யாழ்ப்பாணத்தில் நான் பழகக் கிடைத்த நண்பர்களில் புஷ்பராஜன் அபூர்வமானவர். அழகான இளைஞனாக - அமைதியும் தேட லும் வாசிப்பும் மிக்க இலக்கிய ரசிகனாக  புஷ்பராஜனும் நானும் ஏ.ஜே.யுமாக யாழ் ரீகர் தியேட்டருக்கு முன்னால் உள்ள தேநீர்க்கடையில் உரையாடிக் கொண்ட நாட்கள் என் மன அடுக்கில் என்றும் தேங்கிக்கிடப்பவை.

லண்டன் வந்த பிறகும் அந்த நல்ல நண்பரின் இனிய நட்பு நீடித்தது.  விமர்சனக்கூட் டங்களில், கலந்துரையாடல்களில், கருத் தரங்குகளில், திரைப்பட நிகழ்வுகளில், ஒன்றுகூடல்களில்,  கடற்கரைச் சுற்றுலாக்களில், குடும்ப நிகழ்வு களில் எல்லாம் நண்பராய் - நல்ல சகோதரனாய் பழகிய புஷ்பராஜன், லண்டனைவிட்டு, தன் குடும்பத்துடன் இணைந்து வாழ கனடா சென்றபோது, அந்தப் பிரிவினைத் தாங்க முடியாதவன் நான் மட்டுமல்ல, மிகப்பல லண்டன் இலக்கிய நண்பர்களும்தான்.  இருந்தாலும், கனடாவில் இன்றும் அவருடன் தொலைபேசியில் உரையாடிக்கொள்ள முடிவது திருப்தி தருவது.

புஷ்பராஜன் மென்மையான சுபாவம் கொண்டவர்.  மாமரத்து நிழலின் கீழ், மருந்துக்கு நிற்கையிலே, அருகில் இருந்த பெர்ணபேத் என்னும் தன் சின்னப்பெரியம்மாவை| நினைவுகூரும் மென்மை அது. மு.தளையசிங்கம், ஏ.ஜே.கனகரட்ன போன்ற ஆளுமைகளின் சிந்தனைகளால், பழக்கத்தால் வார்க்கப்பட்ட மென்மை அது. தன் முடிவுகளில் உறுதியாக இருந்தாலும், கூட்டங்களில் தன் குரலை உயர்த்தாத மென்மை. 'அலை' ஆசிரியர் குழுவில் இருந்தாலும், அலை பற்றி நீட்டி முழக்கி, டமாரம் அடிக்காமல் மௌனமாய் விலகும் மென்மை.  அயலவரை,  ஊரவரை அணைத்துக்கொள்ளும் மென்மை.

கலகக்காரன் போன்ற tagகளை அவர் குத்திக் கொள்வதில்லை.  நாலு பரப்புக்காணியைத் திரும்பத் திரும்ப உழுத கதையாய் - மாய்ந்து மாய்ந்து பேட்டி கொடுக்கும் அவஸ்தை அவரிடம் இல்லை.  ஆரவார இலக்கியச் சந்தையில், ஙொய் ஙொய் என்று ரீங்காரமிடும் ஈக்களின் தொல்லைகளிலிருந்து வெகுதூரம் விலகி இருப்பவர்.

