சிறுகதை வாசிப்புமுன்பெல்லாம்  நகரக்காவலர், அவர்களின் உபபிரிவான பார்க்கிங் ஒபிசர் … மட்டுமில்லை, நகரசபையும்  கூட தன்பங்கிற்கு டிக்கற் வழங்குவதற்கு ஆட்களை அனுப்பிக் கொண்டிருதிருந்தது. ‘பொது மக்களின் வாகன நிறுத்ததிலும் நிறுத்தக் கூடாது .     பட்ட காலே படும் போல , அதற்கும் டிக்கெட் கிடைத்துக் கொண்டிருக்கும்.  

சில‌ "டாக்ஸி" கம்பனிகள் ஏற்கனவே, சிறிது பாரம் கூடிய கணனியைப் பொறுத்தி, அவசர ,அவசிய விபரங்களை வழங்குவதற்கு மட்டும் ரேடியோவை பயன்படுத்திக் கொண்டிருந்தன. ‘ஜி.பி.எஸ் கருவி’ விற்பனைக்கு வந்த பிறகு,வீதிகள் விபரங்கள் அடங்கிய பெரிய வரை  புத்தகத்தைக் வைத்திருக்கிறதும் ஓட்டிகளிடம் குறைந்து விட்டன. சாந்தன், இன்னமும் ...புத்தகமும் வைத்திருக்கிறவர்களில் ஒருத்தன்.

நகரசபை, வர்த்தக மையங்களில் இரண்டு அல்லது மூன்று  "டாக்ஸி"கள் நிறுத்தும் தரிப்புகளையே பெரும்பாலும் ஏற்படுத்தி வைத்திருந்தனர்.அவற்றில் கொண்டு போய் நிறுத்த எல்லா "டாக்ஸி"களும் போட்டி போட்டால்.. எப்படி.?அதற்கு மேலே ..நிறுத்தினால்,வீதிச்சட்டத்தை மீறிய குற்றம். "டாக்ஸி"க் கம்பனிகள், சட்டை செய்யாமல் .  சேவையை செய்வதற்கு  தமக்கென பிறிம்பான சட்டங்களை, விதிமுறைகளை தயாரித்து வைத்திருந்தன.அவை நகரம் ஏற்படுத்திய சட்ட முறைகளோடு அவ்வளவாக ஒத்து போகவில்லை.வீதிச்சட்டத்தை மீறினால் பொலிஸ் டிக்கற்றை தருவான்.அவர்களுடைய தயாரிப்புபே மீறல்கள்.  நீயாச்சு, நகரகாவ‌லராயிற்று.."என விட்டேந்தியாகவே விட்டிருந்தார்கள்.

பார்கிங் டிக்கற்றுக்கள் வைப்பதில் கண்கொத்திப் பாம்பாக நடக்கிற பொலிஸ்,பார்சல்(பொதிகள்) பெறுவதற்கு நிறுத்தினால் கூட டிக்கற் வைக்கிறவர்களாக இழிந்து போய் இருந்தார்கள். ஓட்டிகள் வழக்கை சட்டமன்றத்திற்கு கொண்டு போகலாம். போவார்கள்.ஆனால்,அடிப்படையில் பொலிஸும், நீதிமன்றமும் ஒரே  கூட்டம் தான்.நகரத்தை காப்பாற்றுவதாகக் கூறி பொலிஸ் ,பொதுமக்களைச் சுடுகிறது.அதற்கு ஏதோதோ காரணங்களை எல்லாம் அடுக்கிறார்கள்.. எந்த பொலிஸ்காரர் தண்டிக்கப்பட்டிருக்கிறார்?. அதே கதை தான். (சட்டமன்றுக்கு) போவதால் க‌ட்டவேண்டிய தொகை சிறிதளவு குறையும்.அவ்வளவு தான் ந‌கரசபை,தற்போது கட்டாயமாக எல்லா "டாக்ஸி"களுமே கணனியைப் பொறுத்த வேண்டும் என சட்டத்தைக் கொண்டு வந்து விட்டிருந்தது. ப‌ருத்த கணனியும் உடல் மெலிந்து பாரம் குறைந்த‌ டபிலெட்டாக மாறியிருக்கிறது . அவனுடைய உட்பட‌ மற்றைய கம்பனிகள், டபிலெட்டையே கணனிக்கு பதிலாக‌ எடுத்துப் பொறுத்தி ,ரயல் பார்த்து...பாவனைக்கு கொண்டு வந்திருக்கின்றன‌. கணனியில் வரைபடம் முழுதுமே ஏரியாகளாகி விட்டதால் "டாக்ஸி" ஓட்டிகளிற்கு வீதி விதிகளை மீற வேண்டிய தேவை இருக்கவில்லை. தவிர்க்க முடியாது இருந்தாலும் இவ்வளவு வருசங்கள் ஓடுகிறார்கள்,அனுபவங்கள் இருக்காதா?

