இலங்கையில் போர்க்காலச் சம்பவங்களின்போது நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரும் அமெரிக்காவின் தீர்மானம் ஐநாவின் மனித உரிமைகள் பேரவையில் இந்தியா உட்பட 24 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானம் தொலைநோக்கில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததொன்று. இலங்கையை உடனடியாக வற்புறுத்தாது விட்டாலும், நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானம் இலங்கைக்கான தீவிரமானதொரு எச்சரிக்கை. மகிந்த ராஜபக்ச சகோதரர்களின் அரசானது தங்களது நோக்கில் இலங்கைத் தமிழர்களது உணர்வுகளை, உரிமைகளைக் கவனத்திலெடுக்காது தொடர்ந்தும் தமிழர்களை இராணுவ ஆட்சிக்குள் அடிமைப்படுத்தியவாறு, திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை வடகிழக்கில் அதிகரித்தவண்ணமிருக்குமானால், நடைபெற்ற போர்க்குற்றங்கள் பற்றிய பூரண விசாரணை நடத்தாமல் தாமதிக்குமானால் இன்னும் சில வருடங்களில் இத்தீர்மானத்தை ஆதாரமாக வைத்து சர்வதேச சமூகம் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் போன்ற ஏனைய அமைப்புகளின் வாயிலாக நடவடிக்கைகளை எடுப்பதற்கு அல்லது ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் மேலும் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு இந்த தீர்மானம் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.இலங்கையில் போர்க்காலச் சம்பவங்களின்போது நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரும் அமெரிக்காவின் தீர்மானம் ஐநாவின் மனித உரிமைகள் பேரவையில் இந்தியா உட்பட 24 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானம் தொலைநோக்கில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததொன்று. இலங்கையை உடனடியாக வற்புறுத்தாது விட்டாலும், நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானம் இலங்கைக்கான தீவிரமானதொரு எச்சரிக்கை. மகிந்த ராஜபக்ச சகோதரர்களின் அரசானது தங்களது நோக்கில் இலங்கைத் தமிழர்களது உணர்வுகளை, உரிமைகளைக் கவனத்திலெடுக்காது தொடர்ந்தும் தமிழர்களை இராணுவ ஆட்சிக்குள் அடிமைப்படுத்தியவாறு, திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை வடகிழக்கில் அதிகரித்தவண்ணமிருக்குமானால், நடைபெற்ற போர்க்குற்றங்கள் பற்றிய பூரண விசாரணை நடத்தாமல் தாமதிக்குமானால் இன்னும் சில வருடங்களில் இத்தீர்மானத்தை ஆதாரமாக வைத்து சர்வதேச சமூகம் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் போன்ற ஏனைய அமைப்புகளின் வாயிலாக நடவடிக்கைகளை எடுப்பதற்கு அல்லது ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் மேலும் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு இந்த தீர்மானம் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.

இந்தத் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளித்திருப்பது எந்தவிதத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. இதுவரை கால இந்தியாவின் நடவடிக்கைகளை நோக்கினால் எப்பொழுதுமே இந்தியா தன் நலன்களை மையமாக வைத்தே இலங்கைப் பிரச்சினையை அணுகி வந்திருக்கின்றது. அந்த அணுகுமுறையினையே இப்பொழுதும் கடைப்பிடித்துள்ளது. இந்தியாவின் தேசிய பாதுகாப்பென்பது இந்திய மாநிலங்களின் ஒற்றுமையிலேயே தங்கியுள்ளது. இந்தியா சிதறிய நிலையில் பிராந்திய நலன்களை அது அணுக முடியாது. உறுதியான இந்தியாவின் மூலமே அது பிராந்தியத்தில், சர்வதேசரீதியில் தன் நலன்களை உறுதியாக எடுக்க முடியும். சீனாவை, பாகிஸ்தானை பூச்சாண்டி காட்டி அவ்வப்போது இந்தியாவைத் தன் வலைக்குள் சிக்க வைப்பதற்கு வைத்திருப்பதற்கு மகிந்த ராஜபக்சவின் அரசானது ஆடிய ஆட்டத்தினால் சலிப்புற்ற இந்தியாவின் எச்சரிக்கையாகவும் ஒருவிதத்தில் இதனைக் கொள்ளலாம். அதே சமயத்தில் இன்னுமொன்றையும் கவனத்தில் கொள்ளவேண்டும். இந்தியாவுக்கும், இலங்கைக்கும், இந்தியாவுக்கும் ஈழத்தமிழர்களுக்கும், இந்தியாவுக்கும் சிங்கள மக்களுக்குமிடையிலான வரலாற்றுத் தொடர்பானது ஆயிரக்கணக்கான ஆண்டுகளை உள்ளடக்கியதொன்று. இருந்தாலும் கோடிக்கணக்கில் தமிழர்கள் வாழும் பெரியதொரு மாநிலத்தை உள்ளடக்கிய நாடு என்ற வகையில் அதன் பாதுகாப்பானது ஈழத்தமிழர்களின் பாதுகாப்பிலும் தங்கியுள்ளது. இந்த வகையில் இந்தியாவின் இந்த முடிவானது வரவேற்கத்தக்கது. தொலைநோக்கில் முக்கியத்துவம் வாய்ந்தது.

