சென்னை: நாகரத்தினம் கிருஷ்ணாவின் மொழிபெயர்ப்பு நூல் வெளியீடும், கோவை தமிழ் பண்பாட்டு மைய ஆதரவில் 'தாயகம் கடந்த தமிழ்' உலக எழுத்தாளர்கள் மாநாடும்!நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்!
 
இரு நிகழ்வுகள்

1. எனது புதிய மொழி பெயர்ப்பு நூல்
2008ல் நோபெல் பரிசுபெற்ற லெ கிளேஸியோவின் (Le Clèzio) தேதி 17-1-2014, சென்னை புத்தக கண்காட்சி அரங்கில் மாலை சுமார் 4 மணி அளவில் 'குற்ற விசாரணை' (Le Procès Verbal) என்ற பெயரில் காலச்சுவடு வெளியீடாக வருகிறது. முதற் படியை திரு பிரபஞ்சன் வெளியிட முனைவர் வெ.சுப. நாயகர், பிரெஞ்சு பேராசிரியர், காஞ்சி மாமுனி பட்டமேற்படிப்பு மையம், புதுச்சேரி, பெற்றுகொள்கிறார்.

2. எதிர் வரும் ஜனவரிமாதம் 20,21, 22 தேதிகளில் கோவை தமிழ் பண்பாட்டு மைய ஆதரவில் 'தாயகம் கடந்த தமிழ் ' என்ற பெயரில் உலக எழுத்தாளர்கள் மாநாடொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, மூன்று நாள்கள் நடக்கும் கருத்தரங்கில் எழுத்தாளர்கள், கல்விப்புலம் சார்ந்தவர்கள் பங்கேற்கிறார்கள் இத்துடன் அழைப்பிதழ் இணைக்கப் பட்டுள்ளது. கீழ்க்கண்ட வலைத்தளத்தில் பிற தகவல்களை அறியலாம். http://www.centerfortamilculture.com/
 
வாய்ப்புள்ளவர்கள் இரு நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.
 
அன்புடன், நா.கிருஷ்ணா
 
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.