
1.
கனவுகளில் தோய்ந்து
நினைவுகளை இழந்தவன்
திகைப்பாளி
நினைவுகளில் தோய்ந்து
கனவுகளை இழந்தவன்
ஏமாளி
கனவுகளையும், நினைவுகளையும்
இணைத்து செல்பவனே
வெற்றியாளன் .
சுதந்திரத்தை துர்ப்பிரயோகம்
செய்யும் சிலரைக் காட்டி
இன்றும் சுதந்திரக் காற்றை
சுவாசிக்க துடிப்பவர்களை சந்திக்க
வைக்கிறோம் என்று
ஆற்றை அல்லவா வற்ற வைத்து
விடுகிறீர்கள் .
நானும் . நீயும் ஒரே வலுவுள்ள
கைபேசிகளை வைத்திருந்தாலும்
அவற்றை பாவிக்கும் விதத்தில்
தானே வேறுபட்டு நிற்கிறோம் .
அணு ஆயுதம் அழிவைத் தரும் எனத்
தெரிந்தும் பரிசோதனை செய்து
செய்யும் போதே
பல உயிர்களை அழித்து
நிலை நாட்டுவது தான்
வல்லரசு என்பதன்
வரைவிலக்கணமோ?
ஆனால்
உங்கள் பிரச்சார பீரங்கிகள்
மட்டும் சமாதானம் பேசும்
மானுடம் காப்பாதாய்
மமதை கொள்ளும்
எல்லாவற்றையும் பார்த்த
படியேஒரு கூட்டம்
வெள்ளைக் கொடிகளுடன்
வேதாந்தம் பேசும்
ஆனாலும் என்ன
கடிவாளம் இன்றி நீயும்
அணு ஆயுதத்தை அங்கங்கே விதைத்து
வைப்பாய் பாதுகாப்புக்காக
எனச் சொல்லி .
வாழ்க்கை ஓடம் வாசல் தேடும்
வசந்தம் வந்தால் வர்ணம் மாறும்
காதல் ஜோதியில் கலந்தே
சில ஜோடி பிரியின்
நாடி தளரும்
சில வேசமாய் பல வேதனை
காட்டும் பின்
வேறு வாசல் ஓடி விடும்
பாதை மாறும் பயணம் மாறும்
பண்பும் மாறி பாதகமும் உரைக்கும் .
சட்டமும் நீதியும்
சில சரித்திரங்களை
மறைத்து வைக்க முயலும்
நிறம் மாறிக் காட்டி
நிஜம் மாறிப் போடும்
பாகுபாடுகளைப் பக்குவமாகப்
பேணும்
பாதுகாப்பது போல பயிரியும்
மேயும் .
தனியே தவிக்க விட்டு
தடுமாற வைக்கும்
இரும்புத் திரைக்குள்ளே
எலும்புக் காட்டும்
ஏனிந்த நிலையென
ஏளனம் ஊட்டும்
ஏற்றத் தாழ்வுகளை ஏற்று
கொண்டு
ஏணிப்படி ஏறும்
அடிமை முறையை
அரங்கேற்றத் துடிக்கும்
ஆணவம் கொண்டு
அமைதியைக் குலைக்கும்
இதனால் சிலர் வாழ்வு
சீரற்றுக் கிடக்கிறது
சிறைப்பட்டுத் துடிக்கிறது .
தலைப்பா கட்டுவதும்
தோளில் துண்டு போடுவதும்
பூணூல் அணிவதும்
ஒன்றும் பெரிய விடயம் அல்ல
ஆனால் அதுவே
பெருமைக்கு அளவுகோல் ஆகி விட்ட
சமூகத்தில்
வாழ்நாளில் இவற்றை
கிடைக்காதவனை எப்படி
பார்க்கிறான் அல்லது அவன்
அதை
பார்க்கிறான்
என்பதே மீதிக்கதை .
ஒரு நகரமோ , நாடோ
புதிய மனிதர்களை எளிதில்
ஏற்றுக் கொண்டு விடுவதில்லை
அவர்கள் ஆரம்பம் அந்தரங்களில்
இருந்து தான் ஆரம்பிக்கின்றது
ஆனால் முயற்சியும் முனைப்பும்
உள்ள மனிதன் வேரூன்றி
விடுகிறான். அங்காங்கே
சில நல்ல மனிதர் அரவணைப்புடன்.
