விதை குழுமத்தின் தோழமைகளுக்கு வணக்கம்,

விதை குழுமம் ஒருங்கிணைக்கும் அறிதலும் பகிர்தலும் நிகழ்வு 5, ஞாயிற்றுக்கிழமை ஜூலை 18, 2021 அன்று இலங்கை நேரப்படி மாலை 8 மணிக்கு இடம்பெறும்.  இந்நிகழ்வில் கலந்துகொள்வதுடன் தொடர்ந்து இடம்பெறும் உரையாடலிலும் பங்கேற்கும்படி தோழமையுடன் அழைக்கின்றோம்.

எச். எல். செனிவிரத்தினவின் எழுத்துகளை அறிதலும் பகிர்தலும்

வர்ஜீனிய பல்கலைக்கழகத்தின் மானிடவியல் துறையின் தகைசார் பேராசிரியராகிய எச்.எல். செனிவிரத்தின இலங்கைபைப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 1950களின் பிற்பகுதி முதல் 1972 வரை விரிவுரையாளராகக் கடமையாற்றியவர். அதனைத் தொடர்ந்து 1972 - 2010 காலப்பகுதியில் அமெரிக்காவின் வர்ஜீனியா (Virgnia) பல்கலைக்கழகத்தின் மானிடவியல் பேராசிரியராகப் பணிபுரிந்தார். இவர் சமயமும் அரசியலும், சோசலிசம், ஜனநாயகமும் சந்தைப் பொருளாதாரமும், மனித உரிமைகள், இனத்துவமும் தேசியவாதமும், சினிமா, இசை, நடனம் ஆகிய பல்வேறுவிடயங்களில் பரந்துபட்ட புலமை அக்கறை உடையவராய் இருந்தவர். இவரது புலமை நாட்டம் பின்வரும் 3 விடயங்களில் குவிமையம் கொண்டது.

• சமயமும் அரசியலும்
• பௌத்தமும் அரசும்
• இனத்துவமும் சமயமுரண்பாடுகளும்

1999 ஆம் ஆண்டில் சிக்காகோ பல்கலைக்கழக அச்சக வெளியீடான The Work of Kings - The New Buddhism in Srilanka, 1978 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வெளியீடாக அமைந்த Rituals of the Kandyan State என்ற இருநூல்களும் இவர் பதிப்பித்த கட்டுரைத் தொகுதிகள் சிலவும் இவருக்கு உலகின் பெருமதிப்புக்குரிய மானிடவியலாளர்களில் ஒருவர் என்ற தகுதியை வழங்கின. வறுமை, சமத்துவமின்மை, சமூக நீதி, பாரபட்சம், வன்முறை, மனித உரிமை மீறல்கள் ஆகியன குறித்து இவர் மனச்சாட்சியை உறுத்தும் ஆக்கங்களை எழுதி வெளியிட்டுள்ளார். இன நல்லுறவுக்காக உழைக்கும் செயற்பாட்டாளராகவும் இயங்கிவருகிறார். ஸ்டான்லி தம்பையா, கணநாத் ஒபயசேகர ஆகிய மானிடவியலாளர்கள் குழுவில் வைத்துப் பெருமதிப்புடன் நோக்கப்படும் அறிஞராக விளங்கும் இவர், தமிழ் அறிவுலகில் பெரிதும் அறியப்படாதவராகவே இருந்து வருகிறார்.

விதை குழுமம் ஒருங்கிணைக்கும் அறிதலும் பகிர்தலும் தொடர் நிகழ்வின் ஐந்தாவது நிகழ்வில் எச்.எல். செனிவிரத்தினவின் எழுத்துகள் என்ற தலைப்பில் சமூக விஞ்ஞான ஆய்வறிஞர் கந்தையா சண்முகலிங்கம் உரையாற்றுவார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு ச. சத்தியதேவன்.

திகதி - ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 18, 2021.
நேரம் - இலங்கை நேரம் இரவு 8 மணி
ரொரன்றோ நேரம் காலை 10:30
இங்கிலாந்து நேரம் பிப 3:30
இணைப்பு - https://us02web.zoom.us/j/82785207411
Meeting ID: 827 8520 7411

தோழமையுடன்
விதை குழுமம்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.