முன்னுரை

வரலாறு என்றவுடன் நினைவுக்கு வருவன போர்கள் தான் அதிகாரம் கொண்ட மனிதனான ஆணை எதிர்த்து போர்கள் மீண்டும் ஒரு அதிகாரத்தை நிறுவுவதற்காகவே நிகழ்கின்றன இத்தக அதிகாரம் அரசின் வழி மட்டுமின்றி அனைத்து நிறுவனங்களிலும் அதாவது குடும்பம் மதம் மொழி கலை பண்பாடு அனைத்திலும் ஊடுருவி நிற்கிறது எனலாம் அவ்வகையில் தமிழ் இலக்கியச் சூழலில் பெண்ணின் நிலைப்பாடு குறித்த பெண்ணிய சிந்தனைக்கு தமிழ் சூழல் சார்ந்த பெண் பதிவுகளின் வரலாற்று தேவை இன்றைக்கு மிக அவசியமான ஒன்றாக உள்ளது அவ்வகையில் தமிழ் சூழலில் பெண்ணிய சிந்தனைகள் நிலை கொண்டதற்கானப் பெண் நிலை குறித்த சிந்தனைகள் எவை எவை என்பதை அவற்றின் இன்றையத் தேவையை குறித்தும் ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

பெண்ணியம்

தமிழ் சூழலில் பெண்ணிய சிந்தனை தன் பயணத்தைத் தொடர மேலைநாட்டு நவீனத்துவம், பின்னவீனத்துவம் போன்ற கொள்கைகளும் காரணம் எனலாம். பஞ்சகாலத்தில் முன் வைத்து கட்டவிழ்ப்புக் கொள்கையின் செல்வாக்கு பெண்ணே சிந்தனை தளத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது எனில் மிகையகாது. ஆரம்பத்தில் பெண்ணியம் பெண் உரிமை, பெண் விடுதலை (அரசியல், பொருளாதாரம்) என்ற ஒற்றை அடையாளத்தில் செயல்பட்ட நிலையிலிருந்து விடுபட்டு இன்றைய சூழலில் சாதி,மத இன மாறுபாடுகளைத் தாண்டிய சமூக மாற்றத்தை முன்வைக்கிறது. அவ்வகையில் இன்று “பெண்ணிய மொழியை” முதன்மைப்படுத்தி பெண் மரபினத்தின் (உயிரியல்) அடையாளத்தை முன் வைப்பதாக தன் இயங்கியலை அமைத்துக் கொண்டுள்ளது .

பெண்ணியமும் மொழியும்

பெண்ணியம் (Feminism)என்பது பெண்ணை ஒரு ஆய்வுப் பொருளாக்கிப் பார்க்கின்ற கோட்பாடு ஆகும். இது ஒடுக்கப்பட்ட பெண்களிடமிருந்து ஒரு சமூகப் பிரச்சினையாக உருப்பெற்ற அதன் பரிணாம வளர்ச்சியாக இன்று இலக்கியத் திறனாய்வுக் களத்தில் நுழைந்துள்ளது. எண்பதுகளில் தமிழ் இலக்கியத்தில் இடம்பெறத் தொடங்கியை கோட்பாடு தொண்ணூறுகளில் எழுச்சி பெற்று உத்வேகத்துடன் வளர்ந்து இன்று 2001 ஆம் ஆண்டுக்குப் பின் நவீன இலக்கியத் திறனாய்வுப் பார்வையாக ஆக்கம் பெற்றுள்ளது.

“பெண்ணியம்” என்பதற்கு பல விளக்கங்கள் தரப்பட்டு வருகின்றன. அவ்விளக்கங்களுக்கு இடையே வேறுபாடுகள் இருந்தாலும் அடிப்படையில் அவை பெண்ணியம் என்பதற்கு ‘பாலியல் சமத்துவம்’ (Sexual Equality) என்ற பொருளை தந்து நிற்கின்றன. பரந்த அளவில் ‘பெண்ணியம்’ என்ற சொல்.

பெண் எந்த ஆணுக்கும் நிகரானவளே எந்த நிலையிலும்
எந்த காலத்திலும், அவள் அடக்கி வைக்கப்படக்கூடாது
சார்பு நிலைப்படுத்தக் கூடாது” 1 என்று பொருள்படுகிறது.

பெண்ணியம் என்பதை தத்துவம் என்ற நிலையிலும் “இயக்கம்” என்ற நிலையிலும் “கோட்பாடு” என்ற நிலையிலும் தனித்தனியாக விளக்கிக் கொண்டேமேயானால், பெண்ணியம் என்பதன் முழு வளர்ச்சியும் அறிந்து கொள்ள இயலும் .

