யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சமூகத்தினருக்கு வணக்கம்,

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் கனடாவின் வருடாந்த இராப்போசன ஒன்றுகூடலில் வழங்கப்படும் விருதுகளுக்கும் சிறப்பு விருந்தினருக்குமான பரிந்துரைகளை நாம் கோருகின்றோம்.  இவ்வருடம் பின்வரும் பிரிவுகளுக்காக விருதுகள் வழங்கப்படவிருக்கின்றன.
 
    ·         தொழில் முனைவருக்கான விருது (Award for Enterpreneurship)
    ·         விளையாட்டுத் துறையில் சிறப்புச் சாதனை புரிந்தவர்களுக்கான விருது (Award for Outstanding Achievement in Sports)
    ·         கல்வித்துறையில் சிறப்புச் சாதனை புரிந்தவர்களுக்கான விருது (Award for Outstanding Academic Achievement)
    ·         சமூகச் செயற்பாட்டாளருக்கான விருது (Award for Social Activism)

இவ்விருதுகளுக்காகவும் சிறப்பு விருந்தினருக்காகவும் பரிந்துரைக்கப்படுபவர்கள் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவராகவோ அல்லது தற்போதையை / முன்னாள் ஊழியராகவோ இருப்பதுடன் சமூக அக்கறை கொண்டவராகவும் பரிந்துரைக்கப்படும் துறையில் நீண்டகால பங்களித்திருப்பவராகவும் சமூக மதிப்புடையவராகவும் இருப்பதுடன் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் கனடாவினால் இதற்குமுன்னர் விருதளிக்கப்படாதவராகவும் இருப்பது அவசியமாகும்.

இவ்விருதுகளுக்கான பரிந்துரைகளைச் செய்யும்போது பரிந்துரைக்கப்படுபவரின் பெயரையும் அவர் கல்விகற்ற / பணியாற்றிய காலப்பகுதியையும் தெரிவிப்பதுடன் பரிந்துரைக்கப்படுபவர் எவ்விதம் குறித்த விருதுக்குப் பொருத்தமானவராகின்றார் என்பதையும்  இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.  என்ற முகவரிக்கு மின்னஞ்சல் மூலமாக பெப்ரவரி 23, 2024 இற்கு முன்னதாகத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

தோழமையுடன்

சுதர்சன் (அருண்மொழிவர்மன்), செயலாளர், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் கனடா

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.