சில நாடுகளில் மனிதர்கள்
எலும்புக் கூடுகளாக வலம் வருவர்
அது அந்த நாட்டின்
வறுமையை கோடு இட்டுக் காட்டும்
சில நாடுகளில் மனித எலும்புக்
கூடுகள் இன அழிப்பை எடுத்து
உரைக்க
எழுந்து வரும்
சில நாடுகளில் எலும்புக் கூடுகள்
அணு ஆயுதத்தின் அழிவை
அம்பலப்படுத்தும்
சில நாடுகளில் எலும்புக் கூடுகள்
ஆணாதிக்கம் கொன்ற அவலப்
பெண்களை
அடுக்கிச் சொல்லும்
ஆனாலும் என்ன
கேட்கத் தான் காதுகள்
இல்லையே
ஆயினும் சிலர் எலும்புக் கூடுகள்
ஆதாரம் பல சொல்வதாய்....
புறப்படுவர்
அவர்கள் எழுபவர்களா
இல்லை
தூங்குபவர்களா?
காலின் பெருவிரலால்
அழுத்துவது என்பது
ஆங்காங்கே நமது கோட்பாதுகளில்
காணப்படுகிறது
புத்தர்
நிலையான , நகரும்
உயிர்க்கும் சாதிக்கோட்பாட்டை
தனது கால் விரலால் நசுக்கினார்
கிருஸ்ணர் தேரை தனது கால்பெரு விரலால்
அழுத்தி
அருட்சுதனனைக் காப்பாற்றியதாக
பாரதம் கூறுகிறது
சிவன் கால்பெரு விரலால்
அழுத்தி இராவணை மேரு
மலையை அசைக்காமல் தடுத்ததாக
சிவபுராணம் கூறுகிறது
யார் யாரோ இன்றும்
ஆதிக்க அதிகாரத்தை
நசுக்கத் தான் பார்க்கிறார்கள் .
2.
உணர்வு அலை எழுந்து வர
உன் உணர்வில் நான் இருக்க
நீதிக்கதை படிக்கவா
முழு நீண்ட கதை படிக்கவா
கற்றோரும் உற்றாரும்
களித்திருக்க கூத்தாடவா
பெற்றோரும் பெரியாரும்
பெருமை கொள்ள
இசை பாடவா
குழந்தையே
மடியில் படுத்து மகிழ்வு கொடு
தோளில் படுத்து தொட்டு
உணர்வு அளி
விரல்களைப் பிடித்து
உன்னத உணர்வு கொடு
கலைகளை எல்லாம் மீண்டும் எனக்கு
கற்றுக் கொடு
கவிதை மழையை
பொழிய விடு
ஜனனம் , அதில்...
வேறுபாடு கிடையாது .
3.
உன் பிஞ்சுக்கால்களைப் பற்றி
சலங்கை பூட்டி விடத்தான்
நினைக்கிறேன்
ஆனால்
நீ இப்போ தான் கால்களை
அசைக்கத் தொடங்கிறாய்
'அ'கரம் எழுதி கற்றுத் தரப்
பார்க்கிறேன்
நீ இன்னும் கைகளை
அசைக்கத் தொடங்கவில்லை
பாடல் பாட உன்னை
அழைக்கிறேன்
நீ இப்போ தான் ஒலிக்கத்
தொடங்குறாய்
நான் கதை சொல்ல
தொடங்கிறேன்
வார்த்தைகளை கேட்டும்
அதிசயம் காண்கிறேன்
நீ அவதானித்து கேட்கிறாய்
காத்திருத்தல் காதலுக்கு
மட்டும் அல்ல
தாத்தாக்களுக்கும் தான்
என்று சொக்லிறாயோ .
விடுகதையா ?
ஒரு கை சொல்லும் கதை
மனிதமனமும் மறுமணமும்
காலம் காலமாக...
விதம் விதமாக ...
நிறுத்திக் காட்டுகிறது
சில கைகள் மனதை புரிந்திருந்தும்
கண் கலங்க வைக்கும்
சில காய்ந்து போனதுகள்
மனங்களைக் காயப்படுத்த
காத்துக் கிடக்கும்
சில களவாட துடித்து
காழ்ப்புணர்வுகளைக் கொட்டும்
சில சம்மதம் சொல்லி
தரையில் தள்ளும்
இவை எல்லாமே இந்த
உலகில் தான் மெளனத்துடனும்
மிரட்டலுடனும் நிகழ்கின்றன
சுய மரியாதையோடு
மறுமலர்ச்சி ஏற்படுத்த
இது விடுதலை நிலமும் இல்லை
சகவயது உடையவர்களுடன்
செயற்பாடுகளில் ஈடுபட முடியாமல் தடுக்கும்
சமூக , பொருளாதார காரணங்களை
மாற்றி அமைத்துக்
கொடுக்காத நிலம்
எப்படி ஏற்றம் காணும் ?
