முன்னுரை

மேலைநாட்டறிஞர்கள் இலக்கியக் கோட்பாடு என்பது மேலைநாடுகளில் தோன்றிய இலக்கிய ஆய்வுக் கோட்பாடுகளைக் குறிக்கும் பதம் ஆகும். இது இலக்கியத்தை பல்வேறு அணுகுமுறையில் பார்ப்பதற்கு வழிவகுக்கிறது. கோட்பாடுகள் இலக்கியப்படைப்புகளின் அமைப்பு, உணர்வுகள், சமூகப்பின்னணி, மற்றும் வரலாற்றுக் காவகட்டத்தின் செல்வாக்கு எனப் பல பரிமாணங்களை ஆராய்வதாக அமைகின்றனது. மேலைநாட்டு இலக்கியக்கோட்பாடுகள் பல அணுகுமுறைகளின் தொகுப்பு எனப்படுகிறது. இலக்கியத்தின் சமூகப்பின்னணி, இலக்கியத்தின் அமைப்பு போன்ற தன்மைகளை ஆயும் போக்கில் பல வகைகள் உள்ளன. இக்கோட்பாடுகள் தமிழ் இலக்கியச்சூழலில் புதிய அணுகுமுறைகளை அறிமுகம் செய்வதற்கும், உலக இலக்கியக் கோட்பாடுகளைப் புரிந்துகொள்ளவும் உதவுகின்றன. இலக்கியத்தின் கலைநுட்பம், படைப்பாளரின் படைப்பாற்றல் போன்றவற்றை எடுத்தியம்பும் வழியாக அமைகின்றது.

இவ்வகையில் கையொப்பக்கோட்பாடு பற்றி இங்கே காண்போம்.

கையொப்பக் கோட்பாடு

கையொப்பக்கோட்பாடு என்பது பண்டைய தத்துவமாகும். இது மனித உடலுறுப்புகளைப் பிரதிபலிக்கும் மூலிகைகளைக் குறிக்கும் தத்துவமாகும். அத்தாவரங்கள் மனித உறுப்பு போன்ற வடிவத்தைப் பெற்றிருப்பது, கடவுள் அந்த உறுப்புக்கான மருந்தாக அத்தாவரத்தை வடிவமைத்துள்ளார் என்று நம்பப்படுகிறது.

கையொப்பக்கோட்பாடு என்பது கடிதப் போக்குவரத்து கோட்பாடு என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு உயிரி மருத்துவக் கோட்பாடு அல்லது போலி அறிவியல் ஆகும். மூலிகைகள் மனித உடலின் நடத்தைப் பண்புகளைப் பெற்றுள்ளன. அவை எந்த நோய்க்கான மருந்தாக அமைகின்றது என்பதைப் பிரதிபலிக்கின்றன என்பதை இக்கோட்பாடு விளக்குகின்றது.

” தாவரவியலாளர் வில்லியம் கோலின் இறையியல் நியாயப்படுத்தல்கள், கடவுள் எந்த தாவரங்கள் பயனுள்ளதாக இருக்கும் என்பதை மனிதர்களுக்குக் காட்ட விரும்புவார் என்பதாகும்.”1

”பல வரலாற்றாசிரியர்கள் இது பழமையான சிந்தனை முறைகளுடன் தொடங்குகிறது என்று நம்புகிறார்கள். மற்ற வரலாற்றாசிரியர்கள் இது டியோஸ்கோரைடுகளிலிருந்து தொன்றியதாகவும். ஜேக்கப் போஹ்மே தனது தி சிக்னேச்சர் ஆஃப் ஆல் திங்ஸில் கையொப்பங்களின் கோட்பாட்டை உருவாக்கிய பின்னர் 16 மற்றும் 17ஆம் நூற்றாண்டுகளில் பிரபலப்படுத்தப்பட்டதாகவும் நம்புகிறார்கள்”2

கையொப்பக் கோட்பாட்டுடன் இணைக்கப்பட்ட சில ஹோமியோபதி மருத்துவ முறைகள் இன்றும் பயன்பாட்டில் உள்ளன. கையொப்பங்களின் கோட்பாடு நான்கு வகைகளாக வளர்ந்துள்ளது.