குருநகர் அவரது ரத்த நாளங்களிலும் நரம்புகளிலும் ஊறித் தோய்ந்திருக்கிறது.  ' குருநகர்: கடலோரத்தில் ஒரு கல்வாரி ' என்ற தலைப்பில் குருநகர் பற்றிய விவரணப் படத்தை தீபம் தொலைக்காட்சிக்காக நான் தயாரித்தபோது, அவர் மகிழ்வோடு தன் உழைப்பை நல்கியிருந்தார். 'இத்தனை ஆண்டுகள் கழிந்தும் இன்றும் எம் கனவுகளில் உயிர்கொண்டு உலவுவது அந்தப் புழுதி மணலும் உப்புக்காற்று உலவும் நெய்தல் நில கோலங்கள் தான்'  என்று குருநகரின் மான்மியம் பாடும் பாணன் அவன்.  தமயந்தி தன் 'ஏழு கடல்கன்னிகள்' கதையிலே சொல்லுவது போல், அவன் கடலின்பொருட்டு கர்வமுடையவன். ' கடல் -அதுவே எங்கள் வாழ்வாதாரமும் மகிழ்ச்சியும்.  அத்தேவதை சினம் கொள்ளும் போதெல்லாம், திசையறியாது அலைந்து, கரையொதுங்காமல் போனவர்கள் ஏராளம்.  அவள் கோபமுறும் காலங்களில், அச்சம் கரிய இருளாய் ஊர்மீது கவிந்திருக்கும்.  ஆயினும் எம்மால் அவளை வெறுக்க முடிவதில்லை.  தேவதை யின் சினம் தணிந்து, தன் மெல்லிய அலைகளால் சிரிக்கும் வரை, வேண்டிக்கொள்வதைத்தவிர, வேறு வழியேதும் எமக்கு இருப்ப தில்லை.  அவள் சிரிப்பில், எங்கள் வீட்டு முற்றத்தின் வெண்ம ணலில் பூக்கள் விரியும்.  அன்றாடம் காய்ச்சிகளின் சமையல் அறைகளிலிருந்து புகை வெளியேறும்'  என்று புஷ்பராஜனின் கவிமனம் லயித்துக்கிடப்பதெல்லாம் ஓயாது கடலலைகள் கொஞ்சி விளையாடும் குருநகரில்தான்.

தனது கற்பிதத்தில் உருவாக்கிக் கொண்ட ஒரு நிழல் எதிரியை வீழ்த்துவதற்காக, தன்னை கீழோர் வட்டமாகக் காட்டுவதற்காக தான் சாதாரண கடற்றொழிலாளியின் மகன்| என்று கடலில் பிறந்த குற்றத்திற்கு பாவசங்கீர்த்தனம் கேட்பவனல்ல புஷ்ப ராஜன்.

'வலை உணங்கு குருமணல்' என்ற புஷ்பராஜனின் நூல், அவரே கூறுவதுபோல, 'எந்தையும் தாயும் அதன்பின் நாமுமாய் மகிழ்ந்து உலாவிய மண்ணையும் அதனை மருவி வழியும் கடலையும் பற்றிய மனப்பதிவுகள்'தான.;
இலங்கையின் இனவரைவியல் (ethnography) துறைக்கு வந்த சேர்ந்திருக் கும் அற்புதமான வரவு இந்நூல்.

ஆய்வு, ஆதாரம், அனுபவம் என்ற தளத்தில் நிர்மாணம் கொண்டிருக்கும் இந்நூலுக்கு இணையாக இன்னு மொரு நூல் குருநகர் குறித்து எழுதுவ தற்கு நாம் மிகமிக நீண்ட காலம் காத் திருக்கவேண்டும். ஷதென்தமிழ் நாட்டுக் கத்தோலிக்க மீனவர்க ளின் வாழ்வியலைப் பதிவு செய்ய விரும்புவோருக்கு இந்நூல் வழிகாட்டியாக அமையும் தன்மையது| என்று சான்று வழங்குபவர் ஆய்வறிஞர் ஆ.சிவசுப்பிரமணியன்.

நிலவொளியின்
மம்மல் படர்ந்த வீதிகளில்
தோளில் சுமந்த
மரக்கோலும் வலையுமாய்
கடல்முகம் சிலர் விரைய
கோவில் நோக்கி
அன்னையர் துணையோடு
துப்பட்டி சகிதம்
பின்செல்லும் கன்னியர்

- புஷ்பராஜனின் காலை நேரச் சித்திரங்கள்.

அந்தியின்
மங்கல் அடிவானம்
கருமை ததும்பும் கடல்
களங்கட்டி வலைக்குள்
வயிறுகள் எத்தனையோ..|
- இது அந்திநேரத்து அவதானம்.
வியாகுலமாதா முன்னே
வழியும் கண்ணீருடன்
வயிறு பசித்திருக்க...
தூரக் கச இருட்டில்
கடலோடு ஒருவன்
கண்விழித்து மாய்கின்றான்

- இது இரவுநேரத்தின் இதயக்குமுறல்.

