ஞானம் 150 வது சிறப்பிதழ் அறிமுகநிகழ்வு!- ஞாயிறு, டிசம்பர் 30, 2012 - உயில் கலை இலக்கிய சங்கத்தின் ஏற்பாட்டில் ‘ஞானம்’ 150 வது சிறப்பிதழுக்கான அறிமுகநிகழ்வு 30.12.2012 ஞாயிறு காலை 9.30 மணிக்கு யா/தேவரையாளி இந்துக்கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது. நிகழ்வுக்கு எழுத்தாளர் சீனா உதயகுமார் தலைமை வகித்தார். சிறப்பிதழ் பற்றிய அறிமுகவுரையை ஞானம் நிர்வாக ஆசிரியர் ஞா. பாலச்சந்திரன் நிகழ்த்தினார். தொடர்ந்து உரைகள் இடம்பெற்றன. கட்டுரைகள் பற்றி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகவியற்றுறை விரிவுரையாளரும் எழுத்தாளருமாகிய இராஜேஸ்கண்ணன் நிகழ்த்தினார். கவிதைகள் பற்றிய உரையை கவிஞர் கருணாகரனும்; சிறுகதைகள் பற்றிய உரையை சின்னராஜா விமலனும்; நேர்காணல், கருத்தாடல், இதழ்வடிவமைப்பு பற்றிய உரையை தானாவிஷ்ணுவும் நிகழ்த்தினர். சிறப்பிதழின் முதற்பிரதியை கலாபூஷணம் மா. அனந்தராசன் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து சிறப்புப் பிரதிகள் வழங்கப்பட்டன. ஏற்புரையை ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரனும் நன்றியுரையை சு. குணேஸ்வரனும் நிகழ்த்தினர்.

ஒளிப்படங்கள் - கமலசுதர்சன்
பதிவு – சு. குணேஸ்வரன்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.