இருபதாம் நூற்றாண்டின் முக்கிய மெய்யியலாளர்களில் ஒருவர் என மதிக்கப்பட்ட விற்கன்ஸ்ரைன் பற்றிப் பல்வேறு மொழிகளில் கட்டுரைகளும், ஆய்வுகளும், புனராய்வுகளும் வெளிவந்துகொண்டிருந்த போதிலும் தமிழ் மொழியில் ஆய்வாளர் செ.வே.காசிநாதனின் இத்தகைய ஒரு நூலைப் படிப்பது எனக்கு மிகுந்த சந்தோஷத்தைத் தருகின்றது. அவரின் இத்தகைய முயற்;சி மிகுந்த வரவேற்புக்கும், பாராட்டுக்குமுரியதாகும்.  ஆஸ்திரியாவில் பிறந்த பேராசிரியர் விற்கன்ஸ்ரைன் இங்கிலாந்தில் கேம்ரிஜ் பல்கலைக்கழகத்தில் 1930 ஆம் ஆண்டு முதல் 1947 ஆம் ஆண்டுவரை மெய்யியல் விரிவுரையாளராகப் பணிபுரிந்தவர். அளவையியல், கணித அடிப்படைகள் போன்ற கருத்துக்களை சிந்தனை வழிகளில் நின்று அர்த்தம், மொழி, மனம் என்ற ஆய்வு நூலை எழுதியிருந்தார். இருந்தும் அவர் எழுதியவற்றை அவர் இறந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரே அதாவது 1953 ஆம் ஆண்டே இரண்டு பாகங்களாக வெளிவந்திருந்தமையை அறியமுடிகிறது.

லண்டன் கேம்ப்ரிஜ் பல்கலைக்கழகத்தில் நான்கு ஆண்டுகள் மெய்யியல்துறைப் பேராசிரியர் டி.டபிள்யூ. ஹம்லின் ( னு.று.ர்யஅடலn) கருத்தரங்குளில் பங்குபற்;றித் தான் பெற்ற அறிவும் அத்துடன் இத்தாலிய நண்பர் பிஎரோ பின்சவுற்றியுடன் (Pநைசழ Piணெயரவi) தான் மேற்கொண்ட எண்ணற்ற உரையாடல்களுமே இத்தகைய ஆய்வு முயற்சியை மேற்கொள்வதற்கு தனக்கு வழிகோலியதாகக் இந்நூலாசிரியர் காசிநாதன் குறிப்பிடுகின்றார். 1973 ஆம் ஆண்டிலிருந்து தான் மேற்கொண்ட ஆய்வுகளின் கட்டுரை வடிவமே இவை என்று குறிப்பிடும் காசிநாதன் 1983ஆம் ஆண்டு இலங்கைப் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் மெய்யியல் கற்ற மாணவர்களுக்கு இக்கட்டுரைகள் மூலமே தான் விளக்கம் அளித்ததாகக் கூறுகின்றார்.

அகமும் மொழியும், பிரத்தியேக மொழி வாதம், பிரத்தியேக மொழிகுறித்து ஏ.ஜே.அயர், சொல்லும் பொருளும்: சுட்டல்முறை வரைவிலக்கணம், சொல்லும் அர்த்தமும்: பெயரும் பெயரை உடையதும்;, அர்த்தமும் பயன்பாடும்: வரைவிலக்கணமும் விளக்கமும், மொழி, அர்த்தம், மனம், பின்குறிப்புகள், அடிக்குறிப்புகள், கலைச்சொற்கள் என்ற சிந்தனைத் தலைப்புக்களோடும் குறிப்புகளோடும் விரவிக் கிடப்பதும்தான் அதனுள் நுழைந்து என்னை வாசிக்கத் தூண்டியது என்றால் மிகையாகாது..

