அல் சைமா அக்ரம் சைடம்!
அகதிமுகாமின் குழந்தை இவள்.
அதியுயர் புள்ளிகளை உயர் வகுப்பில்
அடைந்த அறிவுக் கொழுந்து!
எத்தனை கனவுகளுடன்
எத்தனை திட்டங்களுடன்
இருந்திருப்பாள்?

குண்டுகளுக்குத்  தெரியுமா?
குழந்தையின் கனவுகள்?

இன்னும் எத்தனை நாள்
இவர் அலைந்து திரிவர்?
இனியாவது இவர் அலைச்சல்
இல்லாமல் போகட்டும்.
இவரிடர் தொலையட்டும்.

யாதும் ஊரே!
யாவரும் கேளிர்!
    
இந்நிலை நோக்கி
இவ்வுலகம்
இனியாவது செல்லட்டும்.
போருலகு
பூவுலகாகட்டும்.

*அண்மையில் காசாவில் அல் நுசரெத்  (Al Nuseirat) அகதிமுகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இம்மாணவி Al Saima Akram Saidam தன் குடும்பத்தவர் பலருடன் பலியானது துயர் தருவது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.