பெண்ணியம் என்ற தத்துவமானது, ஆண் மேலாதிக்கத்தில் வழிவழியாய் வந்த பண்பாட்டின் அடிப்படையில் பெண்கள் தனித்துவம் பெறாமல் வாழ்ந்து கொண்டிருப்பதையும் ஆண்களின் பாலியல் தேவைக்குப் பயன்படும் பொருளாகத் தள்ளப்பட்ட விதத்தையும் ஆண்களைச் சார்ந்து அவர்களின் நலன் பேணுவதையே வாழ்வாகக் கொண்டுள்ள நிலைமையையும் எடுத்துரைக்கிறது.

பெண்கள் என்று இயக்கமானது, பெண்கள் தாமாக முடிவெடுத்து அவர்களின் விருப்பப்படி வாழ்க்கையில் நடத்திச் செல்லும் ஒரு சமூகத்தை உருவாக்குவதாகும். பெண்களிடையே பல மாற்றங்களை ஏற்படுத்தி அவர்களின் மேற்கூறிய இலக்கை அடைவிக்க உதவும் புரட்சிகரமான செயற்பாடு உடையதாகும் எனில் இம்மொழியின் இயல்பு எவ்வாறு உள்ளது?

    ஒரு படைப்பாளன் தன்னுடைய கருத்தை வாசகனிடம் தெரிவிக்க மொழி இன்றியமையாததாக அமைகின்றது இத்தகைய முக்கியத்துவம் கொண்ட மொழி ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதி என திகழ்கின்றது இப்போது பேச்சு மொழி இலக்கிய மொழி என இரண்டிலுமே நிலவுகிறது

    ஒரு பொருளுக்கு அர்த்தம் என்பதே அதிகாரம் யாருடைய கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறதோ அவர் புனைந்து தருகிற மொழிதான் பொருளுக்கான அர்த்தம் என்றாகிறது.

    தந்தை வழிச் சமூகத்தின் பெண்ணின் அடையாளம் ஆனால் புனையப்பட்ட ஒன்றுதான் என்பதற்கு இணங்க புதுமையான இலக்கண நூலாகிய தொல்காப்பியத்திலும் “ஆணின் மொழியை” வெளிப்படுகிறது.

மேற்கூற்றால் மொழி புனையப்பட்ட ஒன்று என்பதும் அது அதிகாரத்திற்கு உட்படுவோரின் சிந்தனைக்கு ஏற்ப வடிவமைக்கப்படும் என்பதும் புலனாகிறது.

ஆண் கற்பித்துள்ள “அர்த்தத்தை” மாற்றி தனக்கே உரிய தன் சுயத்தை வெளிப்படுத்தும் சிந்தனையுடைய உண்மையான மாற்றங்களை நிகழ்த்தும் மொழியை பெண் அமைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இது தேவையாக உள்ளது.

பெண் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முனையும் மொழி “பெண்மொழி” ஆகும். பெண்மொழி ஒடுக்கப்பட்ட உடலுக்குள் சூழல் மாற்றம், கிளர்ச்சி, வேட்கை, வலி மற்றும் கனவு ஆகியன உள்ளிட்ட அக நிகழ்வுகளை சார்ந்து உருவாவது.

பெண் பற்றி எழுதுவதாக இல்லாமல் “பெண் ஆக” எழுதும் உணர்வலைகளில் வெளிப்பாடு பெண்மொழி. இம்மொழி ஏற்கனவே உள்ளகட்டுக்களை உடைப்பதோடு புதிய தலங்களையும் கண்டறியும் முயற்சிகளும் ஈடுபடுகின்றன.

பெண்களுடைய நசுக்கப்பட்டுள்ள உணர்வுகளும் சிந்தனைகளும் வெளிப்படும் களமாக விளங்குவது . பெண் மொழிகளுக்கான மொழியை.

உன்னையே நீ எழுது உன் உடம்பின் குரல்களுக்கு செவியாய் - அப்பொழுதுதான் வகுத்துரைக்க முடியாத உனது நனவிலி மனதிலுள்ள மூல வளங்கள் எல்லாம் பொங்கிப் புறப்பட்டு வெளிவரும்2 என ஹெலன் கூறும் கருத்து பொருத்தம் உடையதாகும்.

மேலும்,

ஒரு பெண்ணின் உடம்பு, தன்னுடைய ஆயிரக்கண உணர்ச்சி வெப்பத்தை ‘மூல நெருப்பாகக்’ கொண்டு பலபலப் மொழிகளை ஒளி அதிர்வுகளாய் உருவாக்கி விடக்கூடிய தனிச்சிறப்பு மிக்க மூல மொழியை உருவாக்கும்.

