எனினும் நான் எழுகின்றேன் – I

என்னை நீ வரலாற்றில் எழுதிவிடலாம்
கசப்பான, திரிக்கப்பட்ட உனது பொய்களுடன்,
என்னை மிதமிஞ்சிய அழுக்கிலிட்டு நீ மிதிக்கலாம்
ஆயினும், நான் மேலெழுவேன், தூசிபோல.

என் துணிச்சல் உன்னைத் துவம்சிக்கிறதா?
ஏன் மனமுடைந்து அல்லற்படுகிறாய்?
என் அமர்வு கூடத்தில்
எரிபொருள் பாய்ச்சும் எண்ணெய்க் கிணறுகள்
என்னிடம் இருப்பதுபோலான
மெத்தனத்துடன் நான் நடப்பதனாலா?

அதே சந்திரர்கள் போல, சூரியர்கள் போல,
ஆர்ப்பரித்தடங்கும் கடலலைகளின் நிச்சயத்துடன்,
அதே நம்பிக்கைகள் துள்ளித் துளிர்ப்பதுபோல,
இனியும் நான் எழுவேன்.

Still I Rise - I 

You may write me down in history
With your bitter, twisted lies,
You may trod me in the very dirt
But still, like dust, I’ll rise.

Does my sassiness upset you?
Why are you beset with gloom?
‘Cause I walk like I’ve got oil wells
Pumping in my living room.

Just like moons and like suns,
With the certainty of tides,
Just like hopes springing high,
Still I’ll rise.
   
எனினும் நான் எழுகின்றேன் - II 

கையறுநிலையில் என்னைக் காணவிரும்பினாயா?
குனிந்த தலையுடனும், கவிழ்ந்த விழியுடனும்?
கண்ணீர்த் துளிகள் போல தோள்கள் தொங்கிவீழ
என் ஆத்மார்த்த அழுகையால் வலுவிழந்து.

என் அகந்தை உன்னை அல்லல் படுத்துகிறதா?
என் கொல்லையில் தங்கச் சுரங்கக் கிடங்குகள்
இருப்பதாக இறுமாப்புடன் நான் நகைப்பது
வலுவாக உன்னை வருத்தவில்லையா?.

உன் சொல்லால் என்னை நீ சுடலாம்
உன் கண்ணால் என்னை நீ காயப்படுத்தலாம்
உன் கொடூர வெறுப்பால் என்னை நீ கொல்லலாம்
ஆயினும், நான் மேலெழுவேன், காற்றைப் போல


Still I Rise - II 

Did you want to see me broken?
Bowed head and lowered eyes?
Shoulders falling down like teardrops.
Weakened by my soulful cries.

Does my haughtiness offend you?
Don’t you take it awful hard
’Cause I laugh like I’ve got gold mines
Diggin’ in my own back yard.

You may shoot me with your words,
You may cut me with your eyes,
You may kill me with your hatefulness,
But still, like air, I’ll rise.    


எனினும் நான் எழுகின்றேன் - III

என் பாலினக் கவர்ச்சி
உன்னைப் சஞ்சலப்படுத்துகிறதா?
என் தொடைகளின் இடுக்கில்
வைரங்கள் இருப்பதுபோல
நான் இறுமாப்புடன் நடனமாடுவது
உன்னை ஆச்சரியப்படுத்துகிறதா?

அவமானத்தின்
வரலாற்றுக் குடிசைகளிலிருந்து
நான் எழுகின்றேன்
வலியில் வேர்கொண்டதோர்
கடந்த காலத்திலிருந்து
நான் எழுகின்றேன்
பாய்ந்து பரந்தோடும்
ஒரு கருங்கடல் நான்
கடற்பெருக்கின் பொங்குதலும்
நிரம்பிப் பெருகுதலும்
எனக்குள் கொண்டுள்ளேன்.

அச்சமும் பயங்கரமுமான
இரவுகளையும்
விட்டுவெளியேறி
நான் எழுகின்றேன்

அற்புதமான தெளிவுடன்
புலரும் அதிகாலையில்
நான் எழுகின்றேன்

என் மூதாதையர் கையளித்த
கொடைகளைக் கொண்டுவரும்
நானே
அடிமைகளின்
கனவும் நம்பிக்கையுமாவேன்.

நான் எழுகின்றேன்
நான் எழுகின்றேன்
நான் எழுகின்றேன்.


Still I Rise - III  - Maya Angelou -


Does my sexiness upset you?
Does it come as a surprise
That I dance like I’ve got diamonds
At the meeting of my thighs?

Out of the huts of history’s shame
I rise
Up from a past that’s rooted in pain
I rise
I’m a black ocean, leaping and wide,
Welling and swelling I bear in the tide.

Leaving behind nights of terror and fear
I rise
Into a daybreak that’s wondrously clear
I rise
Bringing the gifts that my ancestors gave,
I am the dream and the hope of the slave.

I rise
I rise
I rise.


* 'எனினும் நான் எழுகின்றேன்' மொழிபெயர்ப்புக் கவிதைத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிதைகள். மொழிபெயர்த்தவர் எழுத்தாளர் க.நவம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.