கடலைத் தேடும் நதிகள்
காலம் தாழ்த்துவதில்லை
கடலில் வாழும் மீன்கள்
கரையில் நீந்துவது இல்லை
கல்லில் வடித்த சிலைகள்
சிந்தை செய்வது இல்லை
சிறகை விரித்த பறவை
கிளையை நம்புவது இல்லை
மண்ணில் போட்ட விதைகள்
மடியை நோக்குது இல்லை
கண்ணில் நிறைந்த உருவம்
கரைந்து போவதில்லை
எல்லாம் நிறைந்த நீயேன்
என்னை மறந்து சென்றாய்
ஏக்கம் நிறையச் செய்தாய்
துயரில் முழ்க வைத்தாய்
நீ இங்கு இல்லாத போது
இரவு நீள்கிறது
வரலாறு சுருங்குகிறது
மூச்சு இழைகிறது
வாழ்வு சலிக்கிறது
கண்கள் ஒளி இழக்க
நெஞ்சம் கனத்து இருக்க
கனவு வெளிகளில் எனை
மிதக்க விட்டு
காதலை மறந்து ஏன்
கடந்து சென்றாயோ
அன்று கோவிலில் குப்பை
கிடந்தால் ஒருவர் எடுத்து குப்பைத்
தொட்டியில் போடுவார், இன்று ஐவர்
படம் பிடித்து இணையத்தில்
போடுகின்றனர்
படு முன்னேற்றம் !
ஆடம்பரங்களைத்
தேவைகளாக எண்ணும்
மனிதன்
அடிப்படைத் தேவைகளுக்கு
அல்லல்
படுபவர்களை
மறந்து விடுவது ஏனோ?
மிருகங்களின் உமிழ் நீர் மனிதனுக்கு
உபாதை கொடுக்கும் அதனால்
நோய்கள் உண்டாகும்
எனவே மனிதன்
வளர்ப்பு
மிருகங்களை வீட்டில் சேர்ப்பதை
மட்டுப்படுத்துவதே நல்லது .
சித்த மருத்துவம் சொல்கிறது
நால்வகை வாயுக்களின் இருப்பு
உயிர்ப்பு என்றும்
வெளியேற்றம்
இறப்பு என்றும்
நவீன மருத்துவம் சொல்கிறது
மூளை ,இதயம் ,நுரைஈரல்
சிறுநீரகம் இயக்கம்
இருப்பு என்றும்
நிறுத்தம் இறப்பு என்றும்
எது தான் எமது
பிறப்போ ?
4.
அந்த வீட்டை இழந்து போன பின்பு
ஒரு வெறுமை தெரிகிறது
எது இருந்து என்ன
எனறு ஏக்கம் வருகிறது
நான் மேசையில் இருந்து
படித்த அந்த மூன்று ஆண்டும்
கூரையின் மீது ஏற உதவிய அசோகமரமும்
காயாகவே சுவை நிரம்பிய
கனிகளைத் தந்த மாம்மரமும்
ஓட்டில் ஏறிப் பறித்த முருங்கை
இலையும் , காய்களும்
மாமா மட்டைக் கூம்புகள்
கட்டி பாதுகாத்துத் தந்த மாதுளம்
பழங்களும்
நான் படித்த , படிப்பித்த
அந்த அறையும்
மருமகன் பிறந்த அந்த சமையல்
அறையும்
அம்மை வந்த போது என்னை
தனிய விட்ட மண் அறையும்
அங்காங்கே அக்கா இருந்து பாடிய
பாடல்களும்
முற்றத்தில் நாம் விளையாடிய
கிட்டியும் , கிளித்தட்டும்
மாலைவேளைகளில்
மகிழ்வாக வந்தவர்களுடன்
கதைத்த அந்த வாங்கும்
இந்த கதைகளை இனி
யாரிடம் சொல்லுமோ?
அங்கே வாழ்ந்த நாட்கள்
ஒன்றும் பெருமை கொள்ளத்
தக்கவை அல்ல
எனினும்
குடியிருந்த வீடு
அந்த வீட்டின்
ஒவ்வொரு தூண்களும் சுவர்களும்
மெளனமாக
ஏதோ ஒரு கதையை என்
மனதிற்கு
சொல்லிக் கொண்டேயிருக்கும் .
