சிரித்திரன் சஞ்சிகை மீண்டும் வெளிவருவது தெரிந்ததே. தற்போது உலகமெங்கும் விற்பனையாகும் சிரித்திரன் இதழ்களை  மக்களிடத்தில் கொண்டு செல்வதற்கு இலங்கையில் புது வழியொன்றினைக் கையாள்கின்றார்கள். இளைஞர்கள் எவ்விதம் சிரித்திரன் சஞ்சிகையை மக்களிடத்தில் கொண்டு செல்கின்றார்கள் என்பதை விளக்கும் புகைப்படங்கள் இவை. இவற்றை அனுப்பிய சிரித்திரன் ஆசிரியரின் மகன் ஜீவகனுக்கு நன்றி.

பீனிக்ஸ் பறவையாக  மீண்டும் உயிர்த்தெழுந்துள்ளது சிரித்திரன் சஞ்சிகை. இவ்வுயிர்த்தெழலின் பின்னால் பலரின் கடுமையான உழைப்பிருப்பதையும் அறிந்துகொள்ள முடிகின்றது. இளைஞர்களின் பங்கு இவ்வுயிர்த்தெழலில் இருப்பதையும் காண முடிகின்றது. இவை அனைத்தும் சஞ்சிகையின் வெற்றிக்குக் கட்டியங் கூறி நிற்கின்றன. வாழ்த்துகள்.