இந்த முறையால் வருசம் தவறாமல் கிடைக்கிற  அபராத டிக்கற்றுக்கள் அரைவாசிக்கு குறைந்து போயின என்பது நல்ல விசயம் தானே ‌. குறைந்ததை கொண்டாடலாம் போல இருந்தது

காவலவர்கள், "டாக்ஸி" ஓட்டிகளிடமிருந்து வீதிவிபரங்களை அறிய‌ ஒரு வழி யைக் கையாண்டார்கள்.  ஓட்டிகள் வீதியில் ‌ விபத்து நடப்பதைக்  கவனித்தால், அவற்றை "டாக்ஸி"க் கம்பனிக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்ற விதி இருக்கிறது.என்ன தான் அடிச்சுப் பிடிச்சாலும் கம்பனியும் இவர்களும் ஒரு குடும்பம் தானே!, சொல்லுவார்கள்!

பிறகு, நகரக்காவலர்கள், விபரங்களை  அவர்களிடமிருந்து ‌ இலகுவாக‌ பெற்றுக் கொள்வார்கள் . இப்படித்தான் தான்  தலையைச் சுத்தி மூக்கைத் தொடுவது போல,‌ வீதிகளில் உயிரில்லாத கமராக்களை பூட்டியது மாதிரி …இவர்களின்  உறவுப் பாலங்கள் தொடர்ந்த‌ன‌. இதிலே ஒரு சிக்கல்  இருக்கிறது.ஓட்டிகள் நினைத்தார்கள் என்றால் போலிச் செய்திகளை யும் கூற முடியும்.

இங்கேயும் எம்  உரிமைகளை பெறுவதற்காக போராடுவதற்கு வக்கீல்களின் உதவிகள் தேவை .வக்கீல்களுக்கு வீசி எறிய நிறைய நிறைய பணம் தேவைப்படுகின்றன.அவர்களிற்கான சேவைக்கட்டணம் அப்படி. அதிகம். நம்மவர்களோ  ….பூஜ்யமானவர்கள்  .எம்மவர்களில் சிறிது வசதிப் படைத்தவர்களை அவர்களின் கார்,உடை,நடையிலே ...தெரியும்.நகரக்காவலர்கள் அவர்களுடன் "சேர்..."என பவ்வியமாக நடப்பார்கள்.

