- சிந்துவெளி ஆய்வாளரான ஆர்.பாலகிருஷ்ணன் -

இன்று தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2023ற்கான இயல்விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. JC'S Banquet மண்டபத்தில் நடந்தது.  கவிஞரும், பேராசிரியருமான உ.சேரன் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்த நிகழ்வில்  வாழ்நாள் சாதனைக்கான இயல் விருது சிந்துவெளி ஆய்வாளரான ஆர்.பாலகிருஷ்ணனுக்கும், புனைவுக்கான விருது 'சற்றே பெரிய கதைகளின் புத்தகம்' நூலுக்காக எழுத்தாளர் றஷ்மிக்கும், கவிதைக்கான விருது கவிஞர் இளவாலை விஜயேந்திரனுக்கும் 'எந்தக் கங்கையில் இந்தக் கைகளைக் கழுவுவது' நூலுக்கும்., அல்புனைவுக்கான விருது 'நினைவு நல்லது' நூலுக்காக வானொலி / தொலைக்காட்சி ஊடகவியலாளரும், நாடகவியலாளருமான ப.விக்னேஸ்வரனுக்கும், மொழியாக்கத்துக்கான விருது ஜெகதீஷ்குமார் கேசவனுக்கும்,  இலக்கியம் மற்றும் சமூகப்பணிக்கான விருது முனைவர் பார்வதி கந்தசாமிக்கும் வழங்கப்பட்டது.

   - கவிஞரும், பேராசிரியருமான உ.சேரன் பிரதம விருந்தினராக..-

விருது பெற்றவர்களைப்பற்றிய அறிமுக உரைகளுடன் விருது வழங்ல் நடைபெற்றது. நிகழ்வினைச் சிறப்பாகத் தொகுத்து வழங்கியவர் ஊடகவியலாளர் எஸ்.ஜே.ராம்பிரஷான். நிகழ்வு எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் நன்றியுரையுடன் நிறைவு பெற்றது. தொடர்ந்து அனைவருக்கும் இராப்போசன விருந்து வழங்கப்பட்டது.

                               - எழுத்தாளர் றஷ்மி -

                         - கவிஞர் இளவாலை விஜயேந்திரன் -

                    -  எழுத்தாளர் ஜெகதீஷ்குமார் கேசவன் -

      - வானொலி / தொலைக்காட்சி ஊடகவியலாளரும், நாடகவியலாளருமான ப.விக்னேஸ்வரன் -

                        - முனைவர் பார்வதி கந்தசாமி -

                   - எழுத்தாளர் அ.முத்துலிங்கம் - நன்றியுரை -

'தமிழ் இலக்கியத் தோட்ட' நிகழ்வைப் பொறுத்தவரையில் நான் அவதானித்த முக்கியமான அம்சம் - குறித்த நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டு, நேரத்தை விரயமாக்காமல் அனைத்து நிகழ்வுகளும் நடைபெற்று முடிவடையும் பாங்கு. இதனால் நிகழ்வு கச்சிதமாக அமைந்து சிறக்கும்.

விருதுகள் பெற்றவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். இங்குள்ள புகைப்படங்கள் விருதுகள் பெற்றவர்கள் உரையாற்றுவதை வெளிப்படுத்தும்.