திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்களுக்கு  சென்னை எழுத்து இலக்கிய அறக்கட்டளை சார்பாக அவரின் “ அந்நியர்கள் “ என்ற  நாவலுக்கு ரூபாய் ஒரு லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்து இலக்கிய அறக்கட்டளையின் தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான திரு ப. சிதம்பரம் வெளியிட்ட அறிக்கையில் இதைத் தெரிவித்துள்ளார். விரைவில் சென்னையில் நடைபெறும் விழாவில்  திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்களுக்கு  இந்தப்பரிசு அளிக்கப்படுகிறது . எழுத்து இலக்கிய அறக்கட்டளையின் தலைவராக முன்னாள் மத்திய நிதியமைச்சருமான திரு ப. சிதம்பரம் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்களாக  கவிஞர் வைரமுத்து , மூதறிஞர் அவ்வை நடராஜன், கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா  ஆகியோர்  இடம் பெற்றுள்ளனர் ( 044 28270 937 )

. . எழுத்து இலக்கிய அறக்கட்டளையின் இலக்கியப் பொறுப்பாளராக எழுத்தாளர் இலக்கியா நடராஜன் விளங்கி வருகிறார். ஆண்டுதோறும் ஒரு சிறந்த நாவலுக்கு எழுத்து இலக்கிய அறக்கட்டளை  ரூபாய் ஒரு லட்சம் பரிசு வழங்கி வருகிறது. (பெரும் நகரங்களுக்கு வேலைகாரணமாக இடம் பெயர்ந்து வாழும் வடமாநிலத்தொழிலாளர்களின் வாழ்வியலின் ஒரு பகுதியாய் ஒரு இளம் பெண்ணை மையமாகக் கொண்ட இந்த நாவல் 2020 ஆம் ஆண்டுக்கான திருமதி சௌந்திரா கைலாசம்  இலக்கியப்பரிசு பெற்ற நாவல் சுப்ரபாரதிமணியனின் எழுத்துப்பரப்பில் பதிவான 18 நாவல்களில்        7 நாவல்கள் உட்பட  15 நூல்கள் ஆங்கிலத்திலும் , 5 நாவல்கள் வீதம் இந்தி, மலையாளத்திலும் வெளியாகி உள்ளன. ” சாயத்திரை”  என்ற நாவல் சிறந்த நாவலுக்கான தமிழக அரசின் பரிசை பெற்றது. அது ஆங்கிலம்,  இந்தி, மலையாளம், கன்னடம், வங்காள மொழிகளில் மொழிபெயர்ப்பாகி உள்ளது. சிறந்த சிறுகதையாளருக்கான கதா விருதை இந்திய ஜனாதிபதியிடமிருந்து 1993ல் பெற்றவர் . திருப்பூரைச் சார்ந்தவர். )

மதுராந்தகன் ( கனவு இலக்கிய வட்டத்திற்காக)/  Tiruppur 77089 89639
8/2635  Pandian Nagar, Tiruppur 641602

தகவல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.