வருசா வருசம் 'டாக்ஸி' ஓடுறதுக்கான அனுமதிச் சீட்டை புதுப்பிக்கிறதுக்கு 340 டொலர்கள் வேற‌ அழ வேண்டி இருந்தது. 'ஊபரா'ல்,  "டாக்ஸி"ச் சட்டங்களும்  ஆட்டம் காண ஆரம்பித்தன‌. நகரசபைக்கு  "டாக்ஸி" கள் வருவாய்யைக் கொண்டு வருபவை. நகரபிதா , வருகிற‌  "டாக்ஸி" வருவாய்கள் எல்லாம் நின்று விடுமே என ஏற்பட்ட‌ உதறால் "டாக்ஸி"க்கு வழங்கிற‌  அனுமதிச் சீட்டை ‘எல்லா ‌சிவில் வாகனங்களும்  ஓடுறதுக்கான பொதுவான‌ அனுமதிச் சீட்’டாக மாற்றி விட்டார்.  அதற்கு கட்ட வேண்டிய பணம் 130  டொலர். ஏணி, பாம்பு விளையாட்டு போல  ஓரேயடியாய் குறைந்து விட்டது. இப்ப, சாந்தன் வைத்திருக்கிறது அந்த புதிய  லைசென்ஸ் தான் . அதில்,’ "டாக்ஸி"’ என்ற சொல் லே  இல்லை. ஆனால், ‘"டாக்ஸி"’’ அடையாளங்கள் தான் வாகனத்தில் இருக்கின்றனவே, 'ஊபரா'ல் முழுநேரமாக "டாக்ஸி" ஓடுறவர்கள் பாதிக்கப் படுகிறார்கள். நகர ‌"டாக்ஸி", அந்தந்த நகரங்களிற்குள்ளே மட்டும் தான் பயணிகளை ஏற்றலாம்,விமான நிலையத்திலிருந்து ஏற்றவதென்றால் நுழைவுப் பணம் கட்டியே ஏற்ற வேண்டும் .போல சட்டங்கள்  கிடக்கின்றன.  'ஊபரு'க்கு அவை எல்லாமே இல்லை. வலுச் செல்லப்பிள்ளைகள்!,  அதனால், இவர்களிற்கிருந்த வியாபார‌வாய்ப்புக்களில் 40 வீதத்தை அச்சேவை விரைவாகவே கவர்ந்து விட்டிருக்கிறது..  'ஊபரு'க்கு எதிராக‌ "டாக்ஸி"க்காரர்கள், சிறு,பெரு வீதிகளை மறித்து  ஆர்ப்பாட்டங்களை  வைத்தும் விட்டிருக்கிறார்கள்.பலன் பூஜ்யம் தான். பலனை நம்பியா போராட்டங்கள் எல்லாம் நடைபெறுகின்றன? அநியாயம், அநீதிக்கு எதிர்ப்பை தெரிவிக்க வேண்டிய அவசியம் இருக்கின்றன.எனவே தெரிவிக்கின்றார்கள்.  கனகாலத்திற்கு ...கொண்டிழுக்கவும் முடியாது.
எதிர்ப்பைக் காட்டாது "அடிமைகளாக இருந்து விட்டார்கள் என்ற “பழிச் சொல்” நாளை  வரக் கூடாது.பகவத்கீதை பாணி தான்.மற்றவற்றைப் கட‌வுள் பார்த்துக் கொள்வார்.

"டாக்ஸி"யாக‌ ஓடப்படுற வாகனமும் நல்ல நிலையில் இருக்க வேண்டும்! எனவே, 6 மாசத்திற்கு ஒரு தடவை ,வருசத்தில் 2 தடவைகள் நகரசபையின் பொறுப்பில் இயங்கிற கார் கராஜ்ஜில் மீற்றர்,கமரா தொட்டு என பல வற்றைப் பரிசோதித்துப் பார்ப்பார்கள் .இலவசமாக இல்லை.அதற்கும் பணத்தைப் பெற்று தான் நடைபெறும்..தற்போது, ஊபர் கார்களை சோதிக்கப்படுவதில்லை என்பதால் அந்த பரிசோதனை களையும் நிறுத்த வேண்டி ஏற்பட்டு விட்டது கார்ச் சொந்தக்காரர்களிற்குச் செலவு குறைந்து விட்டது.

வேலை வாய்ப்புகள் குறைந்துள்ள நிலைமையில் வாகனமுள்ளவர்கள் தற்காலிகமாக இச்சேவைகளைச் செய்வதால் கையில் கொஞ்சம் பணம் பார்க்கிறார்கள், வேலை நேரம் குறைக்கப்பட்டவர்களும்,வேலைக்கு வார போதும்,திரும்புற போதும்...ஊபர் மூலமாக அந்த வழியில் போறவர்களை "டாக்ஸி"ச் சேவை போல ஏற்றி ,இறக்கி...கொஞ்சப் பணம் உழைக்கிறார்கள்.ஊபர் சேவையை முற்று முழுதாக பிழை எனச் சொல்ல முடியாது.இந்த நாட்டு வர்த்தக நிறுவன மே அதைச் செய்து பணச் சுழற்சியை இந்த நாட்டுக்குள்ளேயே நடத்தலாம். வெளியே இருக்கிற ஒரு வர்த்தக நிறுவனம் புத்திசாலியாக‌ பணம் கொண்டு போறது தான்... ஒரு மாதிரி இருக்கிறது. பொருளாதார வளர்ச்சிக்கு உள் பணச் சுழற்சி அவசியமானது. அதனால் தான் ஒரு மாகாணவரசிற்கும்.  போதிய அதிகாரங்கள்  தேவைப்படுகின்றன‌. இதை தடுக்க மற்றய மாகாணங்ககளின் ஒரு கூட்டுச் சேர்ந்த, நிலமை வேண்டியிருக்கிறது. பெரிய தொழிற்துறையை கட்டி எழுப்ப‌ மாகாணவரசுகளை ஒரு பசில்களாக‌  சேர்க்கிற பொறுப்பு மத்திய‌ அரசுக்கு இருக்கிறது. இங்கே மத்திய,மாகாணவரசுகள் இரண்டுமே சிறிது கவனக்குறைவாய் இருந்து விட்டன போலப் படுகின்றன‌.
வாழ்க்கைக்கையைப் போல,வியாபாரமும் எழுச்சியும்,வீழ்ச்சியும் இருப்பது தானே போட்டியில் அவர்கள் முந்திக் கொண்டு ஓடுகிறார்கள். வீழ்வது மறுபடியும் எழுவதற்கு தானே "டாக்ஸி"க்காரர்களிற்கு தான் தத்துவங்களை எப்படி சரிவர கையாளுவதென தெரியவில்லை.

