பிராந்திய அரசுகளின் பக்க பலத்துடன் கூடிய அனைத்துலகத்தின் உண்மையான முயற்சி இலங்கைத் தீவில் போர்க் குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறுவதற்கும் சமூகங்களுக்கிடையே மீளிணக்கத்தைக் கொணர்வதற்கும் வழிவகுக்கும். ஜெனீவாவில் தற்போது நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடரரானது இலங்கையிலே போரின் கடைசிக் கட்டங்களில் இரு பகுதியினராலும் இழைக்கப்பட்டதெனச் சாட்டப்பட்ட போர்க் குற்றங்களுக்கும் மானிடத்துக்கு எதிரான குற்றங்களுக்கும் பொறுப்புக் கூறச்செய்வதற்கு அனைத்துலகச் சமூகத்திற்கு ஓர் அரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.[ மார்ச் 03, 2012 ] பிராந்திய அரசுகளின் பக்க பலத்துடன் கூடிய அனைத்துலகத்தின் உண்மையான முயற்சி இலங்கைத் தீவில் போர்க் குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறுவதற்கும் சமூகங்களுக்கிடையே மீளிணக்கத்தைக் கொணர்வதற்கும் வழிவகுக்கும். ஜெனீவாவில் தற்போது நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடரரானது இலங்கையிலே போரின் கடைசிக் கட்டங்களில் இரு பகுதியினராலும் இழைக்கப்பட்டதெனச் சாட்டப்பட்ட போர்க் குற்றங்களுக்கும் மானிடத்துக்கு எதிரான குற்றங்களுக்கும் பொறுப்புக் கூறச்செய்வதற்கு அனைத்துலகச் சமூகத்திற்கு ஓர் அரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.

கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணையத்தின் ஆக்கபூர்வமான பரிந்துரைகள்ää நல்லிணக்கத்திற்குச் சாதகமான சூழ்நிலையை உருவாக்கவல்ல நடைமுறைச் சாத்தியமுள்ள முதற்படிகளாக அமையுமென்பதால் அவற்றை உலகத் தமிழர் பேரவை வரவேற்பதோடு அவை துரிதமாகச் செயற்படுத்தப்பட வேண்டுமெனவும் வலியுறுத்துகின்றது. எனினும்ää போர் முடிவுற்று மூன்று ஆண்டுகள்வரையாகியும் இலங்கை அரசு இதுவரை போர்க் குற்றங்கள் பற்றியும் அனைத்துலக மனிதாபிமானச் சட்டமீறல்கள் பற்றியும் நம்பகமான விசாரணை நடத்தவோ குற்றம் புரிந்தோரைச் சட்டத்தின்முன் நிறுத்தவோ முனைப்பு எதனையும் காட்டவில்லை. பொறுப்புக் கூறுதல் விடயத்தில் உள்ளகச் செயல்முறை போதிய அளவில் கவனம் செலுத்தாது தோல்வியுற்றமையானதுää தண்டனைகள்பற்றிய பயமின்மை தொடர்வதற்கும் பாரதூரமான மனிதவுரிமை மீறல்கள் நடைபெறுவதற்குமான ஒரு கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளது.

கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணையமேää தன்னால் செப்தெம்பர் 2010 இல் முன்வைக்கப்பட்ட இடைக்காலப் பரிந்துரைகளானää தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் பட்டியலைப் பிரசுரித்தல் மற்றும் துணைக்குழுக்களின் ஆயுதங்களைக் களைதல் போன்றவை நிறைவேற்றப் படவில்லையெனச் சுட்டிக்காட்டியுள்ளது. பரிந்துரைகளை நிறைவேற்றாமல் விடுவதில் அரசு தொடர்ந்து காட்டிவரும் சாதனை மற்றும் நிலையான சமாதானத்திற்கும் நீதிக்கும் தேவையான சமூகää அரசியல் சூழலை உருவாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க அது மறுத்து வருதல் ஆகியனவே இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு மிக மோசமான சிக்கல்களாக உள்ளன.