‘ஒரு சொல்லென்பது ஒருவரின் மனசுக்குள்ளேயே உருவாகின்ற அக நிகழ்வு மொழியாகி வெளிப்படுகிறது எனக் கருதினாலும், ஒருவரது விளக்;;;;;;கத்தால் புறப்படுவதும் அல்லது பெறப்படுவதும் ஒருவர் விளக்குவதால் தரப்படுவதுமாக புரியமுடிகின்றது. அந்தவகையில் மனசுள்ளே நடைபெறும் அனுபவங்களை விளங்குவதால் அக்கருத்தை மற்றவர்களுக்கு சொல்லுவதற்கு மொழி ஒரு பரிவர்த்தனையாக பரிணமிக்கின்றது. இந்த மொழியினால்தான் மனிதன் அதனை புலப்படுத்த முயல்கின்றான். ஒரு சமூகத்தின் செயல்பாடு இருந்தால்த்தான் இதனை வெளிப்படுத்த முடியும். சமூகந்தான் இத்தகைய மொழியை உருவாக்குகின்றது என்று அருமையான அவர் பற்றிய விளக்கத்தை ஆரம்பத்திலேயே தருகின்றார்’ நூலாசிரியர் காசிநாதன்.

மனிதன் தனக்கும் பிறர்க்கும் பயனையும் மகிழ்ச்சியையும் தரக்கூடிய கருத்துக்களை உடையவனாக இருந்தபோதும் அனைத்தையும் பிறர் காணமுடியாது. அவனது நெஞ்சத்தினுள்ளேயே மறைந்து உள்ளன. சிந்தனையில் ஏற்படுவதை மற்றையோருக்குத் தெரிவிப்பது அவனுக்கு அவசியமாகிறது. அதனை நிறைவேற்றுவதற்குப் பொருத்தமான பல்வேறு பேதங்களுடன் எழுப்பும் ஒலிகளை அவனால் பயன்படுத்தப்படுகின்றது. இவ்விதம் கருத்துக்களும் ஒலிகளுக்குமிடையில் இயல்பான ஒற்றுமையினால் மொழி இணைக்கப்படுகின்றது என்பதைப் புரியமுடிகிறது. இருந்தும் நான் யார் என்ற கேள்விக்கு நம்மால் இலகுவாகப் பதில் சொல்ல முடியாது. பல விடயங்கள் செயற்பட்டு வெளிவருவதைத்தான் உணமுடிகின்றது. உண்மையில் உள்ளுணர்வு தரும் அனுபவங்களை தனது அகத்தே மட்டும் சந்தித்து, அங்கிருந்து மொழியை அமைத்துக்கொள்ளலாம் எனப் பல மெய்யியலாளர்களின் கருத்துக்களோடு விளக்கி நிற்கின்றார் ஆசிரியர். அனுபவவாத மரபில் மீண்டும் மீண்டும் அவற்றைச் சந்திக்கும்போது புரிதல் எற்பட்டு விடுகின்றது என்று கூறுகின்றார்.

அகமும் மொழியும் என்னும்போது இரண்டு மனங்களுக்கிடையில் கிடைக்கும் புலன் உணர்வுகள் (ளநளெயவழைn) மாறுபட்டவையாக இருக்குமென்று நிரூபிக்கின்றார். அதாவது நாம் எமது ஐம்புலன்களால் பார்த்துச் சொல்லுகின்ற வெளி உலகமும் அவற்றை மனதால் உணர்கின்ற உள்ளுணர்வின் அனுபவமும் ஒத்தனவாக இருக்குமா என்பதை நிரூபிக்காது என்று பல்வேறு நுட்பமான விளக்கங்களோடு வாசகனை அழைத்துச் செல்கின்றார் விற்கின்ஸ்ரைன். மொழி என்பது ஒரு ஆழமான உள்ளுணர்வின் கற்றலோடு தொடர்பு கொண்டது அது உயிரை அசைக்கக்கூடியது என்பதனை காசிநாதனின் இந்நூலை வாசிக்கும்போது என்னால் உணரமுடிந்தது.

