பாரிஸ் மாநகரில் நடைபெறவுள்ள இலக்கிய மாலையில் பத்து நூல்களின் அறிமுக நிகழ்வு இடம்பெறவுள்ளது. பாரிஸ் மாநகரில் வாழும் மூத்த எழுத்தாளர்களான வி. ரி. இளங்கோவன் - பத்மா இளங்கோவன் ஆகியோரின் பத்து நூல்கள் அறிமுக நிகழ்வு - இலக்கிய மாலை 07 - 12 - 2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு பாரிஸ் - லாச்சப்பலுக்கு அருகிலுள்ள 'பஜோல்" மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

'இளங்கோவன் படைப்புகள்,  ஈழத்து இலக்கியச் சிற்பிகள்,  வெயிலும் பனியும்,  போர்க்காலக் கதைகள்,  மக்கள் எழுத்தாளர் கே. டானியல்" ஆகிய வி. ரி. இளங்கோவனின் ஐந்து நூல்களும்,  'சிறுவர் தமிழ் அமுதம்,  சிறுவர் இலக்கிய நுட்பங்கள்,  சிறுவர் கதைப் பாடல்கள்,  பாலர் கதைப் பாடல்கள், கொரோனாவின் தடங்களில்.." ஆகிய பத்மா இளங்கோவனின் ஐந்து நூல்களும் அறிமுக நிகழ்வில் இடம்பெறுகின்றன.

மூத்த கவிஞர்இ மொழிபெயர்ப்பாளர் க. வாசுதேவன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில்இ ஊடகவியலாளர் இ. கந்தசாமி,  எழுத்தாளர் சு. கருணாநிதி, கலைஞர் கே. பி. லோகதாஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்குவர்.

கலை இலக்கியப் படைப்பாளிகளான க. முகுந்தன்இ என். கே. துரைசிங்க,  பொலிகை கோகிலா,  க. தேவதாசன்,  பிரியா லவன்,  கே. உதயகுமார், இ நிஷா பீரிஸ் ஆகியோர் நூல்கள் குறித்துக் கருத்துரை வழங்குவர். ஏற்புரைகளை நூலாசிரியர்கள் வழங்குவர். ஊடகவியலாளர் எஸ். கே. ராஜென் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவார்.

எழுத்தாளர் வி. ரி. இளங்கோவன் சிறுகதை,  கவிதை, கட்டுரை, திறனாய்வு தமிழர் மருத்துவம் ஆதியாம் துறைகளில் இருபத்திமூன்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். பத்துக்கு மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்தும் வெளியிட்டுள்ளார்.

பல விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ள இவரது நூல்களின் அறிமுக நிகழ்வுகள்இ இலங்கையின் பல பகுதிகளிலும்,ஐரோப்பிய நாடுகளிலும், கனடாவிலும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

பத்மா இளங்கோவன் சிறுவர் இலக்கியத்துறையில் குறிப்பிடத்தக்கவர். முன்னாள் ஆசிரியரான இவர், பாலர் கல்வியில் விசேட பயிற்சி பெற்றவர். சிறுவர் இலக்கியம்இ கவிதைஇ கட்டுரை ஆதியாம் துறைகளில் பன்னிரண்டு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு சின்னப்பபாரதி இலக்கிய அறக்கட்டளையின் சிறுவர் இலக்கியத்திற்கான விருது (2012) பெற்றவர்.

அறிமுக நிகழ்வுக்கான ஒழுங்குகளை, உலகத் தமிழ்க் கலையகம் - பிரான்ஸ், முன்னோடிகள் இலக்கிய வட்டம் - பாரிஸ் ஆகிய அமைப்புகள் மேற்கொண்டுள்ளன.

இலக்கிய மாலை நிகழ்வில்,  பிரான்ஸ் நாட்டில் வாழும் கலை இலக்கியப் படைப்பாளிகள்,  இலக்கிய அபிமானிகள்,  வாசகர்கள் பெருமளவில் கலந்துகொள்வரென எதிர்பார்க்கப்படுகிறது.

:இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.