
நாள்: 19, 20 செப்டம்பர், 2026 | இடம்: Bill Hogarth Secondary School, 100 Donald Sim Avenue, Markham, ON L6B 0R4
மாநாட்டிற்கான நோக்கம்
தொல்காப்பியத்தின் பெருமையைத் தமிழினத்தோடு பிற சமூகத்தினரும் அறியும்படிச் செய்தல். தொல்காப்பியத்தின் அனைத்துச் சிறப்புகளையும் ஒருங்கே தொகுத்தல். இளைஞர்கள் மத்தியில் “தொல்காப்பியத்தை நாம் ஏன் கற்க வேண்டும்” என்று எழும் வினாவிற்குப் பரந்த விளக்கம் கொடுத்தல். தொல்காப்பியத்தைக் கற்க-கற்பிக்க, கொண்டாட-பரவலாக்கம் செய்வதற்கான காரணங்களை முழுமையகாகத் தொகுத்தல். தொல்காப்பியத்தையும் உலகளாவியத் தொல்காப்பிய ஆய்வறிஞர்களையும் ஆய்வுகளையும் இளைய தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்துதல்.

மாநாட்டுக் கருப்பொருள்
தொல்காப்பியத்தை நாம் ஏன் கற்க-கற்பிக்க, கொண்டாட-பரவலாக்க வேண்டும்?
அகராதியியலுக்காக, அரசியலுக்காக, அறத்துக்காக, அறிவியலுக்காக, இசைக்காக, இலக்கண அறிவுக்காக, இலக்கியங்கள் படைப்பதற்காக
இலக்கியப் புரிதலுக்காக, உயிரினங்களுக்காக, உளவியலுக்காக, கட்டமைப்புக்காக, கலைக்காக, கோட்பாடுகளுக்காக, சமய, தத்துவ மரபுகளுக்காக, சமூகவியலுக்காக, சூழலியலுக்காக, தமிழ்-தமிழர் அடையாளத்திற்காக, தகவல் களஞ்சியத்திற்காக, தாவரவியலுக்காக
தொல்காப்பியரின் புலமைக்காக, தொன்மைக்காக, நாடகத்திற்காக, படைப்பிலக்கியத்திற்காக, பண்பாட்டுக்காக, புழங்குபொருள்களுக்காக, மானிடவியலுக்காக, மெய்யியலுக்காக, மொழி வளர்ச்சிக்காக, மொழிக் கற்பித்தலுக்காக, மொழியியலுக்காக, வரலாற்றுக்காக, வாழ்வியலுக்காக (அகம், புறம்), மரபுக்காக (நம்பிக்கை, பழக்கவழக்கம், உணவு, பிற), அன்ன பிற…










