ஜீவநதியின் 150ஆவது இதழ் : 'ஈழத்து நாவற் சிறப்பிதழ்"
எழுத்தாளர் க.பரணீதரனை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும் ஜீவநதி சஞ்சிகையின் 150ஆவது இதழ் (மார்ச் 2021) 'ஈழத்து நாவல்  விமர்சனச் சிறப்பித'ழாக வெளியாகியுள்ளது. ஆசிரியர் க.பரணீதரனின் கடுமுழைப்பில் வெளியாகியுள்ள சிறப்பிதழ் சிறப்பாக வெளியாகியுள்ளது. வாழ்த்துகள். மேற்படி சிறப்பிதழில் எழுத்தாளர் முருகபூபதி எனது 'குடிவரவாளன்' நாவல் பற்றி எழுதியுள்ள விமர்சனமும் வெளியாகியுள்ளது. கட்டுரையை முழுமையாக ஜீவநதியின் 150ஆவது இதழில் வாசிக்கலாம். ஜீவநதி 150 ஆவது இதழை வாங்க  'ஜீவநதி' ஆசிரியர்  க.பரணீதரன் அவர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

இது பற்றிய இதழாசிரியர் க.பரணீதரனின் அறிவித்தல் வருமாறு:

ஜீவநதி 150 'ஈழத்து நாவல் விமர்சன சிறப்பிதழ் (2000-2020) ;  விலை - 1200.00

தொடர்புகளுக்கு - 0775991949 அல்லது comercial bank - nelliady - a/c - 8108021808 பணத்தை வைப்பு செய்து 0775991949 மேற்குறித்த இலக்கத்துக்கு வைபர் மூலம்  வைப்பு செய்த receite ஐயும்  விலாசத்தையும் .அனுப்பினால் புத்தகம் அனுப்பப்படும். (ஆயுள் சந்தாதாரருக்கு அனுப்பப்படும் பணம் அனுப்ப தேவை இல்லை. ஆண்டு சந்தாவுக்குள் இந்த இதழ் உள்ளடங்காது) உள் நாட்டில் அஞ்சல் இலவசம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.