தமிழ்க் கலை இலக்கிய உலகில் பத்மநாப ஐயர் நன்கறியப்பட்ட ஒருவர். அவருக்கு ஆகஸ்ட் 24 அகவை 80. அதனையொட்டி 'வணக்கம் லண்டன்' நடத்திய 'தலைமுறை தாண்டிய  பயணம்'  மெய்நிகர் நிகழ்வில் கலை, இலக்கிய ஆளுமைகள் பலர் கலந்து தம் கருத்துகளைத் தெரிவித்தனர்.  இந்நிகழ்வில் உரையாற்றிய அனைவரும் பத்மநாப ஐயரின் இலக்கியப்பங்களிப்பைப்  பல்வேறு கோணங்களில், அவருடனான தம் சொந்த அனுபவங்களின் அடிப்படையில் அணுகி ஆற்றிய உரைகள் பத்மநாப ஐயரின் பன்முகக்  கலை, இலக்கியப் பங்களிப்பை அறிய உதவுகின்றன.

அவரது பன்முகக் கலை, இலக்கியப் பங்களிப்பு இன்னும் பல்லாண்டுகள் தொடரட்டும். அவர் தொடர்ந்தும் நல்லாரோக்கியத்துடன் இயங்கட்டும். இவர்களுடன் இணைந்து  'பதிவுக'ளும் அவரை வாழ்த்துகின்றது. 

நிகழ்வுக்கான காணொளிக்கான இணைய இணைப்பு: பத்மநாப ஐயர் - 80 | அமுதவிழா 2021 - YouTube