போரின்போது நடைபெற்றவை பற்றிய உண்மைகளை அறியவும் அவற்றிற்குப் பொறுப்புக்கூறவும் ஓர் பக்கசார்பற்ற அனைத்துலக விசாரணையால் மட்டுமே முடியுமென உலகத் தமிழர் பேரவை திடமாக நம்புகின்றது. எனவேää அர்த்தமுள்ள நல்லிணக்கத்திற்கான அத்திவாரத்தை இடுவதற்கு கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணையத்தின் ஆக்கபூர்வமான பரிந்துரைகள் ஒரு கால அட்டவணையின்படி நடைமுறைப் படுத்தப்படுவதையும் ஐநா வல்லுநர் குழுவின் அறிக்கையின் பரிந்துரைக்கேற்ப பொறுப்புக்கூறுதலானது ஒரு நம்பகமான அனைத்துலக நடைமுறையூடாக நடைமுறைப்படுத்தப்படுவதையும் உறுதிசெய்வதற்கு ஒரு சிறந்த கொள்கை அடிப்படையில் அனைத்துலகச் சமூகம் செயலாற்ற வேண்டுமென உலகத் தமிழர் பேரவை கேட்டுக் கொள்கின்றது.

இலங்கைத் தீவிலுள்ள அனைத்துத் தமிழ்பேசும் மக்களுக்கும் ஏனைய சமூகங்களுக்கும் நீதியான சமாதானத்தை உருவாக்குவதற்கும் போரினால் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைப்பதற்கும் நாம் அனைத்துலக அரசுகளுடனும் அரசசார்பற்ற அமைப்புகளுடனும் தொடர்ந்து உழைப்போம். இவை
பற்றியும் இலங்கையில் தமிழ் மக்களைப் பாதிக்கும் பல்வேறு விடயங்கள் பற்றியும் கலந்துரையாட சுவிஸ்தலாந்து நாட்டு வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகளையும் பல்வேறு ஆபிரிக்க நாடுகளின் ஐநா தூதுவர்களையும் உலகத் தமிழர் பேரவையின் மூத்த உறுப்பினர்கள் இந்த வாரம் ஜெனிவாவில் சந்தித்துள்ளனர்.  இலங்கைத் தீவில் அனைத்தச் சமூகங்களிடையேயும் நல்லிணக்கத்திற்கான ஒரு வழிமுறையை எப்படி முன்னெடுக்கலாம் என்பது பற்றி இச்சந்திப்புக்களின் போது கலந்துரையாடப்பட்டது. அடுத்த சில நாட்களில் வாக்குரிமையுள்ள பிற நாட்டுத் தூதுவர்களையும் பல்வேறு வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகளையும் உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர சந்தித்துப் பேசவுள்ளனர்.

பல பத்தாண்டு காலமாக நிலவிவருகின்ற முரண்பாட்டின் காரணமாக எழுந்துள்ள தமிழ் மக்களின் நியாயமான மனக்குறைகளைத் தீர்த்து நிலையான அரசியல் தீர்வொன்றை இலங்கை அரசானது எய்துவதற்கு அது அனைத்துலகச் சமூகத்தின் நிபுணத்துவத்தைப் பெறும்பொருட்டும் பரந்துபட்ட அனைத்துலகப் பங்களிக்பைப் பெறும்பொருட்டும் முக்கிய பிராந்திய அரசுகளின் பக்கபலத்துடன் அனைத்துலகச் சமூகம் எடுக்கும் முயற்சிகளை உலகத் தமிழர் பேரவை எப்பொழுதும் ஆதரித்து வந்துள்ளது. தொடர்ந்தும் ஆதரிக்கும்.

ஊடகத் தொடர்பு: சுரேன் சுரேந்திரன்
தோலைபேசி: 44 (0) 7958 590 196 அல்லது 1 917 512 2992
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.