கவிதை: தேர்தல்! தெரிதல்! தெளிதல்! - பூர்ணிமா கனகா -

தேசமே! நேசமே! மக்களின் சுவாசமே!

தேர்தல், மக்களின் தெரிதல்!
கண்ணெனப் போற்றுங்கள்
தேசத்தை!
கடமையெனக் காட்டுங்கள்
நேசத்தை!
தவறறிந்துக் களையெடுங்கள்
வேஷத்தை!
தேசமே தாயென வழங்குங்கள்
பாசத்தை!
தவற விடாதீர்கள் வாக்கு எனும்
பொக்கிஷத்தை!

கண்ணின் இமை போல
தேசத்தின் தேர்தல்!
தலைவர்களின் தேசிய காதல்
மட்டுமல்ல தேர்தல்;  நம்
உடம்பின் உயிர் போல
தேசியத்தின் காவல்!
மக்களின் விரல்
மத்தியத்தின் வாயில்!
விரல்களில் நிரப்பும் மை
நம் நாட்டின் முதன்'மை'!
விரலின் நுனி அல்ல
நம் தேசத்தின் அணியே தேர்தல்!

காவலுக்கெல்லாம் காவல்
நாட்டின் பாதுகாவல் நம் தேர்தல்!
விழிப்புடன் வாக்களி; அதுவே
வீடுகளின் அகல்ஒளி!
தேசத்தின் நிலவொளி!
வாக்களிப்பு, நல்வாழ்வுக்கு ஒரு வாய்ப்பு!
வாக்களிக்கத் தவறாதீர்!
வாழ்க்கையைத் தவறாதீர்!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.