[ பயிற்றுவிக்கும் தமிழ் உதவிப்பேராசிரியர் ஜெ.கார்த்திக்]

சுமார் 20 இலட்சம் தமிழர்கள் வாழும் மியன்மார் நாட்டில் தமிழ்மொழிப்பயன்பாடும் தமிழ்க்கல்வியும் இராணுவ ஆட்சியினால் நிச்சயமற்ற சூழலில் இருந்துவருகிறது. இந்நிலையில், அங்குள்ள பல்வேறு அமைப்புகளும், தன்னார்வலர்களும் இத்தகைய சூழலை மாற்ற பெரு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர். இந்நிலையில் மியன்மாரில் இலக்கியப்படைப்புகள் வெளிவருவது அருகியுள்ள சூழலில், மியன்மாரிலுள்ள யாங்கோன் பகுதியில் செயல்படும் தமிழர் அறநெறிக்கழகம், தமிழ் இலக்கியப் படைப்பாக்கப் பயிற்சியை மாணவர்களிடமும் தமிழாசிரியர்களிடமும் கொண்டுசெல்வதற்கு முனைந்துவருகிறது. குறிப்பாக, தமிழர் அறநெறிக்கழகத்தைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்டப் பள்ளி மாணவர்கள் 20பேருக்கு கடந்த ஜூன் மாதம் 6 முதல் 11ஆம் தேதிவரையிலான 6 நாட்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ் உதவிப்பேராசிரியர் ஜெ.கார்த்திக் தமிழ்மொழி மற்றும் இலக்கியப்பயிற்சிகளை வழங்கினார்.

பயிற்சி முடித்த தமிழ் மாணவர்களின் முதல் இலக்கியப் படைப்புகள் ’என்மொழி’ என்னும் சிறப்பிதழில் வெளிவந்தன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மியன்மார் தமிழாசிரியர்களுக்குத் தமிழ் இலக்கணம் செவ்விலக்கியப் பயிற்சிகள் வழங்கப்பட்டதுடன் மியன்மார் நாட்டின் தமிழ்க்கல்விச்சூழல் குறித்த கருத்தரங்கமும் நிகழ்த்தப்பெற்றன.


[பயிலரங்கில் பங்கேற்ற தமிழ் மாணவர்களின் ஒருபகுதி]


[பயிலரங்கில் பங்கேற்ற மாணவர்களின் படைப்புகள் கொண்ட ‘என்மொழி’ இதழின் அட்டைப்படம்]

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.