வாழ்க்கைப் பாதை என்பது
என்றும் ஏற்றம் நிறைந்தவையாக
இருப்பது இல்லை தானே
மாற்றங்களை ஏற்றுக் கொள்ளுவோம்
கூடுகளை மாற்றினாலும்
நாடுகளை கடந்து நாம்
இருந்தாலும்....
இருந்து விட்டு நினைப்பு
இதயத்தில் வந்து கனக்கும்
சமயத்தில் நினைவில்
மிதக்கும்.
சட்டமும் நீதியும்
சில சரித்திரங்களை
மறைத்து வைக்க முயலும்
நிறம் மாற்றிக் காட்டும்
நிஜம் மாறிப் போகும்
பாகுபாடுகளை பக்குவமாகப்
பேணும்
பாதுகாப்பது போல பயிரையும்
மேயும்
தனியே தவிக்க விட்டு
தடுமாற வைக்கும்
இரும்புத் திரைக்குள்ளே
எலும்பும் காட்டும்
ஏனிந்த நிலையென
ஏளனம்
ஊட்டும்
ஏற்றத் தாழ்வுகளை ஏற்றுக்
கொண்டு
ஏணிப்படி ஏறும்
அடிமை முறை ,ஆணவம் கொண்டு
அரங்கேற்றி அமைதியைக் குலைக்கும்
இதனால் பலர் வாழ்வு சிறைப்பட்டுத் துடிக்கிறது ;
சீரற்று கிடக்கிறது.
புத்தகங்களை சுமந்த முதுகுகளில்
இனி தாவரங்களை சுமக்கலாம்
பிராண வாயு வேண்டி
எதை நீ அழித்தாயோ அதையே நீ
தேடுகிறாய்
முதுகையும் கழுத்தையும்
வளைத்து
கைத்தொலைபேசியே கதி என்று
கிடந்த மனிதன் கழுத்துக்கும்
பட்டி அணியலாம்
அதிகமான பயன்படு அவஸ்தையை
தரும் பாரு.
கருவிகளுடன் உரையாடும்
மனிதனாக உருவாகி
இயற்கையை இயன்ற வரை அழித்து
உயிரை உணர்வை ஊசலாட விட்ட
விளையாட்டை
வினோதம் என்பதா, விபரீதம் என்பதா ?
வாழ்க்கை நிகழ்வுகள் குறித்து அந்த
நேரத்து நியாயங்கள் என எழுதிய
ஜெயகாந்தனும் , அந்த வயதுக்கான
சுரப்பிகளின் விளையாட்டு என
ஷாலினியும், எப்போது யாரோடு
வாழ்கிறோமோ அப்போது அவர்க்கு
துரோகம் செய்யாமல் வாழ்வதே
வாழ்வு என மு.வ.வும்
சமயங்கள் சில வரையறைகளையும்
சட்டம் சில வரையறைகளையும்
வகுத்து நிற்கும் போது
அதற்குள் சுதந்திரமாக பல
மனிதர்கள் வாழ்ந்தும் விடலாம் ஒரு
சிலர் இவைகளை மீறிச்
செயற்படும் போது தான்
அழுத்தங்களுக்குள்ளே'
அந்தரப்படுகிறார்கள்
நான் நடக்கும் போது ஆதரவு தேடிய
கைகள் பட்டு அழுக்காகி விட்டதாய்
சுவர் அழுகிறது
நான் சாப்பிடும் போது கை நழுவி
உணவு விழுந்ததால் அழுக்காகி
விட்டதாய் ஆடை அழுகிறது
நான் குளிக்கும் போது
சவர்க்கார நுரை பட்டு வர்ணம்
இழந்து விட்டதாய்
குளிப்பறை அழுகிறது
ஆனால் நீ மட்டும்
என் கூன் கண்டு சிரித்து
விட்டுச் செல்கிறாய்
சந்தோசம்.
ஆயினும் என்ன இந்த வில்
உனக்கும் இனாமாக்
கிடைக்கும் என்பதை
மறந்து விடாதே
5.
சட்டமும் நீதியும்
சில சரித்திரங்களை
மறைத்து வைக்க முயலும்
நிறமும் மாறிக் காட்டும்
நிஜம் மாறிப் போகும் .
