
எழுத்தாளர்கள் கூடுகை / விருது வழங்கும் விழா 20/10/26 மாலை நடைபெற்றது. சேவ் அலுவலகம், 5 ஐஸ்வர்யா நகர், கேஎன்பி காலனி, திருப்பூர் ( தாராபுரம் சாலை, கலைஞர் அறிவாலயம் அருகில்). தலைமை: வியாகுலமேரி ( இயக்குனர் சேவ் ).
முன்னிலை : சுப்ரபாரதிமணியன். எழுத்து அனுபவம் : கருத்தரங்க உரை விருது பெற்றக் கீழ்க்கண்ட எழுத்தாளர்கள் விருதைப் பெற்றுக்கொண்டு பேசினார்கள்:
வாழையூர் குணா / க.வானமாமலை/ கார்த்தி டாவின்சி / எஸ் மோதிலால் நேரு / பா சத்தியமோகன் / ஜி சிவக்குமார் சுப்ரமணியன் கில்லிப்பாலம் / மருத்துவர் த ரவிக்குமார் தமிழ்ச்செல்வி ராஜ ராஜன் /லதிகா விவேகானந்தன் / கிளமெண்ட் விக்டர்/ பெரியார் விஜயன் / யுவராஜ் சம்பத் ஞானபாரதி / காங்கேயம் அப்பு / /மானூர் புகழேந்தி / யாழ் எஸ் .ராகவன் / சாந்தா கோவிந்தன் /ஜா. சலேத் / விசித்திர கவி / நிழலி / இ.தாஹிர் பாட்சா / கே ஜெயலட்சுமி/ முகில் தினகரன் / வே நெடுஞ்செழியன் / வானதி சந்திரசேகரன் சாந்தா தத் / பாளை கோ.மாணிக்கம்/ / இளங்கோ ஓடை / கருமலை பழம் நீ / அறிவுச் செல்வன் / வலங்கைமான் நூர்தீன் வலம்புரி லேனா / வீரன் வயல் வீ. உதயகுமாரன் / . மோகன்குமார் எஸ். குழித்துறை / அரவிந்தன் ரவிச்சந்திரன்
கனவு இலக்கிய அமைப்பு / சேவ் ( Save ) இனைந்து இந்த விழாவை நடத்தியிருந்தன.சுசீலா, உஷா, கிரிஜா சுப்ரமணியன் ஆகியோர் ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள்
ஓவியர் தமிழன் ம. சின்னசாமி அவர்களின் கோட்டோவியக்கண்காட்சி நடைபெற்றது. அவருக்கு திருச்சி சீ. லெட்சுமி நாராயணன் பொன்னாடை போர்த்தி அவரின் பணிகளைப் பாராட்டினார்.
கருத்தரங்கை காடு சூழலியல் ஆசிரியர் பொன்மூர்த்தி துவங்கிவைத்தார். எழுத்தாளர்கள் செந்தமிழினியன், ஆரோ,மயில் ஜானகி, கேயெஸ் யுவராஜ் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்
எழுத்தாளர்கள் கீழ்க்கண்டத் தலைப்புகளில் உரை நிகழ்த்தினர்
கவிதை அரசியல்
சோறு அரசியல்
கை வரை ஓவியங்கள் மதிப்பிழந்து விட்டனவா,.
ஆடியோ புத்தகங்கள் இன்றைக்கு ஏன் தேவை
தொல்லியல் அரசியலாகி விட்டதா.
இன்னும் திருக்குறளை பரப்ப வேண்டி உள்ள அவலம் ஏன்
பெண்ணெழுத்து தீவிரமாக உள்ளதா நியாயமாக உள்ளதா
விளிம்பு நிலை மக்களின் வாழ்வியல் தமிழில் சரியாக கொண்டு வரப்பட்டுள்ளதா
பெண் அனுபவம் எப்படி படைப்பாகிறது
மொழிபெயர்ப்பு இலக்கியம் தமிழுக்கு சவால் விடுகிறதா
சுற்றுச்சூழல் இலக்கியம் போதுமானதாக வருகிறதா
திரைப்பட அனுபவங்கள் இலக்கியத்திற்கு சவாலா..
தமிழ் நாடகம் தேய்ந்து கட்டெருமபாகி விட்டதா
“ தமிழ்ச்சமூகம் கடந்த பத்தாண்டுகளில் பதற்றமானதாக மாறி விட்டது. காரணம் சுயநலமான அரசியல்வாதிகள், அதீதமான கைபேசி பயன்பாடு, போதைப்பபழக்கம் போன்றவை காரணம். கைபேசி விளையாட்டு, சூதாட்டம் போன்றவை இளைஞர்கள் மனநிலையை வெகுவாக பாதிக்கிறது.கிராமங்களில் கூட பெணக்ளிடம் போதைப் பழக்கம் அதிகமாக இருக்கிறது என்பதை ஆய்வுகளின் அதிர்ச்சி அறிக்கைகள் சொல்கின்றன. இவற்றிலிருந்து விடுபட புத்தக வாசிப்பும் இலக்கிய ஈடுப்பாடும் முக்கியம்.” என்று சேவ் இயக்குனரும் சமூக ஆய்வாளருமான வியகுல மேரி விருதுகளைத் தந்து விழா கருத்தரங்கில் பேசும் போது குறிப்பிட்டார்.
எத்திராஜ், நன்றியுரை வழங்கினார்.கவிஞர் ஆரோ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.










