வாகனத்தின் வானொலியை இயக்கினான் . ' குட்டிக்கதை ' ஒன்றை ஒலிப்பொருப்பாளர் பவானி கூறிக் கொண்டிருக்கிறார் . இதில் இடம் பெறுகிறது ' மனம் ' என்ற இத்தூணித்துண்டு . அது தலையிலே , நெஞ்சிலே எங்கையாச்சும் இருந்துட்டு போகட்டும் . " ஒரு ராஜா .... " ஏன் அவரை இழுக்கிறார்கள் . பிரபலங்கள் வர வேண்டும் போல இருக்கிறது . அவர் ஒவ்வொரு நாளும் சந்தனக் கட்டைகள் விற்கிற கடைக்கு முன்னால் நடந்து போகிறார் . என்ன , நடை பயில்கிறாரா ? . எளிமையாகப் போகிராராம் . ஊரிலே தெரு , கிருவெல்லாம் நடக்கிறார் போல இருக்கிறார் . நாட்டார்க்கதைகள் லொஜிக் மீறல்களுடன் தான் ஆரம்பிக்கிறது , நடக்கிறது , முடிகிறது . ஏன் ? . அழுத்த‌ம் கொடுக்க ...மனதிலே ஒருவர் தோன்றுகிறார் . அவரின் அடுத்த நகர்வு என்ன ? , தெரியாது . எனவே எளிமையாக தொடர்வது . அதுவும் ஒருவிதத்திலே ...சரி போலவே தோன்றுகிறது . இன்று லொஜிக் மீறலையே கதைக்கருவாக எடுத்து , கற்பனைக் குதிரைகளை பறக்க வைத்து ஃபான்டாசிக் கதையாக ...கதிரையின் நுனியில் இருக்க வைத்து விடுகிறார்கள் . தொழினுற்பம் கதை சொல்லி . சிலநேரம் அதற்கு விஞ்ஞானக் கதை என்ற தலைப்பும் இடப்படுகிறது .

கதை இது தான் . ராஜா கடைக்குமுன்னால் நடந்து போகிறார் . கடைக்காரர் , முதலை எல்லாம் போட்டு சந்தனக்கட்டைக் கடை திறந்திருக்கிறார் . பூஜைப் பொருட்கள் விற்கிற கடை இருக்கிறது .விறகாலை இருக்கிறது . இந்தியாவில் ...சந்தனக்கட்டை வெட்டின‌ வீரப்பன் புகழ் அந்த மாதிரி பறக்கிறது . ஆனால் நிஜத்தில் ...இந்தக்கடை இருக்கிறதா? . சவ இல்லம் இருக்கிற போது , வாங்கிறவர் இருக்கலாம் தான் . கதை நம் காலத்தில் நடக்கவில்லை . அரசர் காலம் . இன்று தடை செய்யப்பட்டவை சில அன்று விடுதலைப் பெற்றிருந்தன . அப்பவும் சாதாரணர் வாங்க முடியாது . அப்படியென்றால் விலையான பண்டம் . ஏன் அந்தக் கடையைப் போய்த் திறந்தார் ? . அரசர் போறார் எனத் தெரிகிறது . இவர் மனதில் , " அரசன் செத்துத் தொலைத்தால் நம்கட்டைகள் அத்தனையும் விற்பனையாகி விடுமே ! " என்ற நினைப்பு எழுகிறது .அரசரை சந்தனக்கட்டைகளை அடுக்கியே எரிப்பார்கள் . ஒரு லோடு போகும் . திரும்ப வாங்கி விற்கிற போது ...என்ன யோசிப்பாராம் ? . கதையைக் கேட்கிற போது கேள்விகள் கேட்கக் கூடாது . இலங்கை அரசு , வடக்கு , கிழக்கு இணைப்பையோ , சுயாட்சியையோ ...  ஏன் மாகாணவரசையோ கொடுக்கவில்லை ? . இந்திய அரசு வரும் வரையில் தாழ்ந்த‌ மாவட்டசபைகள் , அதிலும் யாழ் மாவட்டசபைகளை தமிழ்க்கட்சிகள் கைப்பற்றி விட்டது என்று அன்றைய இலங்கை ஜனாதிபதி கலவரத்தை ஏற்படுத்தி தமிழ்ப் பொருளாதாரத்தையே சிதைத்தார் ; உயிர்களைப் பறித்தார் . இந்திய அரசால் தான் மாகாணவரசு ஒப்பந்தத்தையே ... எழுத முடிந்தது . நம் அரசியல்வாதிகளுக்கு எதன் பெறுமதி தான் தெரிகிறது ? . சந்தையிலே கூச்சல் போட மட்டும்...  தெரிகிறது . அப்பப்ப மக்களின் தலைகள் உருளும் . உருப்படியாக கவனிக்க அவர்களுக்கு கற்றுக் கொடுத்தாலும் தலையிலேறுமா ?