பாகுபாடுகளைப் பக்குவமாகப்
பேணும்
பாதுகாப்பது போல பயிரையும்
மேயும்
தனியே தவிக்க விட்டு
தடுமாற வைக்கும்
இரும்புத் திரைக்களுக்குள்ளே
எலும்பும் காட்டும்
ஏனிந்த நிலையென
ஏளனம் ஊட்டும்
ஏறறத் தாழ்வுகளைக்
கொண்டு
ஏணிப்படி ஏறும்
அடிமைமுறை
அரங்கேற்ற
ஆணவம் கொண்டு
அமைதியைக் குலைக்கும்
இதனால் சிலர் வாழ்வு
சீரற்று
கிடக்கும்
சிறைப்பட்டுத் துடிக்கும் .
புத்தகங்களை சுமந்த முதுகுகளில்
இனி தாவரங்களை சுமக்கலாம்
பிராண வாயு வேண்டி
எதை நீ அழித்தாயோ அதையே நீ
தேடுகிறாய்
முதுகையும் கழுத்தையும்
வளைத்து
கைத் தொலைபேசியே கதி என்று
கிடந்த மனிதன் முதுகுக்கும்
கழுதுப்பட்டி அணியலாம்
அளவுக்கு அதிகமான
பயன்படு ...அவஸ்தையைத் தரும் பாரு !
கருவிகளுடன் உரையாடும்
மனிதனாக உருவாகி
இயற்கையை இயன்ற வரை அழித்து
உயிரை உணர்வை ஊசலாட விட்ட
விளையாட்டை
வினோதம் என்பதா
விபரீதம் என்பதா ?
வாழ்வின் நிகழ்வுகளை குறித்து அந்த
நேரத்து நியாயங்கள் என
ஜெயகாந்தனும்
அந்த காலத்து சுரவிப்பிகளின் விளையாட்டு என
ஷாலினியும்
எப்போது யாரோடு
வாழ்கிறோமோ அப்போது அவர்க்கு
துரோகம் செய்யாமல் வாழ்வதே
வாழ்வு என மு.வ. வும்
சமயங்களில் சில வரையறை
களையும் சட்டம் சில
வரையறைகளையும் வகுத்து
நிற்கும் போது
அதற்குள் சுதந்திரமாக பல
மனிதர்கள் வாழ்ந்து விடலாம் .ஒரு
சிலர் இவைகளை மீறிச்
செயற்படும் போது தான்
அழுத்தங்களுக்குள்ளே
அந்தரப்படுகிறார்கள்
நாடு என்றால் சும்மாவா
நீதித்துறை நிராகரித்தால்
அரசியல் துறை
மருத்துவத்துறை நிராகரித்தால்
அரசியல் துறை
சினிமாதுறை நிராகரித்தால்
அரசியல்துறை
எமக்கு தான் இருக்கிறது
ஆனால் மக்களுக்கான
மாற்றத்தை எங்கே தான் ஏற்றி
வைக்கப் போறார்களோ
இல்லை தூற்றி
நிற்கப் போறார்களோ??
நிறுத்தி
நின்று பார்ப்போம்
நல்லதை என்றுமே
ஏற்போம்.
6.
இழந்து போன தலைமுடியை சில
வருடத்திற்கு முந்திய படங்கள்
நினைவில் நிறுத்தும்
இழந்து போன உறவுகளை
சில படங்கள்
நினைவில் நிறுத்தும்
இருந்து போன வீடுகளை
சில படங்கள்
நினைவில் வரையும்
சென்று வந்த தேசங்களை
சில படங்கள்
சித்திரமாய்க் காட்டும்
சில படங்கள்
படித்துப் பெற்ற பட்டங்களை
சில படங்கள்
சான்று பகிறும்
குழந்தைகளின் குறும்புகளை
சில படங்கள்
நிகழ்வில் நிழ்த்திக் காட்டும்
படங்கள் என்றும் சில பாடங்களை சொல்லத் தான்
போகிறது
போதனைகளை ஏற்பதும்
நினைவில் இரை மீட்பதும்
நம் கையில் எஞ்சி நிற்கிறது.
ஒரு வீட்டுக்குப் போகும் போது ஒருவர்
வரவேற்பதும் மற்றவர்
வசைப்படுவதும் நல்ல தங்காள்
காலத்தில் மட்டுல்ல
இன்றும் தொடர்கிறது
மனிதர்கள் இடையே இன்றும்
ஏனோ இத்தனை
மாறுபாடுகள் .
மனதின் ஈரத்தை பலர் காட்டத்தான்
நினைக்கிறார்கள்
ஆனால் சிலரின் வெப்பக்
காற்றுகள் அவற்றை வற்ற வைத்து
விடுகின்றது
அவற்றை தாண்டிவந்தவர்களே
உண்மையில் வாழ்கின்றனர்