வன் துவாரகன் சந்திரன், செல்வப்புதல்வி அபிதாரிணி சந்திரன் ஆகியோரின் மிருதங்க அரங்கேற்றம், இன்று 17 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு மெல்பனில் Rowville Secondary College மண்டபத்தில் நடைபெறும். வாழ்த்துகள்.

இந்த இளம் கலைஞர்கள், மெல்பனில் நீண்டகாலமாக இயங்கும் இந்தியன் கலைக்கல்லூரியின் இயக்குநர் மிருதங்க கலைஞர் திரு. யோகன் கந்தசாமியின் மாணவர்களாவர். இக்கலைக்கல்லூரியிலிருந்து அரங்கேற்றத்திற்கு தயாராகியிருக்கும் இந்த இளம் கலைஞர்கள், 48, 49 ஆவது மாணவர்கள் என்பதும், அவுஸ்திரேலியாவில் ஒரு இளம் யுவதி முதல் முதலில் மிருதங்க கலைஞராவதும் குறிப்பிடத்தகுந்தது.