அரசர் அக்கடை முதலாளியின் முகத்தைப் பார்க்கிற போதெல்லாம் " இவனை சிறையில் போட வேண்டும் " , அரசர் காலத்தில் கழுவேற்றுவது சர்வசாதாரணம் ," இவனை தூக்கிலே போடவேண்டும் " ...இப்படியே .... அவருக்கு சிந்தனை பறக்கிறது . அதே மாதிரி கடை முதலாளியும் .... ஒரே நேரத்தில் யோசிக்கிறான் . இது தான் சங்கதி . மனம் யோசிக்கிறதை இருவருமே ஒருத்தருக்கொருத்தர் புரிந்து கொள்கிறார்கள் . அரசருக்கு குழப்பம் . அவர் ஒரு பாரதி . மக்களை நேசிப்பவர் . மரண தண்டனை அளிக்க விரும்பாதவர். எனவே தன் பிரதான அமைச்சரிடம் கவலைப்பட்டுக் கூறுகிறார் . அமைச்சர் அறிவுடையவர் . என்ன காரணம் என அறிய விழைகிறார் . " சரி ,நான் பார்த்துக் கொள்கிறேன் . எனக்கு இரண்டு , மூன்று நாள்கள் வேண்டும் " என்கிறார் . அரசனும் சம்மதிக்கிறார் . " நான் நல்ல மாதிரி நினைக்கிறதாக மாற‌ வேண்டும் , ஆனால் , இதற்காக போறதை விட மாட்டேன் . போவேன் , வருவேன் " என்கிறார் . அமைச்சர் புன்சிரிப்பை உதிர்க்கிறார் . இரவு போல கடைக்கு மாறு வேடத்தில் போகிறார் . " சந்தனக்கட்டை விலை என்ன ? " என்று கேட்கிறார் . " வாங்கிற மூஞ்ஜியைப் பாரு . இந்த வழியாலே போற அரசர் இறந்தாலாவது ...விற்பனை ஆகும் " என பதில் இறுக்கிறார் . " அரசர் தான் என்னை அனுப்பினார் . என்ன விலை ? " கேட்கிறார் . கடை முதலாளியின் முகம் மலர்ச்சி அடைகிறது . ' நம் மன்னர் என் கஸ்டத்தை புரிந்திருக்கிறார் ' என்று மகிழ்கிறார் . அரசர் என்பதால் விற்கிற விலையை உயர்த்தவில்லை . " இங்கே பார் விற்கிற விலை போட்டிருக்கிறது " என்று தொங்கிற பட்டியலைக் காட்டுகிறார் . ஒன்றை வாங்கிற போது ...இந்த விலை . ஐந்தை வாங்கிற போது ஐந்து வீதம் கழிவு , பத்திற்கு பத்து வீதம் கழிவு ..." அப்படிக் கிடக்கிறது . அத்தனையும் வாங்கினால் கடையை மூட வேண்டி வரும் . கடை மூடப்படக் கூடாது . எத்தனை விசயங்கள் இருக்கின்றன , இரண்டு வரியிலே குட்டிக்கதை என்றாலும் ...முடித்து விட முடியாது பாருங்கள் . கணிசமான கட்டைகளை வாங்கி விட்டு " நீ அரசருக்கே கழிவு விலையில் தருகிறாய் . பாராட்டுக்கள் . தற்போது அரசருக்கு இவ்வளவு ...தான் வேண்டி இருக்கிறது . அவரிடம் உன் மனக்குறையையும் தெரிவிக்கிறேன் . மற்றவர்களும் வாங்க ஆவன செய்வார் . கவலைப்படாதே " என்றவர் , " நீ சொன்னதை விட அரசர் உன்னிடம் கொடுக்கத் தந்த பணம் அதிகம் . மறுக்காமல் வாங்கிக் கொள் " என இரண்டு மடங்குப் பணத்தைக் கொடுத்து விட்டு , " உன்னுடைய வண்டியிலே ஏற்றி பவானி சத்திரத்திலே இறக்கி விடு " என்று விட்டுப் போகிறார் . கடைக்காரரும் உடனேயே மகனைக் கூப்பிட்டு வண்டியில் ஏற்றி அனுப்பி விடுகிறார் .

