தற்போது நடைபெறவுள்ள ஜனாதிபதித்தேர்தலில் வாக்களிக்க முன் ஒவ்வொருவரும் கேட்க வேண்டிய கேள்விகளும், அவற்றுக்கான ஒரே பதிலும்:

தற்போது நடைபெறவுள்ள ஜனாதிபதித்தேர்தலில் வாக்களிக்க முன் ஒவ்வொருவரும் கேட்க வேண்டிய கேள்விகளும், அவற்றுக்கான ஒரே பதிலும்:

1. 2015ற்குப் பின்னர் உருவான ஜனநாயகத்துக்கான வெளி தொடர்ந்தும் விரிவு படுத்தப்பட வேண்டுமா? இல்லை மீண்டும் அதற்கு முன்பு நிலவிய இருண்ட யுகத்துக்குள் செல்ல வேண்டுமா?

2. இறுதி யுத்தத்தில் மானுடப் படுகொலைகளைப்புரிந்த ஒருவர், எதற்கெடுத்தாலும் சிறுபான்மையினரைப் பயமுறுத்திப் பணிய வைக்கும் ஒருவர், இன்றும் இனவாதம் பேசும் இனவெறியர்களுடன் ஒன்றிணைந்து இனவாத அரசியலை முன்னெடுக்கும் ஒருவர் , தனது அதிகாரம் நிலவிய காலகட்டத்தில் வெள்ளைவான் கலாச்சாரத்தால் பல்லினச் சமூகங்கள் மீதும் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்ட ஒருவர், நாட்டின் அரசியல் சட்டங்களை மதிக்காத ஒருவர் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமா? இவ்விரண்டு கேள்விகளுமே பிரதானமானவை. இக்கேள்விகளுக்கு இல்லை என்பது பதிலாக இருப்பின் அதற்கான பதில் சஜித் பிரேமதாசாவுக்கு வாக்களியுங்கள் என்பதே. உண்மையில் ஜேவிபியின் அநுரா திசாநாயக்காவுக்கம், கோத்தபாயா ராஜபக்சவுக்குமிடையில்தான் போட்டி என்றால் நிச்சயம் அவருக்குத்தான் வாக்களிக்க வேண்டும். ஆனால் இங்கு கடுமையான போட்டி நிலவுவது சஜித் பிரேமதாசாவுக்கும், கோத்தபாயா ராஜபக்சவுக்குமிடையில். இந்நிலையில் சஜித் பிரேமதாசாவுக்கு வாக்களிப்பதே சிறந்தது.