இருப்பதை உடைக்காமல் - புதிய
சொல்லாடலை உருவாக்க வழியில்லை3

என்ற மேடு சாவின் கருத்தும் ஏற்புடையதாக அமைகிறது.

ஒரு பெண் படைப்பாளி மரபு எனப் போற்றப்படும் அனைத்தின் மேலும் போர் தொடுக்க வேண்டும் அடையாளம் தெரியாமல் உடைத்து நொறுக்க வேண்டும். அழிவு ஆக்கத்தால் தான் முடியும் என இவர் வாதாடுகிறார். தமிழில் பெண்ணையும் பேசுற பெண் படைப்பாளர்களில் பலர் மரபுவாதிகளாகவே இயங்கும் படியாக இங்குள்ள ஆணாதிக்கம் இன்னும் வழி உள்ளதாக இருப்பதே நாம் கவனத்தில் கொள்ள வேண்டியதாக அமைகிறது.

மொழியும் புனைவும்

தன்னைச் சுற்றியுள்ள ஒவ்வொரு பொருளுக்கும் அர்த்தத்தை உருவாக்குவது மனிதனின் பரிணாம வளர்ச்சியில் வளர்ந்த மொழியால் அவ்வகையில் சமூகத்தில் பெண்ணின் அடையாளம் என்பது ஆனால் புனையப்பட்ட ஒன்றுதான். இத்தகைய புரிதல்கள் மூலமாக ஆண் - பெண் உறவு முறையில் ஆணின் அதிகாரம் பெண் உலகத்திற்குள் நுழைவதில் பெரும்பங்கு வகித்திருப்பது மொழிதான் என்பது தெரிகிறது.

அதிகாரம் எப்பொழுதுமே, தான் அதிகாரம் செலுத்துகின்ற பொருளின் மொழியை பிடுங்கிக் கொள்கிறது அல்லது அடக்கி வைத்து விடுகிறது. அவ்வாறே ஆண் மொழியான அதிகார மொழி பெண் பற்றிய உணவுகளை அடக்கி ஆளுகிறது.

பெண்ணுக்கு அழகு எதிர்ப்பேசாதிருத்தல்”

“ஊமையான மனைவி அடிபடுவதே இல்லை

ஆகியன எல்லாம் அதிகாரத்திற்கும் மொழிக்கும் உள்ள நெருங்கிய பிணைப்பை வெளிப்படுத்துவதாகும்.

மொழியின் அதிகாரம் ஆண் - பெண் உறவு முறை வடிவமைக்க இயலும். தமிழின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியம், மொழிக்குள்ள ஆற்றலை புரிந்து கொண்டு, தொடக்கத்திலேயே பெண்ணின் வாய்மொழியில் கை வைத்ததை கீழ்க்கணக்கு வாயிலாக அறியமுடிகிறது.

காதல் உலகின் தொடக்கமான காட்சி, ஐயம், தெளிவு, துணிவு ,ஆகியவற்றை கூறும் போதே, ஆணின் அதிகார அணுகுமுறை தென்படுகிறது. காட்சிக்குப் பிறகு ஐயம் கொண்டு, அதாவது அணங்கு கொல்? ஆய் மயில் கொல்? என்று சொல்லாடுவதற்கு ஆணுக்கு தான் உரிமை இருக்கிறதே என்றது. தொல்காப்பியம் குறிப்பிடும்,

ஐயக் கிளவி ஆடுவிற்க் குாித்தே” (பொருள் 42)

சொல் எதிர் பெறாமல் சொல்லிச் சொல்லி இன்புறுவதற்கும் ஆணுக்கே இடம் இருக்கிறது. (அகம் 53) என்கிறது. இவ்வாறு ஆணோடு கொள்ள நேர்கிற ஆரம்ப உறவிலேயே பெண்ணுக்கான சொல்லாடல் தடை செய்யப்படுகிறது. அதிகாரம் செலுத்த முயன்ற ஆண், பெண்ணின் மொழியை முதலில் ஒடுக்குவதற்கு முயன்றான்.

கனவு காலத்தில் ஏற்படும் வேட்கை, இடைவிடாது நினைத்தல், மெலிதல், நாணம் (தொல் .பொருள். களவு 97) போன்ற நிகழ்வுகள் இருவருக்கும் பொதுவானவை எனினும் இம்மன நிகழ்வின் தொடர் விளைவான மொழிபடுத்தி பேசுவது மட்டுமே ஆணுக்கு உரியது என்கிறார் தொல்காப்பியர்.

காதல் மொழி பேச காதலன் வாய்க்கு மட்டும் வாய்ப்பு கிடைக்கிறது. இவ்வாறு ஒரு பெண்ணின் வாழ்வில் மிக நெருக்கடியான ஒரு சூழலில் வந்து குவிக்கிற உணர்ச்சிப் பெருக்கைக் கூட மொழிப்படுத்திப் பெண் பேசக் கூடாது எனத் தடை போடப்படுகிறது.

