அறிதலும் பகிர்தலும் 04 இற்கான அழைப்பு: எம். என். சிறினிவாஸின் (1916 - 1999) எழுத்துகளை அறிதலும் பகிர்தலும்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இந்திய சமூகவியலின் முக்கியமான ஆளுமைகளில் ஒருவரான எம். என். சிறினிவாஸ் இந்திய சமூகவியலை புத்தக நோக்கில் இருந்து (Book View) கள நோக்கிற்கு (Field View) திருப்பியவர்.

இந்தியாவில் வெவ்வேறு பகுதிகளில் கள ஆய்வுகளை நிகழ்த்துவதன் மூலம் இந்தியாவின் கிராமிய சமூகங்கள் பற்றிய கள அனுபவங்கள் மூலமான அறிவைக்கொண்டு இந்திய சமூகம் பற்றிய ஆய்வுக்கான பல எண்ணக்கருக்களை (Concepts) இவர் முன்வைத்தார்.  சமஸ்கிருதமயமாதல், மேலாதிக்கச் சாதி, மேற்குமயமாதல், தூய்மையும் துடக்கும் ஆகியன இவரின் எழுத்துகள் மூலம் 1960 களில் பிரசித்தமான எண்ணக்கருக்களாகும்.

Religion and Society Among the Coorgs of South India (1952), Caste in Modern India and Other Essays (1982) ஆகிய நூல்கள், பலகட்டுரைகள் என்பன மேற்குறித்த எண்ணகருக்கள் பற்றிய  விவாதங்களைத் தொடக்கி வைத்தன.  ராம்புர என்ற கிராமத்தைப் பற்றிய ஆய்வாக அமைந்த "The Remembered Village"              (நினைவில் நிற்கும் கிராமம்) 1976 இல் வெளியாயிற்று.  ரட்கிளிவ் பிரவுண் என்ற பிரித்தானிய மானிடவியலாளரின் மாணவரான சிறினிவாஸ் அமைப்பியல் செயல்வாதம் (Structural Functionalism) என்ற நோக்குமுறையை இந்திய சமூகவியல் / மானிடவியல் ஆய்வுகளில் புகுத்தியவர்.

சிறினிவாஸ் எழுத்துகள் பற்றிய இந்த உரையாடலில் இலங்கைத் தமிழ்ச் சமூகத்தின் புரிதலுக்கு இச்சிந்தனையாளரின் எண்ணக்கருக்களும் நோக்குமுறையும் பொருத்தப்பாடு உடையனவா என்பதும் கவனம் பெறும்.  இவ்வுரையை சமூக விஞ்ஞான ஆய்வறிஞர் கந்தையா சண்முகலிங்கம் நிகழ்த்த இருக்கின்றார்.  நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க இருப்பவர் ச. சத்தியதேவன்.  விதை குழுமம் ஒருங்கிணைக்கும் அறிதலும் பகிர்தலும் என்கிற இத்தொடரில் இதற்கு முன்னர் நியூடன் குணசிங்க, கணநாத் ஒபயசேகர, டெனிஸ் மக்கில்வ்ரெய் ஆகிய மானிடவியலாளர்கள் பற்றி இத்தொடரில் முன்னர் ஆராயப்பட்டது.
 
இந்நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 13, 2021 அன்று இடம்பெறும்.

நேரம் - இலங்கை நேரம் இரவு 8 மணி
      ரொரன்றோ நேரம் காலை 10:30
      இங்கிலாந்து நேரம் பிப 3:30

Zoom இணைப்பு -  https://us02web.zoom.us/j/82785207411
 
தோழமையுடன்
விதை குழுமம்


விதை குழுமத்தின் நண்பர்களுக்கு தோழமை நிறைந்த வணக்கம்,

விதை குழுமம் ஒருங்கிணைக்கும் அறிதலும் பகிர்தலும் தொடரின் மூன்றாவது நிகழ்வில் டெனிஸ் மெக்கீல்வ்ரெய்யின் எழுத்துகளைப் பற்றிய அறிமுகமும் உரையாடலும் ஞாயிற்றுக்கிழமை, மே 16, 2021 அன்று Zoom ஊடாக இடம்பெற்றது.

