முனைவர் சுனில் ஜோகி அவர்களைப் பதிவுகள் வாசகர்கள் நன்கறிவார்கள். நீலகரிப் படகர்களைப்பற்றிய அவரது ஆய்வுக்கட்டுரைகள் பல பதிவுகள் இணைய இதழில் வெளியாகியுள்ளன. இப்பொழுது மகிழ்ச்சியான தகவலொன்றை அவர் அனுப்பியுள்ளார். நீலகிரிப் படகர் இன மக்களைப் பற்றி 'மாதி' என்னும் புதினமொன்றினை இயற்றுயுள்ளார் என்னும் தகவலே அது. கூடவே மகிழ்ச்சியை அதிகரிக்க இன்னுமொரு தகவலையும் பகிர்ந்துள்ளார். அப்புதினம் தற்போது பரிசல் பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ள தகவல்தான் அது. நூலினை வாங்க விரும்பினால் பின்வரும் இணைய முகவரியுடன் தொடர்புகொள்ளுங்கள்: நாவல் 'மாதி' 

முனைவர் சுனில் ஜோகி எனக்கு அனுப்பிய மின்னஞ்சலை ஒரு தகவலுக்காக இங்கு உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்:
 
பெருமதிப்பிற்குரிய ஐயாவிற்கு வணக்கம். ஐயா நீலகிரி படகர் இன மக்களைப்பற்றி "மாதி" எனும் தலைப்பில் புதினம் ஒன்றினை இயற்றியுள்ளேன். இது படகர் இனமக்களைப்பற்றி வெளிவந்த முதல் இனவரைவியல் புதினமாகும். மேலும் இது படகர்களின் அகவயத்தார் இயற்றிய முதல் புதினமாகும். இந்த நாவலை பரிசல் பதிப்பத்தார் வெளியிட்டுள்ளனர். என் 20 ஆண்டுகளுக்கு மேலான படகர்கள் குறித்த ஆய்வு அனுபவத்தில், அவர்களின் தொல்குடி வாழ்வினை வெளிப்படுத்தும் வண்ணம் இயற்றியுள்ள இந்தப் புதினத்தின் வெளியீட்டுத் தகவலை எனை தொடர்ந்து ஊக்கப்படுத்தும் தங்களுக்கு அறிவிக்க விரும்புவதோடு கடமைப்பட்டுள்ளேன். தங்களின் மேலான ஊக்கத்திற்கு நன்றிகள் நாளும்.
 
நூலினை வாங்க விரும்பினால் பின்வரும் இணைய முகவரியுடன் தொடர்புகொள்ளுங்கள்: நாவல் 'மாதி' 
 
 
           Dr G.Suniljoghee
           Assistant Professor
           kumaraguru college of
           Liberal Arts and Science,
           saravanampatti
           coimbatore
           Ph - 9159383919
           இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.