இலங்கையில் சிறுவர் சஞ்சிகைக்கான தேவை எப்போதும் இருந்துகொண்டே இருக்கின்றது.  எதிர்காலத்தின் நாயக, நாயகியர்கள் குழந்தைகளே.  காலத்துக்காலம் பல சிறுவர் சஞ்சிகைகள் வெளிவந்தாலும் , அவை போதிய ஆதரவின்றி தொடராமல் நின்றுவிட்டன. இந்நிலையில் அண்மையில் சிறப்பாக வெளிவந்துகொண்டிருந்த அறிந்திரன் சஞ்சிகையும் தொடராமல் நின்று போனது. இதனை எப்படியும் மீண்டும் வெளியிட வேண்டுமென்ற ஆர்வத்திலுள்ளார் இதன் வெளியீட்டாளரும், எழுத்தாளருமான கணபதி சர்வானந்தா. இது பற்றிய அவரது தகவலை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம். - பதிவுகள்.காம் -


அறிந்திரன்  சஞ்சிகை வெளிவரப் பலர் அனுசரணை வழங்கியிருந்தனர். கோவிட் தொற்றின் பின்னர் அச்சுப் பணிகள் தொடர்பான வளங்களின் விலை ஏற்றம் அறிந்திரன் வெளிவரவையும் பாதித்திருந்தது. அதுவரையும் ஒவ்வொரு இதழும் 5000 பிரதிகள் அச்சாகிக் கொண்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. கிராமங்கள் தோறும் நேர்த்தியான விநியோக வலையமைப்பையும் கொண்டிருந்தது. இன்றும் அச் சஞ்சிகை பற்றிக் கேட்டுப் பலர் தொலைபேசித் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர். முன்பு ரூபா. 20/- க்கு விற்றோம். அப்போது அதன் பெறுமதி ரூபா.40/- ஆகக் காணப்பட்டது. தற்போது அதனை அச்சடிக்க பிரதி ஒன்றுக்கு ரூபா. 100/- வரை தேவைப்படுகிறது. அதற்கு அனுசரணை வழங்க யாராவது முன்வந்தால் தொடரலாம். இதுவும் ஒரு சமூகத் திருப்பணி என்றதை நாம் உணர வேண்டும்.

கணபதி சர்வானந்தாவுடன் தொடர்பு கொள்ள:

Tel 0766667454 | WhatsApp 0715177847 | Email: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.