புஷ்பராஜனின் நெஞ்சில் கணமும் பொழுதும் நடமாடும் நெய்தல் நில மாந்தர்கள் இவர்கள்.  அவர்களது பாடுகளும், ஆசைகளும், பசிகளும், ஏக்கங்களும் மகிழ்ச்சிகளும் புஷ்பராஜனின் மனோலயத்தில் எப்போதும் எதிரொலிப்பவை.  புஷ்பராஜனின் 'மீண்டும் வரும் நாட்கள்' ஒரு கடலோரச் சிற்றூரின் வாழ்வு ஓட்டத்தை, யுத்த பூமியின் கொதிநிலையை, புலம்பெயர் வாழ்வின் அவலத்தை - மூன்று வெவ்வேறு வாழ்வுச்  சூழல்களின் பின்னணியில் வெளிப்படுத்தும் அசலான கவிதைகள்.  'மின்னொளி வீசும் தேனீர்க் கடையொன்று மீனவர்க்காய் முழித்திருக்கும்' அதி காலையிலிருந்து சூழவும் உடைபடும் கடைகளின் ஒலியும் வெறிக்கூச்சலும் வேற்றுமொழியும் விண்ணுயர்ந்த தீச்சுவாலையும்| எழுந்த சூழலிலிருந்து, தனிமைக் காற்றோடு அள்ளுண்ட சருகாய்| நிலையற்றுப் பரவும் புலம்பெயர்வாழ்வுவரை புஷ்பராஜனின் கவிதைகள் நீள்கின்றன.  பாப்லோ நெருடா கூறும் நடழபெயவநன elongated homelandஐ நெஞ்சில் சுமந்து திரியும் கவி புஷ்பராஜன்.  செட்டான வார்த்தைகளும் ஆழ்ந்த ஆத்ம விசாரமுமாய் அவரின் மென் மையான கவிமனத்தின் விகசிப்பை, ஆத்திரமும் ஆவேசமும் கொள்ளும் சூழலிலும் நிதானமாய் ஆங்கிலம் வழி இலக்கிய வாசிப்பின் நீட்சி புஷ்பராஜனின்  விமர்சனக் கட்டுரைகளுக்கு புதிய பலத்தைச் சேர்த்தி ருக்கின்றன.  சோவியத் நாவல்களின் மீது அவருக்கு நிறைந்த ஈடுபாடு உண்டு.  டால்ஸ்டாய், டாஸ் டாவ்யெஸ்கி, போரிஸ் பஸ்டர்நாக், அன்னா அக்மத் தோவா போன்ற சோவியத் இலக்கிய ஆளுமைகள் அவரிடம் தீர்க்கமான பாதிப்பை ஏற்படுத்தி இருக்கின்றனர். சோவியத் இலக்கி யாசிரியர்கள் ஈழத்துச் சூழலில் நமக்கு மிகவும் பரிச்சயமா னவர் களாயிருந்த போதும், லத்தீன் அமெ ரிக்க இலக்கியங்களுடனான ஈடுபாடு நம்மிடம் அத்துணை இருந்ததில்லை.  லத்தீன் அமெரிக்க இலக்கியங்கள் பற்றிய நமது பார்வையை விஸ்தீரணப்படுத்தியவர்களில் ரெஜி சிரி வர்த்தன முதன்மை இடம் வகிக்கிறார்.  புஷ்பராஜனின் லண்டன் வாழ்வில் லத்தீன் அமெரிக்க இலக்கியத்துடனான பரிச்சயம் சற்று வேகம் கொண்டது எனலாம். சர்ச்சைக்குள்ளான இலக்கிய ஆளுமைகள் எல்லாம் அவரது வாசிப்பின் பரப்பில் நின்றிருக்கிறார்கள்.  தஸ்லிமா நஸ்ரீன், பஸ்டர்நாக், ஹரோல்ட் பின்ரர், டான் பிரவுன், பிறைடா போன் றோர் குறித்து நுணுக்கமான கட்டுரைகளை புஷ்பராஜன் எழுதி யிருக்கிறார்.

தா.இராமலிங்கம், செழியன் ஆகிய கவிஞர்கள் குறித்த புஷ்பராஜனின் கட்டுரைகள் அவரது நுட்பமான கவிநயத்திற்கும் எழுத்து வன்மைக்கும் சாட்சி சொல்வன. லஷ்மி ஹோம்ஸ்ட்ரம், செழியன் ஆகியோரின் இறுதி யாத்திரை பற்றிய அவரின் குறிப்புகள் நெஞ்சை நெகிழ வைப்பன.

