விமர்சன அரங்கம்: ஜெயந்தி சங்கர் கதைகள்!அன்பார்ந்த நண்பர்களுக்கு, வணக்கம். இதுவரை ஜெயந்தி சங்கர் எழுதிய சிறுகதைகளின் முழுத்தொகுப்பு நூலாக்கம் பெற்றுள்ளது. அதனையொட்டி சென்னையில் கேகேநகரில் உள்ள டிஸ்கவரி புக் பேலஸ், முதல் தளத்தில் 2014, ஜனவரி 9ம் தேதி மாலை 5.00 மணியளவில் நடக்க இருக்கும் எளிய விமர்சன அரங்கிற்கு உங்களை அன்போடு அழைக்கிறோம். ஆறு முக்கிய எழுத்தாளர்கள் இவ்வரங்கில் விமர்சிக்க இருக்கிறார்கள். வாய்ப்பிருப்பின், இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொள்ளுங்கள். இத்துடன்  விமர்சன அரங்கிற்கான அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது. இதை உங்கள் நண்பர்கள், தெரிந்த / அறிந்தவர் /வாசகர்/ஊடக வட்டங்களில் பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறோம். புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். மிக்க நன்றி.

விமர்சன அரங்கம்: ஜெயந்தி சங்கர் கதைகள்!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.