எல்லாவற்றையும் இழந்து நிற்கும்
மனித சடலத்திடமிருந்து
ஒரு முனகல் மட்டுமே வரும்..

அந்த முனகலும்
அவர்க்கு நெருக்கமானவர்க்கு
மட்டுமே தெரியும்..

கொடுமை எதுவென்றால்
அவரும் அதை
நிராகரிப்பார் ..

ஒரு பாலைவனத்தில்
கானல்நீர் பார்த்து
ஏமாந்து ஏமாந்து
பழக்கப்பட்ட
அந்த மனித சடலம்

இரத்தமும் சதையும்
நைந்துபோகும்வரை
அந்த நிராகரிப்பையும்
உண்மையென்று
எண்ணிக் கொள்ளும்.

விட்டில் பூச்சிகள்
விளக்கை நம்புவதுபோல்
உண்மையின் பிடியில்
சிக்குண்டுவிட்டால் ..
மனிதன் இப்படித்தான்..

காய்ந்து விட்டால்
ஒடிந்துதான் போகும்
வளர வாய்ப்பில்லை
என்பது புரிந்தால்..

நரகத்திலும் வாழலாம்
மனித சடலம்...

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.