கூத்து, நாடகம். நடனம், இசை, ஓவியம் போன்ற கவின்கலை களிலும் ரசனையும் அவதானிப்பும் கொண்டவர் புஷ்பராஜன்.  இசைக்குயில் எம்.எஸ். மீது ஆதுரம் மிகக் கொண்டவர். D.J.S.George எழுதிய  A  life  in  Music என்ற நூலை வாசித்து எம்.எஸ்.இன் வாழ்வுமீது கவிந்திருந்த துயரச்சாயல் குறித்து புஷ்பராஜன் வெகுவாக வருந்தியிருந்தார்.  

கூர்மையான சினிமா ரசனையும் கொண்ட புஷ்பராஜன், தேர்ந்த திரைப்படங்களைத் தேடிப் பார்ப்பவர்.  திரைப்படங்கள் குறித்த கலந்துரையாடல்களில் தனது ஆழ்ந்த ரசனைக் குறிப்புகளை வெளிப்படுத்துபவர்.  'விம்பம்' நடத்திய உலகக் குறும்படங்க ளின் தேர்வுகளின்போது, புஷ்பராஜனும் நடுவராக இருந்து, பரிசீலனைக்குக் காத்திரம் தந்திருக்கிறார்.

எது பற்றியும் எழுதப்புகும்போது, ஆறுதலாக, நிதானமாக, நூல்களைத் தேடி, பரபரப்பு இல்லாமல் எழுதும் பண்பு புஷ்பராஜ னுடையது.  பத்தி எழுத்துகள் அவருக்கு சரிப்பட்டு வராது.  வாராவாரம், மாதாந்தம் தொடர் எழுதிக்கொண்டிருக்கும் ஆக்கினைகளுக்கு அவர் ஆட்பட்டுக் கொள்வதில்லை.  ஈழத்து நாவல்கள் குறித்து ஷகாலம்| இதழில் புஷ்பராஜன் எழுதிவரும் கட்டுரை அவரது விசாலமான தேடலையும், விமர்சன வீச்சையும் வெளிப்படுத்துவதாகும்.  அவரது ஆறுதலான எழுத்திற்கு, ஷகாலம்| இதழின் ஆறுதலான வருகையும் பரஸ்பரம் உதவிக் கொள்கின்றன போலும்!

ஒரு கவிஞன், எழுத்தாளன், விமர்சகன், சுவைஞன் என்பவற்றை எல்லாம் மீறி உயர்ந்த பண்புகளும். உன்னத நெறிகளும் கொண்டவர் புஷ்பராஜன். உறவுகளை மதிப்பவர்.  நட்பைப் பேணுபவர்.  நேசம் மிக்கவர்.  நட்புகளில் விரிசல் வருகிறபோது, நட்பாக இருந்த காலத்து நிகழ்வுகளுக்கு அனர்த்தம் பூசுவதும், திடீர்ப்பொறிதட்டி character assasination செய்ய முனைவதும் போன்ற குரோத வெளிப்பாடுகளை புஷ்பராஜனிடம் கிஞ்சித்தும் காண்பதற்கில்லை. அவரவர் கருத்துடன், புரிதலுடன் வாழப் பழகுதலே இனிதும் நிறைவும்| என்று கருதுபவர் புஷ்பராஜன்.  புத்தக வாசிப்பு என்பது அவருக்கு ஆத்மார்த்தமான உள்நோக்கிய விசாரத்திற்கான திறவுகோல்.  வெளியில் தன் வாசிப்புப் பட்டியலை விரிப்பதற்கல்ல.  மனுக்குலம் மீதான கரிசனை அவரில் எப்போதும் வேரோடிக்கிடப்பது.  சத்தியதரிசியாகவோ, புனிதராகவோ அவர் சாதுர்ய வேஷம் காட்டுபவர் அல்ல. ஏ.ஜே. குறித்த அவரின் கட்டுரை  புஷ்பராஜனின் வாழ்க்கை நெறிகள் பற்றி சூசகமாகச் சொல்கிறது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.