கலைஞர்களே! நீங்கள் எழுத்தாளராகவிருக்கலாம். கலைக்குழுவாக இருக்கலாம். கலை அமைப்பாகவிருக்கலாம். கனடாக் கலைச் சபையில் இணைவதன் மூலம் அச்சபை வழங்கும் பல்வேறு நிதிகளைப்பெற முடியும்.

மேற்படி கனடாக் கலைச் சபையினரின் திட்டங்கள் மூலம் பயன் பெற நீங்கள் முதலில் அச்சபையில் இணைந்து கொள்ள வேண்டும். இச்சபையின் இணையத்தளத்திலுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து அனுப்பினால் 15 நாட்களுக்குள் பதிலளிப்பார்கள். உங்கள் விண்ணப்பத்தைச் சபை அங்கீகரித்தால் அதன் பின் சபையின் திட்டங்களுக்கு நீங்கள் விண்ணப்பிக்க முடியும்.

சபையில் இணைவதற்கு நிபந்தனைகள் உள்ளன. உதாரணத்துக்கு எழுத்தாளராக இணைவதற்கு நூல் வெளியிட்டிருக்க வேண்டும். சஞ்சிகைகளில் எழுதியிருக்க வேண்டும். இவ்விதம் நிபந்தனைகள் உள்ளன. இச்சபையின் இணையத்தளத்தில் விபரங்கள் உள்ளன. சென்று பாருங்கள்! விண்ணப்பியுங்கள்! இணைந்து பயன் பெறுங்கள்!

கனடாக் கலைச் சபை: கனடாக் கலைச் சபை