1995ம் ஆண்டு தமிழில் ஒரு அதிசயம் நடந்தது. அதுதான் பாப்பா பாரதி  - மாவை நித்தியானந்தன் - அந்த நாட்களிலே, தொலைக்காட்சியில் தமிழ்க் குழந்தைகள் பார்த்து மகிழ எதுவும் இருக்கவில்லை. எல்லாமே ஆங்கிலம் தான். கடைகளில் குழந்தைகளுக்கான ஒரு தமிழ்க் காணொளி கூட இருக்கவில்லை. இந்த நிலையிலேதான், மிகக் குறைந்த தொழில்நுட்ப வசதிகளோடும், நிதி வசதியோடும் பாரதி பள்ளி மூன்று முழுநீளக் காணொளிகளைத் துணிச்சலுடன் தயாரித்தது. முழு உலகமும் இதைப் பார்த்து வியந்தது. பல்லாயிரக் கணக்கான தமிழ்க் குழந்தைகள் இதில் வந்த பாட்டுகளையும், கதைகளையும், நாடகங்களையும் பார்த்துப் பரவசமடைந்தார்கள். திரும்பத் திரும்பப் பத்துத் தடவைகள், நூறு தடவைகள் என்று பார்த்தார்கள். ஏனென்றால், இதைவிட அவர்களுக்காக அன்று வேறெதுவுமே இருக்கவில்லை.

முதன்முதலில் நாடாவாக வந்த பாப்பா பாரதி, பின்னர் டிவிடி வடிவத்தில் வெளியிடப்பட்டது. எனினும், தொழில் நுட்ப சாதனங்களில் ஏற்பட்ட மாற்றங்களால், இவற்றின் பயன்பாடு தொடர்ச்சியை இழந்தது. இன்றைய நவீன தொழில்நுட்பச் சூழலில், குழந்தைகளுக்கான கார்ட்டூன்கள் இணையத்தில் நிறைந்துள்ளன. ஆயினும், பாப்பா பாரதி வித்தியாசமானது. ஆங்கிலத்தில் உள்ளதுபோல உண்மையான மனிதர்களைக் கொண்ட நிகழ்ச்சிகளை இன்றும் தமிழில் காண்பது அரிது.

எனவே, 30 ஆண்டுகளுக்குப் பின்னரும் எங்கள் பிள்ளைகள் மத்தியில் பாப்பா பாரதிக்குத் தனியிடம் உண்டு என்ற நம்பிக்கையில், அதனைத் துண்டு துண்டாகப் பிரித்து, யூரியூப் வழியாக வெளியிடுகிறோம். இதனால் தமிழ்க் குழந்தைகள் பயனடைவார்கள் என்று நம்புகிறோம்.

பாரதி பள்ளி, ஒஸ்ரேலியா



Paapaa Bharathi (பாப்பா பாரதி) was the first-ever children’s video series produced in Tamil. When originally released as three one-hour videocassettes in 1995 and 1996, it quickly became a favourite among children worldwide. Later re-released on DVD, these songs, stories, and plays are now being made freely available to a new generation through a YouTube channel.

Going live in YouTube at 5.00 pm (Australian Eastern Standard Time) on 6 July 2025.

https://www.youtube.com/@bharathiacademy1

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.