தற்போது "முதலில் அமெரிக்காவிற்கு தான்! என்கிற கோசத்தோடு புதிய அமெரிக்க தலைவர் ஆட்சியை பிடித்திருக்கிறார்.பதிலுக்கு கனேடியர்களும் முதலில் கனேடியர்களிற்குத் தான் என ..நடந்தால்,ஊபர்ச்சேவையும் தன் நாட்டிற்கே திரும்பிப் போக வேண்டியும் நேரிடுமா?,  காலமும் .சிலவேளை  கனியலாமா?     

நகர வீதியில் வாகனங்களை நெடுநேரம் செலுத்துற எவருக்குமே அவர்களை அறியாமலே இரத்தத்தில் ஒரு விரைவு தன்மை ஏறி விடுகிற பலவீனம் இருக்கிறது .ஒரு பொறுமையிழப்புக்குள்ளாகிறார்கள். இங்கே,ஆமை வேகத்திலும் ஓடி வெல்லுவேன் என முன்னால் ஒருவர் ஓடிக் கொண்டிருக்கிறார் என்றால் "டாக்ஸி" ஓட்டுனருக்கும் தான் …பொறுமை காற்றிலே பறந்து விடுகிறது.நிறுத்தத்தில் நிற்கிற போது இறங்கி செம்மொழியிலே சூடாக ஏ சுதல்,கார்க் கண்ணாடியை உடைத்தல் எல்லாம் நடைபெறுவது சாதாரண வழக்கம். சிலவேளை, அவர்களை தாக்கியும் இருக்கிறார்கள்."டாக்ஸி"க் கராஜ்க்காரர்கள் ஏன் வீண் வம்பு என வடிவேல் பாணியில் தணிந்து போறதும் இருக்கின்றன‌. 'ஊபர்'காரர்களும் அதில் சிக்குப்படுகிறார்கள்.

அந்த பலவீனத்தை ஏலுமான‌  வரையில் குறைத்து நிதானத்துடனே சாந்தன் ஓடிக் கொண்டிருக்கிறான். ஒரு வலத்தில் செலவைக் குறைத்தால், அதை விழுங்க‌ மாதிரி வேற வலத்தில்  இன்னொரு செலவும் வரும் என்பது ஐதிகம்.கட்டிடக்கலைஞர்கள் போல  "டாக்ஸி"ற்கும் எதிர்பாராதச் செலவுகளிற்கு என  ஒரு தொகையும் ஒதுக்கி வைக்கிற பழக்கமும்  வேண்டும். இதை எல்லாம் அனுபவம் சொல்கிறது.'

இதையெல்லாம் விலத்தியும் ..."டாக்ஸி"ப் பிழைப்பு பரவாயில்லையாக தான் இருந்தது.

ஊபருக்குப் பிறகு தான் இந்த விதி, இந்த இறங்கு நிலவரம்  .  அதோடு  இந்த சம்பவமும் நடந்து விட்டது.

இவன் எப்பவுமே பின் புறமாக வாகனத்தை  வீதியில் இறக்குபனில்லை. அப்படி எடுக்கிறவர்களையும் கூட‌ பிடிப்பதில்லை.இப்படி எடுத்து தான் விபத்துக்குள்ளாகி ஒரு டைமண்ட் "டாக்ஸி"க்காரன் இறந்திருக்கிறான்.