இலங்கை ஒரே நாடு; பிரிக்கப்பட முடியாத ஒரு நாடு என்று முழங்கும் இலங்கை அரசானது அதனைச் சாதிக்க வேண்டுமானால் ஈழத்தமிழர்கள் சகல உரிமைகளுடன், எந்தவித அச்சமுமின்றி வாழும் சூழலை உருவாக்க வேண்டும். அத்தகைய சூழல் உருவாக்கப்பட வேண்டுமானால் வடகிழக்கில் நடைபெறும் சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும். சிங்கள் மக்கள் தாமாகவே வந்து குடியேறுவதைத் தமிழர்கள் எதிர்க்கவில்லையென்பதை இனவாத அரசியல்வாதிகள் உணரவேண்டும். வடகிழக்கிலிருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும். நாட்டின் பாதுகாப்புக்காக இருக்கும் ஓரிரு முகாம்களும் வடகிழக்குத் தமிழர்களுக்கு எந்தவித அடக்குமுறைகளையும் பிரயோகிக்க முடியாதபடி, தென்னிலங்கையில் எவ்விதம் அவை இயங்குகின்றனவோ அவ்விதம் இருக்க வேண்டும். தமிழ் மாநில அரசுகளுக்குக் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் போன்றவை வழங்க வேண்டும். முக்கியமாக அண்மையில் முடிவுற்ற ஆயுதப் போராட்டத்தின்போது தமிழ்மக்கள்மேல் பிரயோகிக்கப்பட்ட மனித உரிமைகள், போர்க் குறறங்கள், இனப்படுகொலைகள் போன்ற விடயங்கள் பற்றிய (அது யாராலும் புரியப்பட்டிருந்தாலும்) பாரபட்ச விசாரணகளை சுயாதீனமான சர்வதேச அமைப்பொன்று மூலம் நடாத்தி பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். பிரச்சினையென்னவென்றால் வேலியே பயிரை மேய்ந்திருக்கும்போது வேலியே எவ்விதம் சுயாதீனமானதொரு விசாரணையை வழங்குமென்பதுதான். அதற்குத்தான் சர்வதேச சமூகத்தின் குறிப்பாக இந்தியாவின் வலிமையான பூரண ஒத்துழைப்பு இவ்விதமானதொரு விசாரணையினைத் தொடர்வதற்கும், அமுல்படுத்துவதற்கும் அவசியமாகும். தென்னிலங்கையின் முற்போக்குச் சக்திகளும் இவ்விதமானதொரு அணுகுமுறையினைக் கொண்டிருப்பதைக் கவனிக்க வேண்டும். அதே சமயம் தற்போதுள்ள அரசானது பதவியிலிருக்கும்வரையிலும் போர்க்குற்றங்கள் தொடர்பான முறையானதொரு விசாரண நடைபெறுமா என்பது கேள்விக்குரியதே. எதிர்காலத்தில் ஆட்சி மாறும்போது நல்லதொரு தீர்வினை அடைவதற்கு ஐநாவின் மனித உரிமைகள் பேரவையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்தத் தீர்மானம் வழிவகுக்கும் சாத்தியங்களுள்ளன.   - நந்திவர்மன் -