பாரிஸ் மாநகரில் இலக்கிய மாலை: வி. ரி. இளங்கோவனின் புதிய 4 நூல்கள் வெளியீடு..!பாரிஸ் முன்னோடிகள் இலக்கிய வட்டம் மற்றும் பாரிஸ் கலை இலக்கிய நண்பர்கள் வட்டம்; ஆகியன இணைந்து நடாத்தும் மூன்றாவது 'இலக்கிய மாலை" நிகழ்வு எதிர்வரும் 02 -ம் திகதி (02 - 06 - 2013) ஞாயிறு மாலை 4. 30 மணியளவில் பாரிஸ் 'சமரா கோணர்" உணவகத்தில் (சுநுளுவுயுருசுயுNவு ளுயுஆயுசுயு ஊழுசுNநுசு) நடைபெறவுள்ளது.  இந்நிகழ்வில் பிரான்ஸ் நாட்டில் வாழும் மூத்த எழுத்தாளரான வி. ரி. இளங்கோவனின் புதிய நான்கு நூல்கள் வெளியிடப்படவுள்ளன. பாரிஸ் 'ஸ்ராலின்கிராட் மெற்றோ" (ஆ° : ளுவயடiபெசயன) நிலையத்திற்கு அருகாமையிலுள்ள 'சமரா கோணர்" உணவகத்தில் நடைபெறவுள்ள இந்நூல் வெளியீட்டு நிகழ்வில் பிரான்;ஸ் நாட்டில் வாழும் பல கலை இலக்கியப் படைப்பாளிகள் கலந்துகொண்டு உரை நிகழ்த்துவர். வி ரி. இளங்கோவனின் புதிய நூல்களான 'இப்படியுமா" சிறுகதைத் தொகுதிää 'அழியாத தடங்கள்" கட்டுரைத் தொகுப்புää 'தமிழர் மருத்துவம் அழிந்துவிடுமா"ää மற்றும் 'பிரான்ஸ் மண்ணிலிருந்து தமிழ்க் கதைகள்" (இளங்கோவன் கதைகள் - இந்தி மொழிபெயர்ப்பு) ஆகிய நூல்களே வெளியிடப்படவுள்ளன. கடந்த டிசம்பர் மாதம் கொழும்பில் நடைபெற்ற இரண்டாவது 'இலக்கிய மாலை" நிகழ்வில் இந்நூல்களின் அறிமுக நிகழ்வு இடம்பெற்றது. 'பிரான்ஸ் மண்ணிலிருந்து தமிழ்க் கதைகள்" (இளங்கோவன் கதைகள் - இந்தி மொழிபெயர்ப்பு) நூல் கடந்த செப்டம்பர் மாதம் 27 -ம் திகதி புதுடில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்டு பாராட்டுப்பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.