தமிழ் ஆர்வலர் அனைவருக்கும் வணக்கம்

பன்னாட்டுத் தமிழியற் கருத்தரங்கு அழைப்பிதழ்! தலைப்பு: “திருக்குறள் கூறும் அறம்”!

சுவாமி விபுலாநந்தர் தமிழ் ஆய்வு மையம் கனடா மாதந்தோறும் நடத்தும் தமிழியல் ஆய்வரங்கத்திற் பங்குபெறுமாறு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். அனைவரும் பங்குபெறுவதற்கு வாய்ப்பாக ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வாரம் ஞாயிற்றுக்கிழமை (கனடா நேரம் ) காலை 10.00 மணிக்கு இதனை ஒழுங்கு செய்துள்ளோம். இவ்வாய்வரங்கிற் பங்குகொண்டு, கருத்துரை வழங்குமாறும் கேட்டுக்கொள்கிறோம். இம்மாதம் நடைபெறும் கருத்தரங்கு பற்றிய முழு விபரமும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அழைப்பிதழில் உள்ளது.

அனைவரும் இணைக. ஓத்துழைப்பு நல்குக. தமிழால் இணைவோம் - தமிழ்மொழி பேணுவோம்.

அன்புடன்
பேராசிரியர் பாலசுந்தரம் இளையதம்பி.
தலைவர், சுவாமி விபுலாநந்தர் தமிழ் ஆய்வு மையம் கனடா