பயணியை ஏற்ற இறக்கிய  இருவழி வீதியில் ,இரு பக்கமும் பனிக்குவியல் இறுகிக் கிடந்து…. ஒடுங்கிக் கிடந்தது.சென்ற அப்பார்ட்மெண்ட் கட்டிட ரைவ்வே இரண்டுக் கார் போக வரக் கூடிய பெரிதாக இருந்த போதிலும், அன்று அதிலும் பனி இறுகிக் கிடந்து இடைஞ்சலாக்கி இருந்தது.பாதுகாப்பாக திருப்பி பின்புறத்தை ரைவ்வேயில் இறக்க… முடியாமல் வீதியில் போக்குவரத்தும் கிடந்தது.அப்படியே நேரே விட்டான்.

பயணியை ஏற்றிய பிறகு அப்படியே பின்புறமாகவே வீதியிற்கு வந்த‌ போது, அவனைப் போல ஒரு அலுப்பன், எந்த யோசனையுமில்லாது அந்த ரைவ்வேயிற்கு எதிர்த்தாற் போல காரை கொண்டு வந்து நிறுத்தி விட்டு இறங்கியவன்"ஏய்,ஏய்!"என்று கத்தினான்.மற்ற பக்கத்தாலே இறங்கிய அவன் கூட்டாளியும் கூட‌ குரல் கொடுத்தான்.

எல்லாம் கணப்பொழுதில் நடந்தேறி விட்டன‌.

பனிப்படிவால் வீதியின் மத்திக்கு கிட்டவாக தூரத்தை வெகுவாக குறுக்கியிருந்தது. பிரேக் பிடித்து நிறுத்த முதலே இவனுடைய "டாக்ஸி" அவனுடைய காரை போய் இடித்து விட்டது. இவன் மெதுவாகத் தான் எடுத்தான்.இருந்தாலும் முடியவில்லை. அது யப்பான் கார்.அதன் பின் கதவை நெளித்து விட்டது.கடும் குளிரால் இறுகிக் கிடந்த இவனுடைய பம்பரிலும் வெடிப்புகள் ஓடியன.

செலவுகளிலிருந்து ஒருபோதும் தப்பவே முடியாதா? "எந்த தீமையிலும் சில நன்மைகள் கிடக்கின்றன.எவை என்பதை நாம கண்டறிய வேண்டும்" சொல்லுவார்கள்

அப்படி என்ன நன்மை இதிலே கிடக்கப் போகிறது? இப்படி சிறிதாக நடக்கிறதால் தான்  பெரிய விபத்துகளில் அகப்படாமல் தப்பிக் கொண்டிருக்கிறானோ ?
கார், கார்புறுதி நிறுவனங்கள் எல்லா  தரவுகளையும் கணனியில் ஏற்றும் .. வலையமைப்பைக் கொண்டவை..பனிப்பொழிவால் எதிர்பாராத விபத்துக்களை எல்லாம் சந்திக்கிற நகரம் இது.முந்தி எல்லாம் "டாக்ஸி" காப்புறுதி நிறுவனங்கள் தனிப்பட்டவர்களின் ஓட்டோ காப்புறுதிப் பக்கம் எல்லாம் வருவதில்லை.தற்போது மோசமான விபத்தானால் இவர்களிடமிருந்தும் ஒரு தொகையைப் பெற விழைகின்றன.அதனால் சும்மா தட்டுப்பட்டாலே தனிப்பட்டவையும்... கூட‌ சாட்டாக வைத்து இவர்கள் கட்ட வேண்டியவற்றைக் கூட்டி விடுகிற போக்குகளும் இருக்கின்றன.வாகனம் ஓடுறவர்கள் தம்மேல் பிழை இல்லாவிட்டாலும் கூட விபத்துகளில் சிக்குப் படாமல்,அல்லது அதைக் காப்புறுதி நிறுவனங்களிற்குக் கொண்டுப் போகாமல்...ஏதாவது செய்ய வேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்படுகிறார்கள்.

சாந்தனும் தள்ளப் பட்டான்.

ஆட்சியைப் பிடிக்கிற மூன்று அரசியல் கட்சியில் ஒன்று, மக்கள் நலன்களை அதிகமாக கவனத்தில் எடுத்து “இவர்கள் ஒவ்வொரு காருக்கெல்லாம் மாதாந்தம் அறவிடுற பணம் சற்று கூடுதலானது"என சாடியே வருகிறது.

