மதில் மேல் பூனைகளை நான் வெறுப்பவன்.
முதுகெலும்பற்றவை அவை.
சந்தர்ப்பங்களுக்கேற்ப அவை நடப்பவை.
சீற வேண்டிய நேரத்தில் சீறாதவை அவை.
சீற வேண்டிய தருணங்களில் மதில்களில்
உறங்கிக் கிடப்பவை அவை.
அதனால் அவற்றை எனக்குப் பிடிப்பதில்லை.
சீற வேண்டாத தருணங்களில் சீறி அவை
சிம்ம கர்ச்சனை செய்பவை.
அதனால் அவற்றை எனக்குப் பிடிப்பதில்லை.
மதில் மேல் பூனைகள்
முதுகெலும்பற்றவை.
மதில் மேல் பூனைகள்
சூடு சொரணையற்றவை.

மதில் மேல் பூனைகள்
ஒரு விதத்தில் பச்சோந்திகள்.
மதில் மேல் பூனைகளின்
மதில் நிறம் வேறு.
மண் நிறம் வேறு.
இலாகவமாக அவை நிறங்களை மாற்றுகின்றன.
இதில் அவை பச்சோந்திகளையும் மிஞ்சுபவை.
மதில் மேல் பூனைகளை நான் வெறுப்பவன்.
முதுகெலும்பற்றவை அவை.
சந்தர்ப்பங்களுக்கேற்ப அவை நடப்பவை.
சீற வேண்டிய நேரத்தில் சீறாதவை அவை.
சீற வேண்டிய தருணங்களில் மதில்களில்
உறங்கிக் கிடப்பவை அவை.
அதனால் அவற்றை எனக்குப் பிடிப்பதில்லை.
சீற வேண்டாத தருணங்களில் சீறி அவை
சிம்ம கர்ச்சனை செய்பவை.
அதனால் அவற்றை எனக்குப் பிடிப்பதில்லை.

 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.