- கலை, இலக்கிய விமர்சகர் மு.,நித்தியானந்தன் அவர்கள் கலை,இலக்கிய விமர்சகர் கே.எஸ்.சிவகுமாரன் பற்றி எழுதி பதிவுகள் இணைய இதழில் வெளியான கட்டுரையிது. - பதிவுகள்.காம்


ஈழத்து இலக்கியத்தோப்பில்  வைரம்பாய்ந்த தனி விருட்சமாக, ஆழ வேரோடி, பரந்தகன்ற கிளை விரித்து, குளிர்நிழல் பரப்பிநிற்கும் தனித்த ஆளுமைதான் கே.எஸ். சிவகுமாரன். இந்த பெரும் இலக்கிய வியக்திக்கு இணைசொல்ல இங்கே யாருமில்லை. நூறு கவிஞர்களைக் காட்ட முடியும்; நூறு நாவலாசிரியர்களைக் காட்ட முடியும்; நூறு கட்டுரையாளர்களைக் காட்ட முடியும். கே.எஸ். சிவகுமாரனுக்கு நிகரான பல்துறைசார்ந்த ஓர் எழுத்தாளனை ஈழத்து இலக்கியப்பரப்பின் கடந்த அறுபது ஆண்டுகால எல்லையில் காண்பதற்கில்லை. இந்த அறுபதாண்டுகாலத்தில் தொடர்ந்த வாசிப்பே அவரது சுவாசமாக இருந்திருக்கிறது. அந்த வாசிப்பின் வியாபகம் அசலானது. அயராத எழுத்துப்பணியே அவரின் மூச்சாக இருந்திருக்கிறது. இவரின் எழுத்துக்கள் 5,000 பக்கங்களில், முப்பத்தேழு நூல்களாக மலர்ந்திருக்கின்றன. ஆங்கிலத்திலும் தமிழிலுமாக இன்னும் நூல் வடிவம் பெறாத இவரின் எழுத்துக்கள், இன்னும் ஓர் ஆயிரம் பக்கங்களை மிக எளிதாகத் தாண்டிவிடும். இந்தளவு பல்துறை சார்ந்து, ஆங்கிலத்திலும் தமிழிலுமாக எழுத்தை ஓர் இயக்கமாக எண்ணிச் செயற்பட்ட வேறு ஒருவரை என்னால் சொல்ல முடியவில்லை.

'ஆராய்ச்சிக் கட்டுரைகள்' எழுதுவது, பல்கலைக்கழகம் சார்ந்த ஆய்வாளர்களுக்கு அது தொழில். பதவி உயர்வுக்குப் புள்ளிகள் தேடித்தரும் பொறி. 1980இல் வெளிவந்த நூலுக்கு 30 ஆண்டுகள் கழித்து வெளியான இரண்டாம் பதிப்புக்கு 'மறுவாசிப்பு' செய்கிறேன் என்று சொல்லி ஒரு பல்கலைக்கழகப் 'புலமையாளர்', அடிக்குறிப்பு சகிதம் அச்சியந்திரம் உருவானதில் ஆரம்பித்து, மேனாட்டார் வருகை, மிஷனரிகளின் செயற்பாடு என்று ஆரத்தி எடுத்து, கூடவே காவடியும் எடுத்து, ஆய்வுப்பரப்பிற்குள் நுழையவே பாதிக்கட்டுரை முடிந்து விடுகிறது.

கட்டுரைக்கான இணைப்பு -