வருசம் அறவிடுற தொகையை …15வீதத்தால் குறைக்க வேண்டும்'என கூறிக் கொண்டிருந்தது.

தற்போது ஆட்சியில் இருந்த கட்சியுடன்  இக்கட்சி, சிறிது கூட்டு சேரவும் வ‌ல்லது.  அந்த பேரங்களைப் பயன்படுத்தி 7 வீதத்தால் குறைத்தும் விட்டிருந்தது.எனவே,காப்புறுதி நிறுவனங்கள்,விபத்துகள் நிகழ்கிற போது அதை,இதைச் சொல்லிக் கூட்டி சமப்படுத்திக் கொள்றதுமாக ஒரு கயிறிழுப்பையும் கொண்டிருந்தன. ஒரு அரசாங்கமானது இவற்றைக் கட்டுபடுத்தக் கூடியதாக இருந்தாலும் வங்கிகளையும்,காப்புறுதி நிறுவனங்களையும் வெளிப்படையாகத் தெரியாமல் தமது ஒரு பகுதியாகக் கொண்டே இயங்குகின்றது.இயற்கை இடர்கள் நேர்கிற‌ போது அரைவாசிக்கு மேலே காப்புறுதி நிறுவனங்க ளே சீர் செய்கிற‌ போது,மீதியையே அரசாங்கம் செய்கின்றது.வரவு செலவுப் பற்றாக்குறைக்கு வங்கிகளிடமிருந்து குறைந்த வட்டியில் பணத்தைப் பெறுகின்றன.இதனால் இவ்வமைப்புகளிற்கு சுயாதினமாக சட்டவிதிகளை ஏற்படுத்தியும் இயங்கும் சுதந்திரம் கொண்டவை, இயங்கவும் விட்டிருக்கின்றன.

வங்கிகளே மோர்க்கேஜ்...போல பலவித‌ கடன்கள் கொடுத்து வசிப்பிடப்பிரச்சனைகளை முழுமையாகக் கவனிப்பன‌.எனவே தான் அதிகளவு வட்டிகளை விதிக்கின்றன.

‌ அரசாலும் இவர்களிற்கெதிராக அதிக சட்டங்களை ஏற்படுத்தவும் முடிவதில்லை.ஏற்படுத்தினாலும் உடனடியாக நீர்த்துப் போக வைத்து விடும் வல்லமை கொண்டவை.அதிலே,அவர்கள் அரசை மிஞ்சிய விண்ணர்கள்.    

சாந்தன்,  வீணே இங்கத்தைய காப்புறுதிச்சிக்கல்களில் சிக்கு படாமல் இருப்போமே என நினைத்தான்.

இங்கே ஒரு விபத்து நிகழ்ந்தால்... கார் காப்புறுதி நிறுவனங்கள், இருவரிலும் பிழைகளைக் கண்டு பிடித்தே….தீர்த்து, செலவை பங்கிட்டுக் கொள்கின்றன. பனி வீழ்கிற நாடு வேற‌.எனவே சூழலையும் கவனத்தில் எடு ப்பதால் அப்படிச் செய்ய வேண்டியிருக்கின்றன‌.

பிறகு, கொடுத்தப் பணத்தை சரி செய் ய இரு சாரரிடமிருந்தும் பெற்றுக் கொள்ள வும் முயல்கின்றன‌ எவருக்குமே விபத்து பிரச்சனையானது தான்.

"இந்த கார் கராஜ்காரரும் பாகிஸ்தான்காரர் தான்.அண்மையிலே கராஜ்ஜும் இருக்கிறது. இந்த கதவை திருத்தலாமா?... என போய்ப் பார்ப்போமா?” என சாந்தன் கேட்டான்.

வடமராட்சியைப் போல பாகிஸ்தானியர்களிடமும் ஒருவகை ஒட்டுறவு நிலவுகின்றது.

அவர் "ஓம்"எனக் கூறி இவனுடையக் காரை பின் தொடர வந்தார்.

