பெண் எழுத்தாளர்களுக்கான இவ்வாண்டின் திருப்பூர் சக்தி விருது  23/6/24 ஞாயிறு மாலை  மக்கள் மாமன்ற நூலகம், டைமண்ட் திரையரங்கு முன்புறம், மங்கலம் சாலை, திருப்பூரில் நடைபெற்றது  

தலைமை: கே பி கே பாலசுப்ரமணியம் ( முத்தமிழ்ச்சங்கம்). அறிமுக உரைகள் : சுப்ரபாரதிமணியன், சாமக்கோடாங்கி ரவி, தூரிகை சின்னராஜ். சிறப்பு விருந்தினர்: சமூக சேவகி  ஆர். ராஜம்மாள் அவர்கள். முன்னிலை: சத்ருக்கன், ராஜா மற்றும் மக்கள் மாமன்ற நிர்வாகிகள்.

"இந்திய சமூகத்தில் மன நோய் அதிகரித்து வருகிறது. மன அழுத்தங்களுடன் பலர் வாழ்கிறார்கள். அவர்களின் பாரங்களை இறக்கி வைக்கும் இடமாக மன நல ஆலோசகர்கள் அதிகரித்து வருகிறார்கள். குடும்பம் என்பது பாரத்தை இறக்கி வைக்கக் கூடியது, அவ்வகை குடும்பச்சூழல்களை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும். வீடு என்பது பாதுகாப்பானது. மன அழுத்தங்களிலிருந்து விடுபட இலக்கியம் சிறந்த கருவி.. வாசிப்பும் மஅழுத்தங்களிலிருந்து  நம்மைப் பாதுக்கும் கலங்கரை விளக்கம் "  என்று சமூக சேவகி ராஜம்மாள் விழாவில் குறிப்பிட்டார்.

நூல் வெளியீடு: சுப்ரபாரதிமணியனின்  'ஹைதராபாத் நாவல்கள்'  ( காவ்யா , ரூ480 ) வெளியிட்டவர் கல்வியாளர் கவிதா.. பெற்றுக்கொண்டவர் அய்யாசாமி

தமிழகத்தைச் சார்ந்த  விருதாளர்கள்  கீழ்க்கண்டவர்கள் :

திருவாளர்கள் லோகமாதேவி, நாராயணி சுப்ரமணியன், ஆர்.வத்சலா, இராஜலட்சுமி,   வே.சண்முகதேவி, கனிமொழி செல்லத்துரை, ஜான்சி பால்ராஜ்,சங்கீதா,  தெ.சுமதிராணி, பூங்கொடி பாலமுருகன், கமலா முரளி

அயலகத்தைச் ச்சார்ந்த விருதாளர்கள் : அமெரிக்கா : பிரியா பாஸ்கரன், அருள்மொழி , சிங்கப்பூர்: இரா.சபரிஸ்ரீ

திருவனந்தபுரம்: பகவதி மோதிலால், கல்பனா, பி உஷாதேவி, கோமதி கோதண்டராமன், ராஜேஸ்வரி எஸ்.குமார்., ப.சாந்தி

நன்றியுரை : நாதன் ரகுநாதன்

வரவேற்புரை   -  9994079600 –சி. ரவி  

நிகழ்ச்சி அமைப்பு : கனவு இலக்கிய அமைப்பு /   திருப்பூர் முத்தமிழ்ச்சங்கம் / மக்கள் மாமன்றம்)

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.