அடுத்து மெய்யியலாளர்களது மனதை விஞ்ஞானத்தின் முறை என்பது எப்போதும் ஈர்த்துக்கொண்டே இருக்கிறது என்கின்றார். ‘விஞ்ஞானத்திற் போல் வினாக்களைக்கேட்டு விடை தரவேண்டும் என்ற சபலத்திலிருந்து அவர்கள் தப்ப முடிவதில்லை’ இயற்கை நிகழ்ச்சிகளை இயன்றளவுக்கு ஒரு சில விதிகளினாலேயே விளக்குவது போலவும், பொதுவிதி ஒன்றின் மூலம் கணிதத்தில் பல விடயங்களை ஒருமைப்படுத்துவது போலவும், ஓரிரு விளக்கங்களினால் அனைத்தையும் தெளிவுபடுத்த, மெய்யியலாளர்கள் செய்கிற முயற்சி, அநேகக் குழப்பங்களுக்குக் காரணமாகிறது என்று விற்கன்ஸ்ரைன் கூறியிருப்பதாகக் காசிநாதன் குறிப்பிடுவதும் சற்று நின்று சிந்திக்க வைக்கின்றது.

எமது மொழியின் சொற்கள் எமது நடவடிக்கைகள் ஊடாக பிரயோகமாகும் கருவிகள் போன்றன. வினைஞன் ஒருவனது ஆயுதப்பெட்டியினுள்ளே சுத்தியல், குறடு, திருகி, வாள், ஆணி, அடிமட்டம், திருகாணி என்று பல்வேறு பயன்பாடுகளையுடைய கருவிகள் இருப்பதுபோல, மொழியிலும் பல்வேறு வகைகளில் காணப்படுகின்ற சொற்கள் உள்ளன. சொற்களைக் கேட்கும்போதும் வாசிக்கும்போதும் மேலோட்டமாக நோக்கின் அவற்றிடையே ஒற்றுமை காணப்படலாம். அதே போன்று நாம் ஈடுபடும் காரியங்களில் பயன்படும் கருவிகளின் செயற்பாட்டையும் விபரி;க்கின்றார். அதேபோன்றுதான் எமது மொழிகளின் சொற்களையும், அவற்றின் பயன்பாட்டை நுணுகி அவதானித்து வேறுபாடுகளையும் விரிவாய் எடுத்துக் கூறுகின்றார்.

அடுத்து மனதில் படிமம் ஒன்று வருகையில் ‘இப்படித்தான் பிரயோகி’ என்கிற குறிப்போடும் வருகிறது என்று சொல்ல முடியாது என்கிறார். தடியொன்றிலே தன்னைத் தாங்கிக்கொண்டு, சரிவொன்றில் ஏறுகின்ற முதியவன் ஒருவனது சித்திரம், எமது நினைவிற்கு வருகின்றது என்று கொள்வோம். பரிதாபத்துக்குரிய ஒரு பலவீனன், சரிவில் கீழ்நோக்கிச் சறுக்குகிறதைக் காட்டும் சித்திரமாக யாரும் இதற்கு அர்த்தம் கொள்ளவும் முடியும். அதபோல், சதுரத் திண்மம் ஓன்றின் படிமத்தை எடுத்துக்கொண்டால், அதுவும் பல்வேறு விளக்கங்களோடு பொருந்தும். அவ்வாறெனின், பொருட்களுக்குப் பதிலாக, படிமங்கள் சொற்களோடு இணைந்து வருதல், எம்மைச் சரியாக வழிப்படுத்தும் அர்த்த விதிகளாக முடியாது என்று நூலாசிரியர் விளக்குகின்றார்.

மனித வாழ்க்கைக்கு அடிப்படையில் கேள்வி கேட்கும்போதே தத்துவம் பிறப்பதை இந்நூலில் தெளிவாக உணர்ந்து கொண்டேன். தத்துவம் ஒரு தர்க்கத்தினால் தருகின்ற அழகியலாகவே நான் கருதுகின்றேன். தத்துவமானது நூறு ஆண்டுகளுக்கு முன்பே நுணுகி நுணுகிப்பார்த்து அதனூடகவே செல்ல முற்பட்டிருக்கின்றது என்றும் அறிந்திருக்கின்றேன். மனித சந்தோஷத்திற்கு நிட்சயமாக தத்துவம் வேண்டியிருக்கிறது. மனித சந்தோஷத்தின் பட்டியலை உருவாக்க முயற்சி செய்து தருகின்றது. வாழ்க்கையில் கிடைக்காத ஒரு அடுக்கை இலக்கியம் எழுதிக்காட்டுவதற்கு இத்தகைய தத்துவ நூல்கள் அவசியமாகின்றன என நான் கருதுகின்றேன்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.