"சலாம் அழைக்கும்!,...என தொடர்ந்த அவர்கள் பேச்சில்,கராஜ்காரர்,தொலைபேசியில் பொடி வேலை செய்கிற மெக்கானிக்கிடம் கதைத்தார். "இந்த வெள்ளிக்கிழமை(இருநாள் கழித்து)உம்முடைய காரை கராஜ்ஜிலே விட்டுட்டு போம்,பார்த்து எவ்வளவு செலவாகும் எனச் சொல்லுவார்.சனிக்கிழமை வேலை நடக்கும்.பெயின்ற் எல்லாம் காய வேண்டும்.திங்கள் கிழமை காலையிலே காரை வந்து எடுக்கலாம்"என்றார்."ஓம்!, அல்லாகு அக்பர்"என விடை பெற்றுச் சென்றார்.

கராஜ்காரர், அவனிடம் ஆதரவுடன் "இதை பெரிசாய் எடுக்காதே,நீ மெல்ல மெல்ல இந்தச் செலவை கட்டித் தீர்க்கலாம்"என்றான்.

சாந்தன் "இந்த உடைந்த பம்பருடன் "டாக்ஸி"யை மேற் கொண்டு ஓடலாமா?"எனக் கேட்டான்.

" வெடித்தது மட்டும் தான் இருக்கிறது.உடைந்து தொங்கவில்லையே.தாராளமாக ஓடலாம்.உன்ர காலத்திற்கு பொலிஸ் ம‌றித்தால்...இந்த சனி,ஞாயிறிலே எப்படியும் மாற்றி விடுவோம்'எனச் சொல் லு ,விட்டு விடுவான்"என்றார்.

“அறுந்த‌ ஊபரால் பிழைப்பு ஓரேயடியாய் நாறுது.கடைசி நேரம் வரையிலும் ஒட்ட ஒட்ட ஓட வேண் டியிருக்கிறதே,அதற்கிடையில் தேவையில்லாத இந்த விபத்து வந்து குறுக்கிட்டு விட்டதே “ என சலிச்சுக் கொண்டு ..தொடர்ந்தான்.

எப்படித் தான் நாம பொசிட்டிவ்வாக முயற்சித்தாலும் கூட ஒரு சிறிய இடரல், (ஒரு சுபாவம் , ஒரு குணம்...)எல்லாத்தையுமே கவிழ்த்து விடக் கூடியவை      ஆனால், காலம் எப்பையும் நல்லதையே எழுதுகிறது , என் கிறார்கள் ,     நம்பலாமா?

வெள்ளிக்கிழமை பார்வையிட்ட மெக்கானிக்,"இதே வகைக்காரின் கதவை மலிவாக எடுக்கலாம்.அதற்கு பெயின்ற் பண்ணி பொறுத்தலாம்.இதிலே,கை வைப்பதென்றால் செலவு நூறு ரூபாய்க்கு மேலே வீணே போகும்.எப்படி உங்கட விருப்பம்?"எனக் கேட்டார்.அந்த தொகை யே கராஜ்காரருக்கு அதிகமாகவே பட்டது.
கார்க்காரர் அவருடைய காரை " லக்சுமி "எனக் கருதுகிறவராக இருந்தார். அது அவருடைய‌ உயிருள்ள கார்!

அதில், கை வைத்து  ஒருபகுதியை தானும் மாற்றுவதற்கு அவருக்கு சம்மதம் இல்லை. நீண்ட காலமாக வைத்திருந்து 'ராசியான கார்'என நம்பிக் கிடக்கிறார் போல இருக்கிறது

பிறகென்ன, கராஜ்காரர்,சாந்த னைப் பார்த்தார். முடிவாக‌ "நீ செலவு செய்வதாக இருந்தாலும் கூட‌ இந்தச் செலவு கொஞ்சம் கூடிப் போய்ச்சுது. காப்புறுதி நிறுவனத்திற்கு அறிவிப்பதே நல்லது."என்றவர்,கார்காரிடம்"நீரும் ரிப்போர்டிங் நிலையத்திற்குப் போய் அறிவியும்.வழக்கமான முறையிலே எல்லாம் நடக்கட்டும் " என்றார்

கார்க்காரரே சம்மதித்திருந்தாலும் ஒரு  தொகையைக் ‌ சிறுகச் சிறுகக் கட்டுறதென்பதும் சாந்தனுக்கும்  கஸ்டமானது போலத் தான் பட்டது. 'ஊப'ருக்கு முதல் என்றால் இது பரவாயில்லை,ஊபருக்குப் பிறகு சிரமமானது தான்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.