விதை குழுமத்தின் தோழமைகளுக்கு வணக்கம், விதை குழுமம் செப்ரம்பர் மாதத்தில் 12, 19, 26 ஆகிய திகதிகளில் தனது நிகழ்வுகளை ஒருங்கிணைக்க இருக்கின்றது.  இந்நிகழ்வுகளில் நீங்களும் கலந்துகொள்வதோடு ஆர்வமுள்ளாவர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்.

நிகழ்வு 01
அறிமுகமும் உரையாடலும் - நிகழ்வு 03

நூலகங்கள் என்பவை வெறும் கட்டடங்களும் புத்தகங்களும் அல்ல, அவை சமூகத்தின் உயிர்ப்பான ஓர் அங்கமாகவும் சமூக முன்னேற்றத்திற்கான கருவிகளில் ஒன்றாகவும் இருப்பன என்கிற புரிதலை அறிவுறுத்திவரும் மிகச்சிலரில் நூலியலாளர் என். செல்வராஜா முக்கியமான ஒருவர். கிராமிய நூலகங்கள் குறித்தும் சிறுவர் நூலகங்களின் உருவாக்கம் குறித்தும், பட்டியலாக்கம், ஆவணமாக்கல் செயற்பாடுகள், நூலகர்களுக்கான வழிகாட்டல்கள் என்பவை சார்ந்ததுமாக அவரது செயற்பாடுகள் நாற்பதாண்டுகளுக்கு மேலாகத் தொடர்பவை. ஈழத்து நூல்களின் விபரப்பட்டியலான நூல் தேட்டத்தின் 15வது தொகுதி இவ்வாண்டின் ஆரம்பப்பகுதியில் வெளிவந்திருக்கின்றது.

'எங்கட புத்தகங்கள்' வெளியீடாக இவ்வாண்டு வெளிவந்த என். செல்வராஜா அவர்களது “நமக்கென்றொரு பெட்டகம்” என்கிற நூலின் அறிமுகத்துடன் அதன் தொடர்ச்சியாக கிராமிய நூலகங்களின் தேவைகள் குறித்தும் சமூக அபிவிருத்தியில் அவற்றின் வகிபாகம் குறித்ததுமாக விதை குழுமம் ஒருங்கிணைக்கும் ”அறிமுகமும் உரையாடலும்” தொடரின் மூன்றாவது நிகழ்வு நடைபெற இருக்கின்றது.

ஆரம்பப் பகிர்வுகள்:

கலாநிதி. திருமதி. கல்பனா சந்திரசேகர்
(நூலகர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்)
அருண்மொழிவர்மன்
(செயற்பாட்டாளர், விதை குழுமம்)

உரையும் உரையாடலும்:
“கிராமிய நூலகங்களும் அவற்றின் சமகாலத் தேவைகளும்”
என். செல்வராஜா
(நூலியலாளர்)

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:

கிரிசாந்
(செயற்பாட்டாளர், விதை குழுமம்)

காலம்: ஞாயிற்றுக்கிழமை, செப்ரம்பர் 12, 2021
நேரம்: இலங்கை நேரம் இரவு 7 மணி
ரொரன்றோ நேரம் காலை 10 மணி
இங்கிலாந்து நேரம் பிற்பகல் 3 மணி
நிகழ்விற்கான Zoom இணைப்பு  https://us02web.zoom.us/j/85432732925
 

நிகழ்வு 02

அறிதலும் பகிர்தலும் - நிகழ்வு 07


அரசியலும் அரசியல் விஞ்ஞானமும்

‘அரசியலும் அரசியல் விஞ்ஞானமும் சமகால அறிமுகம்’ என்னும் நூல் பேராசிரியர் ஜயதேவ உயன்கொட POLITICS AND POLITICAL SCIENCE – A CONTEMPORARY INTRODUCTION என்ற தலைப்பில் எழுதிய ஆங்கில நூலின் தமிழ் மொழி பெயர்ப்பாகும். மாலினி பாலமயூரன் அவர்களின் மொழிபெயர்ப்பில் அமைந்த இந்நூல் இலங்கை சமூக விஞ்ஞானிகள் சங்கத்தினால் (SSA) வெளியிடப்பட்டுள்ளது (2018). க.பொ.த (உயர்தரம்) வகுப்பில் அரசியல் விஞ்ஞானத்தைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும், பல்கலைக்கழகங்களில் முதற்கலைத் தேர்வு (GAQ) வகுப்பில் கற்கும் மாணவர்களுக்கும் வழிகாட்டியாக அமையும் வகையில் எழுதப்பட்ட இந் நூல் அரசியல் விஞ்ஞானக் கற்கைத்துறை பற்றிய விரிந்தவொரு பார்வையை வழங்குகிறது.

அரசியல் பற்றிய கற்கை அணுகுமுறைகள் பல உள்ளன. அவற்றுள் அரசியல் தத்துவ அணுகுமுறை முதல் பின்நவீனத்துவ அணுகுமுறை வரையான எட்டு அணுகுமுறைகளைத் தேர்ந்து அவை பற்றிய விரிவான விளக்கங்களை நூலாசிரியர் தருகின்றார். ஒவ்வொரு அணுகுமுறை பற்றியும் விளக்கும் பொழுது, அவை ஒவ்வொன்றினதும்

அ) கோட்பாடுகள் (THEORIES)
ஆ) எண்ணக்கருக்கள் (CONCEPTS)
இ) வெளிப்பாட்டு மொழி, அருஞ்சொற்கள் தொடர்கள் (LANGUAGE)
ஈ) ஆய்வுமுறைகள் (METHODS)
உ) அனுமானங்கள் (ASSUMPTIONS)

என்பவற்றை தெளிவுற எடுத்துக்கூறுகிறார். நோக்குமுறைகளை ஒப்பீடு செய்தும் கருத்துரைக்கின்றார்.

அரசியல் விஞ்ஞானம் என்ற கற்கைத்துறை மட்டுமல்லாது, சமூக விஞ்ஞானக் கற்கைத்துறைகள் அனைத்தையும் விரிந்த நோக்கில் புரிந்து கொள்ள உதவும் இந் நூலின் அறிமுகமாக அமையும் உரையை சமூக விஞ்ஞான ஆய்வறிஞர் கந்தையா சண்முகலிங்கம் அவர்கள் நிகழ்த்தவுள்ளார். நிகழ்ச்சியை ச. சத்தியதேவன் ஒருங்கிணைக்கவுள்ளார்.

திகதி - ஞாயிற்றுக்கிழமை, செப்டெம்பர் 19, 2021.
நேரம் - இலங்கை நேரம் இரவு 7.30 மணி
ரொரன்றோ நேரம் காலை 10:00
இங்கிலாந்து நேரம் பிப 3:00

இணைப்பு : https://us02web.zoom.us/j/82785207411
Meeting ID: 827 8520 7411



நிகழ்வு 03

காலமும் கருத்தும் பயில்களம் 02


மரபுரிமைச் செயல்வாதங்கள் : அறிமுகமும் அரசியலும்
திகதி - ஞாயிற்றுக்கிழமை, செப்டெம்பர் 26, 2021.
நேரம் - இலங்கை நேரம் இரவு 7.30 மணி
ரொரன்றோ நேரம் காலை 10:00
இங்கிலாந்து நேரம் பிப 3:00

நிகழ்விற்கான Zoom இணைப்பு https://us02web.zoom.us/j/82785207411

தோழமையுடன்
விதை குழுமம்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.