அமெரிக்காவின் கொலரடோ பல்கலைக்கழகத்தின் மானிடவியல் பேராசிரியரான Dennis B McGilvray இலங்கையிலும் இந்தியாவிலும் உள்ள தமிழ் முஸ்லிம் சமூகங்களின் கட்டமைப்பு, சாதிமுறை, சமயம், சடங்குகள், பண்பாடு என்பன பற்றி இனவரையியல், மானிடவியல் ஆய்வுகளை எழுதி வெளியிட்டுள்ளார். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் 1973 ஆம் ஆண்டில் இவர் கள ஆய்வினை நிகழ்த்தினார். 1974-78 காலத்திலும் 1993 இன் பின்னரும் பல தடவைகள் கள ஆய்வுக்காக மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிற்கு மக்கீல்வ்ரெய் வருகைதந்தார். இவரது முப்பதாண்டுகளுக்கு மேற்பட்ட ஆய்வுகளின் பயனான Crucible of Conflict என்ற பெரும்படைப்பு 2008 ஆம் ஆண்டில் வெளியாயிற்று. பல ஆய்வுக்கட்டுரைகளும் இவரால் நாற்பதாண்டுகளுக்கு மேற்பட்ட காலத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மேற்குறித்த நூல் கிழக்கிலங்கை மக்களின் சாதிக்கட்டமைப்பு, தாய்வழிக்குடிமுறை, சமயச் சடங்குகள், இனத்துவ அடையாளம், சமூக பொருளாதார வாழ்க்கை என்பனபற்றி விரிவாக ஆராய்வதாக அமைந்தது. இந்நூலின் மறுபதிப்பை 2011 ஆம் ஆண்டில் கொழும்பு SSA நிறுவனம் வெளியிட்டுள்ளது. இவரது படைப்பில் பின்வரும் படைப்புகள் முக்கியமானவை: Caste Ideology and Interaction (Ed), Tsunami Recovery in Sri Lanka: Ethnic and Regional Dimensions (Co. Ed), Symbolic Heat: Gender, Health and Worship Among the Tamils of South India and Sri Lanka, Rethinking Muslim Identity in Sri Lanka, A House for Every Daughter: Matrilocal Marriage in Sri Lanka and Beyond (In print) இறுதியாகக் குறிப்பிட்ட நூல் அச்சில் உள்ளது. இந்நூற் தலைப்பினை ”ஒவ்வொரு பெண்பிள்ளைக்கும் ஒரு சீதன வீடு : இலங்கையில் தாய்வழி வாழிடமும் திருமண முறையும்” என மொழிபெயர்த்துக்கொள்ளலாம்.

இந்நிகழ்வின் காணொலிப்பதிவினை விதை குழுமத்தின் யூட்யூப் தளத்தில் பின்வரும் இணைப்பில் பார்க்கலாம்.

https://youtu.be/AgabmaLX8WY

இந்நிகழ்ச்சியின் காணொலியைப் பார்த்த டெனிஸ் மக்கீல்வ்ரெய் அவர்கள் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு வாழ்த்துச் செய்தியுடன் பின்வரும் மடலினையும் அனுப்பியிருந்தார்.  அவருக்கு நன்றி கூறிக்கொள்வதுடன் அவரது வாழ்த்துச் செய்தியையும் பகிர்ந்துகொள்கின்றோம். 

டெனிஸ் மக்கீல்வ்ரெய் குறிப்பிட்டிருப்பதுபோல அவரது எழுத்துக்களைப் படிக்க ஆர்வமுள்ளவர்கள் அவற்றை academia.edu என்கிற தளத்தில் அவற்றை இலவசமாகப் பெற்றுக்கொள்ளமுடியும்.  மேலதிக வாசிப்பிற்கு டெனிஸ் மெக்கீல்வ்ரெய் பற்றிய தமிழில் வந்த சில கட்டுரைகளையும் இத்துடன் பகிர்ந்துகொள்கின்றோம்.

·         கொல்லனின் உலைக்களம் : இலங்கையின் கிழக்குக் கரையோரத்தின் தமிழர்களும் முஸ்லிம்களும் (மக்ஜில்வ்ரேயின் புதிய நூல் - ஓர் அறிமுகம்) - கருத்தியல் என்னும் பனிமூட்டம் - க. சண்முகலிங்கம், குமரன் பதிப்பகம், 2010

·         மேற்படி கட்டுரை இலங்கையின் இனவரையியலும் மானிடவியலும் - க. சண்முகலிங்கம், குமரன் பதிப்பகம் நூலிலும் இடம்பெற்றுள்ளது கூடம் இதழ் 13 இலும் (நூலக இணைப்பு https://noolaham.net/project/149/14805/14805.pdf) இடம்பெற்றுள்ளது.

தோழமையுடன்
விதை குழுமம்
 
https://www.facebook.com/ourwings13
https://vithaikulumam.com/

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.