சி.வி.வேலுப்பிள்ளை அவர்களின் எழுத்துக்களையும் அவரது பங்களிப்பினையும் பேசுவது என்பதே, ஒரு நூற்றாண்டுக்கு மேலான இலங்கை மலையக தோட்டத் தொழிலாளர்களின் துயரார்ந்த வாழ்வைப் பேசுவதுதான்! காலனியத்துவ காலம் தொடக்கம் , நாளொன்றுக்கான 1000 ரூபா கூலி இதுவரை மறுக்கப்படுவது , மஸ்கெலியா “ஒல்டன்”தோட்டத் தொழிலாளர்களான 7 ஏழை பெண் தொழிலாளர்கள் உட்பட 8 பேர் சிறைவைப்பு வரை அம்மக்களின் அடிப்படை தேவைகளுக்கான குரல்கள் இன்னும் கவனத்தில் கொள்ளப்படாது மட்டுமல்ல, அம்மக்கள் மீதான ஒடுக்குமுறை பல்வேறு வழிகளிலும் தொடரும் சூழலில், அம்மக்கள் மத்தியில் இருந்து தோன்றிய முதல் தலைமுறை எழுத்தாளரும் , தொழிற்சங்கவாதியும் , அரசியல் பிரதிநிதியுமான சி.வி.வேலுப்பிள்ளை பற்றி இப்போது பேசுவதும், அவரது எழுத்துக்களை மீள வாசிப்பதும் முக்கியமானதாகும்!


இந்த நிகழ்வில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளோரும் ZOOM ID தேவையானோரும்  தொடர்பு கொள்ளுங்கள்!

ZOOM வழியான ,மூன்றாவது தொடர் கலந்துரையாடல்

 - சி. வி.வேலுப்பிள்ளை

காலம் - 11 ஏப்ரல்  2021( ஞாயிறு)

3  PM London, 4PM Europe ,7.30 PM Sri Lanka  & India, 10AM Canada

உரையாளர்கள்

* எம் .ஜேம்ஸ் விக்டர்
கல்வியலாளர், எழுத்தாளர்

* லக்ஸ்மன் ஜோதிகுமார்
சட்டவாளர், சிற்றிதழாசிரியர்

* மு. சிவலிங்கம்
எழுத்தாளர், அரசியல் செயற்பாட்டாளர்

வழிப்படுத்தல்
எம். பெளசர்

மறைந்த இலங்கை தமிழ்படைப்பாளிகள்/ படைப்புகள்

ஆய்வு/ மதிப்பீடு/ அனுபவங்கள் .


இந்த நிகழ்வில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளோரும் ZOOM ID தேவையானோரும்  தொடர்பு கொள்ளுங்கள்!

தொடர்புகளுக்கு...

0044 7817262980
Email. இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.-சி. வி.வேலுப்பிள்ளை

1930களிலேயே எழுதத் தொடங்கியவர் சி.வி.

"விஸ்மாஜினி " (vismajini) என்னும் இவருடைய கவிதை நாடக நூல் 1931 ல் வெளியிடப்பட்டுள்ளது. " வழிப்போக்கன் " ( way fairer) என்னும் வசன கவிதை நூல் அடுத்த வெளிவந்துள்ளது. 1947க்கு முன்னரே இவ்விரு கவிதை நூல்களை வெளியிட்ட சி.வி.1948 ல் சுதந்திரம் பெற்ற இலங்கையின் முதல் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தலவாக்கலை பகுதியின் பாராளுமன்றப் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.பிரஜா உரிமைச் சட்டம் அமுல் செய்யப்பட்ட மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்ட ஆண்டும் இதுதான்.  1954 இல் (in Ceylon's tea garden's) என்னும் கவிதை நூல் வெளிவந்தது. சி.வி க்கு ஒரு இலக்கிய அந்தஸ்தையும் ,பாராட்டுதலையும் ஏகோபித்த புகழையும் பெற்றுக்கொடுத்த கவிதை நூல் இது. " தேயிலைத் தோட்டத்திலே " எனும் இதன் தமிழ் மொழிபெயர்ப்பு 1969 வெளியிடப்பட்டது.  மொழி பெயர்த்தவர் கவிஞர் சக்தி பாலையா. இந்த ஆங்கில நூல் பற்றிய பதிப்புரையில் இலங்கையின் தாகூர் சி.வி. என்றெழுதியது கல்கி இதழ்.

" எல்லைப்புறம் " ( ஆங்கிலம் ) " வாழ்வற்ற வாழ்வு" ( ஆங்கிலம் ) " வீடற்றவன் " (தமிழ் ) பார்வதி ( தமிழ்) " இனி படமாட்டேன் " ( தமிழ்)  என்னும் ஐந்து நாவல்களையும் சி.வி எழுதி உள்ளார். "Born to lebour " என்னும் மலையக மக்களின் வாழ்வுக் காட்சிகள் 1970 ல் எம்.டி.குணசேன பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்டது. இந்த நூலைத்தான் "தேயிலை தேசம் " என்ற பெயரில் மு.சிவலிங்கம் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். ஆங்கிலத்தில் தன் படைப்புக்களை அதிகம் எழுதியவர் இவர். 14.09.1914 ல் பூண்டுலோயா மடக்கும்புர தோட்டத்தில் பிறந்த இவர் 19.11.1984ல் கொழும்பில் அமரர் ஆனார் . ( மு.சிவலிங்கத்தின் “தேயிலை தேசம் “மொழிபெயர்ப்பு நூலின் அட்டைக்குறிப்பில் இருந்து)

00000

ஆர்வமுள்ளோர்,உங்கள் நட்பு வட்டத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!