"சேதமடைந்த மனித உறுப்புடன் தாவரம் அல்லது தாவர உறுப்பின் ஒற்றுமை, விலங்கு வடிவம் அல்லது நடத்தையுடன் ஒற்றுமை, நோயின் அறிகுறிகள் அல்லது மருத்துவ நிகழ்வுகளின் நிறத்துடன் தாவர நிறத்தின் ஒற்றுமை, மற்றும் தாவர வாழ்விடத்தின் ஒற்றுமை அல்லது மனித அம்சங்களுடன் சிறப்பியல்பு." 3

“அனைத்து விசயங்களின் கையொப்பங்கள்“ என்ற சொற்றொடர் ஜேம்ஸ் ஜாய்ஸின் நாவலான யூலிஸஸில் மூன்றாவது அத்தியாயத்தின் தொடக்கத்தில் தோன்றுகிறது.

ஒரு செடி பல வழிகளில் தனது மருத்துவ குணத்தை அறிகுறிகளாக நமக்குக் காட்டுகின்றது. அந்தச் செடியின் பயனை பார்வை, தொடுதல், வாசனை, வடிவம், நிறம் போன்றவற்றின் மூலம் அறியலாம். சான்றாக, பீட்ரூட் மற்றும் தக்காளி போன்ற சிவப்பு நிறம் கொண்ட தவரங்கள் இரத்த விருத்தியோடு தொடர்புடையவை .

மனித மூளை போன்றிருக்கும் வால்நட், செலரி மனித எலும்புகளை ஒத்திருக்கும் தன்மை, போன்றவை தாவரத்தின் வடிவம் கையொப்பமாக அமையும் தன்மைக்குச் சான்று எனலாம்.

சில தாவரங்களின் வாசனை அதன் நன்மைகளை நமக்கு எடுத்துச்சொல்லும் தன்மை படைத்தவையாக உள்ளன. சான்று. நொச்சி இலை, யூகலிப்டஸ்.

சில தாவரங்களின் சுவை அவற்றின் மருத்துவப்பண்பை விளக்கும் தன்மை படைத்தவையாக அமைகின்றன.

ஆனைவிழுங்கியும் சில பெயர்களும் கதைக்களம்

ட்ரூமேன் எனும் மனிதன் ஃபிஜியின் அடிவாரத்திலிருந்த போது ஆனைவிழுங்கி என்ற வித்தையைக் கற்றுக்கொண்டான். ஆப்பிரிக்க காடுகளில் மூலிகைகளை ஆய்வு செய்யும் பணி அவனுக்கு வழங்கப்பட்டிருந்தது. தூக்கநோய் ஏற்படுத்தும் கொசுக்களின் தாக்குதலுக்கு இரண்டு முறை ஆட்பட்டான். அவன் தனது சிறியவயதில் இந்தியாவில் தங்கியிருந்தான். அப்போது வள்ளுவன் ஆசானோடு பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர் மதுமயக்கத்தில் இருக்கும் பொழுது அவரிடம் ஆனைமயக்கி போன்ற வித்தைகளைக் கேட்டுத் தெரிந்து கொண்டான். ஆனைவிழுங்கி வித்தையை இவ்வாறு கற்ற பிறகு தான் ஆப்பிரிக்கா அனுப்பப்பட்டான். தனது வித்தையைக் காட்ட முயற்சித்து அகான் இனக்குழுவினரின் தேவதையின் சாபம் பெற்றான். யானை போன்ற உடலுறுப்புகள் வளர்வதாக எண்ணினான். ஆசானை நினைத்து இஞ்சிச்சாறு குடித்தும் பார்த்தான். சரியாகவில்லை. ஆசானிடம் நேரில் சென்றான் ஆசான் கூறிய அறிவுரை அவனுக்கு மருந்தாக அமைந்தது.

கையொப்பக்கோட்பாட்டு பார்வையில் ஆனைவிழுங்கியும் சிலபெயர்களும்

ஆனைவிழுங்கியும் சிலபெயர்களும் சிறுகதையில் கையொப்பக் கோட்பாட்டினை ஆசிரியர் கையாண்டுள்ளார். ஆசானிடம் ஆனைவிழுங்கி வித்தையை கற்றுக்கொண்ட ட்ரூமேன் 108 பச்சிலை பற்றிய மருத்துவக்குறிப்புகளையும் அறிந்து கொண்டான்.