தன்னூறு வேட்டை கிழவன் முற்கிளத்தல்
எண்ணுங்காலைக் கிழித்திக்கு இல்லை” (களவு 116)

வேட்கையை வெளிப்படுத்துவது என்பது புதுப்பானையில் பெய்த நீர் போலப் புலப்படுத்தலாம் என்கிறார் தொல்காப்பியர். உணர்வு வெள்ளம் கரைபுரண்டு ஓடும்போது பெண் சொல்லாடல் கூடாது.அவளது அழகைப் பாராட்ட மொழியில் புனைய ஆணுக்கு உாிமை உண்டு.பெண் தான் உணரும் அழகு உணர்வை கூட மொழிப்படுத்தக் கூடாது.

“அச்சமும் நாணமும் பெண்மை குறித்து” கனவு காலத்தில் அவளுடைய கூற்று, களவு கற்பில் முடிய வேண்டும் என்ற கவலையினால் நிகழ்கிறது. கற்பு காலத்தின் “ஆண்மகனின் பரத்தை ஒழுக்கத்தை எதிர்கொள்ள அவளுடைய பேச்சு” நிகழ்கிறது. எனவே இந்த கூற்றுகளும் அவளுடைய இன்ப உணர்வுகளைச் சாராமல் சமூகக் கடமையை நோக்கிவையாக இருக்கின்றன என்பதும் கவனத்திற்கு உரியன.

தொல்காப்பியரால் பெண்ணின் மொழி ஒடுக்கப்பட்டு ஆணின் மொழி உருவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இன்று வரை .ந்த மரபு தமிழ் மரபில் நிலைபெற்று வருகின்றது.

ஆண் வலிமையானவன் பெண் மென்மையானவள் என்ற தொல்காப்பியரின் சிந்தனை முன்வைக்கப்படுகிறது.“வலிமை உள்ளவை வாழும் மறற்வை மடியும்” என்ற டார்வினின் புகழ்பெற்ற வாசகத்தில் ஒலிப்பது, இந்த ஆணதிக்க குரலே. பெண் தனக்கான மொழியை தானே புனைய முன்வரவேண்டும்.பெண் தன்னைத்தானே உணர்ந்து மொழியை படைக்கும் போது உணர்வுகள் உண்மையாகவும் வெளிப்படையாகவும் வெளியேறும் மொழியில் மாற்றங்கள் ஏற்படும்.

முடிவுகள்

    ஆதிக்க முடியாது சமூகத்தில் மனித அடையாளங்கள் நிறுவப்பட்டு அவற்றின் வாயிலாக மனித சிந்தனைகள் வடிவமைக்கப்பட்டன அதற்கு மனித அடையாளங்களாக ஜாதி மதம் இனம் ஆகியவற்றை இனம் காணலாம்.

    இனத்தின் அடிப்படையில் அதாவது ஆண், பெண் உறவு முறையில் பெண்ணின் அடையாளமும் ஆணால் புனையப்பட்ட ஒன்றுதான் என்றும் ஆணின் அதிகாரம் பெண்ணுலகத்திற்குள் நுழைவதில் பெரும்பங்கு வகிக்கிறது என்பதை இனங்கண்டு பெண்ணியச் சிந்தனையாளர்கள் பெண் மொழியை உருவாக்குவதில் முனைப்பு காட்டுவதை இனம் காண முடிகிறது.

    காலம் காலமாக ஆதிக்க மொழியால் முன்வைக்கப்படும் பெண்ணின் உடல் சமூக உடலாக முன்னிறுத்தப்பட்டு அவ்வுடலானது அதிகாரப் போட்டிக்கான களமாகவும், கண்காணிக்ப்படுவதாகவும் வரலாற்றால் அறியும் பெண் படைப்பாளிகள் “பாலியல் அரசியலை” முன்வைக்கின்றனர் என்பதை அறியமுடிகிறது.

துணைநூற்பட்டியல்

1. பிரோமா.இரா,பெண்ணியம், தமிழ்புத்தகலாயம், 34 சாரங்கபாணி தெரு, தி.நகர், சென்னை.பக் – 12

2. பங்சாங்கம்.க, பெண் – மொழி - படைப்பு, காவ்யா பதிப்பகம், 16,இரண்டாம் குறுக்குத்தெரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை.பக் – 71

3. பங்சாங்கம்.க, பெண் – மொழி - படைப்பு, காவ்யா பதிப்பகம், 16,இரண்டாம் குறுக்குத்தெரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை.பக் – 71

மின்னஞ்சல் – இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.