அடுத்த நாள் அரசர் வருகிறார் . அவர் மனதில் அன்று அவன் மேல் வெறுப்பு ஏற்படவில்லை . ஆச்சரியமாகவிருக்கிறது . அதே சமயம் " அரசர் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் " என அவன் மனசிலே வாழ்த்துகிறான் . இந்த மன அலைகள் விஞ்ஞானபூர்வமாக பயணிக்கின்றன எனக் கண்டறிந்திருக்கிறார்கள் . பழைய நாட்டார் கதைகளில் , எவ்வளவு துல்லியமாக கருப்பொருளாக ...வைத்து குட்டிக்கதைகளாக்கி இருக்கிறார்கள் . ஏதோ நாம் நினைக்கிறோம் . இப்ப தான் ...எல்லாம் நடப்பதாக . அது கிருஸ்துக்கு முதலே தொடங்கி விட்டிருக்கிறது .

என்ன நம்ம செல்வனுக்கு பிரச்சனை என்றால் நாம் சிங்களவர்களை நினைத்த மாத்திரத்திலே வெறுக்கிறோம் . சிங்களவர்களும் தமிழர்களை வெறுக்கிறார்கள் . ஏன் ? . நம் இருவர் மனத்தில் ஓடும் எண்ணங்களை இருவருமே புரிந்து கொள்கிறோம். அதனால் தான் ஏற்படுகிறதா ? . அவனுக்கு ஆச்சரியமாக இருக்கிறது . அப்ப நாம் மாறி சிந்தித்தால் , அங்காலப் பக்கமும் மாறும் சிந்தனை வருமா ? . புத்தர் ,யேசு , காந்தி எல்லோரும் இதற்காகத் தான் அகிம்ஸையைப் போதித்தார்கள் . கரடு முரடான சூழலிலும் காந்தியின் ஒளிர்வை வெள்ளைக்காரர்கள் இனம் கண்டிருக்கிறார்கள் . சதா காந்திக்கு வில்லனாக இருந்த இங்கிலாந்து முன்னாள் பிரதமரான வில்லியம் சேர்ச்சில் , காந்தி இறந்த போது " நாங்கள் காந்தியைக் காப்பாற்றி இருந்தோம் . நீங்கள் விடுதலையை அளிக்கிறோம் என்று கூறி கொஞ்ச நாளிலே சுட்டுக் கொன்று விட்டீர்களே " என்கிறார் . கொன்றவனும் காந்தியின் மனதில் ஓடுறதைக் கண்டிருக்கிறான் . " முஸ்லிம் மக்கள் சகோதரர்கள் " . அது பிடிக்காமலே தான் கொன்றிருக்கிறான் . சாதாரண சிங்கள மக்களுடன் நம்மால் நிபந்தனையற்று மனிசர்களாக பிழங்க , பழக முடியுமா ? அப்படி பழகினால் தான் இந்த அலைகள் வேலை செய்யும் . முடியக் கூடியக் காரியமா ? செல்வனுக்கு வழி திறக்கவில்லை . நோ எக்ஸ்சிட் . டெட் என்டிலே நிற்கிறான் .