மணிப்பூரே! ஓ பற்றியெரியும் மணிப்பூரே!
மணிப்பூரு எரியுதம்மா!
மரண ஓலம் உலகெங்கிலும் ஒலிக்குதம்மா,
குக்கி பழங்குடியே மணிப்பூரில்
சிக்கித் தவிக்கிறியே,
உன் உரிமைக் குரல் கேட்கிறதே!  

மெய்த்தி இனம் தாக்கியதே! பெண்
மேனியை  நிர்வாணம் ஆக்கியதே!
அந்நேரம்
அந்தோ ஜனநாயகம் தோற்றும் போனதே!
அதிகார வர்க்கமே!
உன் வெறியாட்டத்தால்
உன், உலக ஜனநாயகம் சீர்குலைந்ததே.
மணிப்பூரில்
மதவெறி தலைவிரித்தாடுதம்மா!
மக்கள் ஒற்றுமை தீயில் வாடுதம்மா!
குக்கி இன மக்கள்
கண்ணீர் மழையால்
மணிப்பூர் துடிக்குதம்மா! டெல்லி
மாநகரோ கடந்து செல்லுதம்மா!
 
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.