Doctrine of Signature என்கிற கையொப்பக் கோட்பாடு பற்றிய விவாதம் நடைபெற்றது. அவ்விவாத்த்தின் போது கையொப்பக் கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்த சில தாவர வகைகளைப் பற்றி அறிந்து கொண்டான். ” Doctrine of Signature என்கிற கோட்பாடு பற்றிய விவாத்த்தின் போது தான் வல்லாரை இலை மூளை வடிவத்தில் இருப்பதையும், வெண்டைக்காய் நறுக்கினால் நரம்பு வடிவம் கிடைப்பதையும் கண்டு கொண்டான்” 4

வல்லாரைக் கீரை மூளையின் செயல்பாடு மற்றும் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை மேம்பாடு அடையச்செய்தல், மூட்டு வலிக்குறைப்பு, வயிற்றுப்புண் குணப்படுத்துதல், மனஅழுத்தம், பதற்றம் ஆகிய நோய் தீர்ப்பானாக செயல்படுகிறது. அறிவியல் சார்ந்த இனப்பெயராக சென்டெல்லா ஆசியாட்டிகா என்ற இனப்பெயரில் சுட்டப்படுகிறது. சமஸ்கிருதத்தில் “ மண்டுகபர்ணி” என்றும், ஹிந்தியில் “ சரஸ்சதி“ என்றும், தெலுங்கில் ”ஸ்வரஸ்வதகு” என்றும் அழைக்கப்படுகிறது. வல்லாரைக் கீரை வட்டமான மற்றும் அரைக்கோள வடிவம் பெற்றுள்ளது. ஆகையால் இது கடவுளின் மூளைக்கான கையொப்பம் ஆகும்.

வடிவத்தில் ஒத்த வல்லாரைக்கீரையும் மனித மூளையும்

வெண்டைக்காய், சளி இருமல், பார்வைக்குறைவு, முழங்கால் வளைவு, இரத்த விருத்தி, இதயநோய்,புற்று நோய் செல் குறைப்பு என பல நோய்க்குறைபாடுகளைக் களையும் தன்மையுடையது. வெண்டைக்காய் நறுக்கினால் நரம்பு வடிவத்தில் இருப்பதால் அது நரம்புகளுக்கு வலுச்சேர்க்கும் தன்மை படைத்தனவாக அமைந்துள்ளன. நெட்டுவசத்தில் வெண்டைக்காய் வெட்டும்பொழுது ஒரு தண்டுவடத்தின் அமைப்பினைக் காட்டுகிறது. இது எலெக்ட்ரான் மற்றும் நரம்பு செல்களுக்கு இடையே தகவல் கடத்தியாக செயல்படுகிறது.

வெண்டைக்காய் நீள் வெட்டுத்தோற்றமும் தண்டுவடமும்

இது பிற நோய்த்தாக்கும் கிருமிகளை உள்நுழையாதவாறு தடுக்கிறது. குறுக்கு வசத்தில் வெட்டுகிற போது போர்வீரர்கள் கையில் வைத்திருக்கும் கேடயம் போன்ற அமைப்பினைப் பெறுகிறது. இது எப்படி நம்மை நோய்தொற்றிலிருந்து காக்கிறது என்பதைக் காட்டுகிறது.

வெண்டைக்காய் குறுக்கு வெட்டுத்தோற்றமும் கேடயமும்

எஸ்.ஜே.சிவசங்கர் அவர்களின் கடந்தைக்கூடும் கேயாஸ் தியரியும் என்ற சிறுகதைத் தொகுதியில் இடம்பெற்றுள்ள ஆனைவிழுங்கியும் சில பெயர்களும் எனும் சிறுகதையில் கையொப்பக் கோட்பாட்டினை ஆசிரியர் கையாண்டுள்ளார். கடவுள் என்றும் மனித குலம் தழைப்பதற்காகவே இயற்கையை உருவாக்கினார். மனித குல நன்மைக்காகவே இயற்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. நாம் தான் கண்ணிருந்தும் குருடராய் வாழ்கிறோம். இயற்கை சார் வாழ்வே என்றும் நன்மை தருவது என்பதை உணர்ந்து வாழ்ந்தால் மானுடம் செழிக்கும்.

அடிக்குறிப்புகள்

1. https://en.wikipedia.org/wiki/Doctrine_of_signatures

2. போர்ட்டர் ராய், மனிதகுலத்திற்கு மிகப்பெரிய நன்மை மனிதகுலத்தின் மருத்துவ வரலாறு.

3. டாஃப்னி, அமோட்ஸ், லெவ், - தற்போதைய இஸ்ரேலில் கையொப்பங்களின் கோட்பாடு .

4. கடந்தைக்கூடும் கேயாஸ் தியரியும், எஸ்.ஜே.சிவசங்கர்.


இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.