தமிழ் இலெமுரியா- தமிழர் திருநாள் சிறப்பிதழ்அன்புடையீர், வணக்கம். தமிழர் திருநாள்-புத்தாண்டு வாழ்த்துகள். தமிழ் இலெமுரியா தை 2045 ( 14 சனவரி  2014) தமிழர் திருநாள் சிறப்பிதழ் நம் இணையத் தளத்தில் வண்ணப் பக்கங்களுடன் வலையேற்றம் செய்யப் பட்டுள்ளது. www.tamillemuriya.com   மகாராட்டிரா மாநிலத்திலிருந்து கடந்த ஆறு ஆண்டுகாலமாக தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் “ தமிழ் இலெமுரியா” எவ்வித வணிக நோக்கமும் இன்றி, தமிழ், தமிழர் நலம், வளம் சார்ந்த சிந்தனைகளை மட்டுமே  தாங்கி வரும் ஒரு மாறு பட்ட மாத இதழ். ஈழம் குறித்து ரவி நாயரின் கட்டுரை, சண்.தவராசா,தோழர் நல்லகண்ணு, சஞ்சீவ்குமார், ம.இலெ.தங்கப்பா, குமணராசன், சுப.கரிகால் வளவன், சீர்வ்ரிசை சண்முகராசன், ’விழிகள்’ நடராசன் ஆகியோரின் கருத்தோவியங்கள், மகராட்டிரா மாநிலத்தில் ஆட்சியர்களாகத் தமிழர்கள் - நேர்முகம், வளமான கவிதைகள் என தித்திக்கும் பொங்கலாய் தமிழர் திருநாள் சிறப்பிதழ் மிளிர்கின்றது.

தாங்கள் "தமிழ் இலெமுரியா" இணையத் தளத்தில்  இலவயமாகப் பதிவு செய்து கொண்டு முந்தைய இதழ்களையும்(மென்படிகள்)  வாசித்துப் பயன் பெற வேண்டுகின்றோம். வன்படிகள்(Hard copy) வேண்டுவோர் தொடர்பு கொள்க. நண்பர்களுக்கும் அறிமுகம் செய்க. தமிழும் நாமும் வேரல்ல, தமிழே நம் வேர்.

கனிவுடன்,
சு.குமணராசன்,
முதன்மை ஆசிரியர்

The Lemuriya Publications,
102, 'B' Wing, Dannis Building,
Veer Savarkar Nagar,
Thane (W) - 400 606.
Maharastra.
Ph: 022 25806298, 25806222
E-mail: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Web : www.tamillemuriya.com

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.