சனி மூலைப் பல்லி இன்று கூடுதலாய்க் கத்தியது.
அர்த்த சாமக் குடுக்குடுப்பைக்காரரும்
நல்லதாய் எதுவும் உளறவில்லை.
விசுவாசமான தெரு நாயும் விடாமல்
ஊளையிட்டுக் கொண்டே இருந்தது.
ஊடே தொலைக்காட்சி
மாறி மாறி அலறியது...
ஏப்ரல் ஆறு... ஏப்ரல் ஆறு என்று.

சகுனமே சரியில்லை. முணுமுணுத்தது வாய்.
ஒன்று...கூடும் முட்டாள் தினம் முடித்து....
ஆறு....சுயமாய்
இடது ஆள்காட்டி விரல் நீட்டிச் சொல்வோம்...
இனி ஆள்வவனும் ஆண்டவனும் நாமே!

மொத்தத்தில்
இனி கறை(ரை)களுக்கு
சகுனமே சரியில்லை.

என் வீட்டுப் பல்லி
அந்த விசுவாச நாய்
எங்கோ போன குடுகுடுப்பைக்காரர்
மீண்டும் வருவது இனி நம் கையில்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.